எதைச் சொல்லித் தேற்றுவது!

புதிய தொழினுட்பங்கள் பற்றித் தேடிதேடித் வாசித்து தன்னை இற்றைபப்டுத்து வைப்பவராக இருந்த கருணா தொழினுட்பத்தின் உச்சபட்ச சாத்தியங்களையெல்லாம் நாம் பயன்படுத்தவேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துபவராக இருந்தார்.  தாய்வீடு நடத்திய அரங்கியல் விழாக்களில் அவர் தொடர்ந்து இதனைக் கையாண்டதுடன், தொழினுட்பக் கோளாறுகள் ஏற்படுத்தக் கூடிய நெருக்கடிகள் சில கசப்பான நினைவுகளைத் தந்தபோதும் தொழினுட்பக் கோளாறுகளைப் புரிந்துகொள்ளாமல் அவற்றுக்கு அவர் மீது குற்றப்பத்திரிகைகளைச் சிலர் பரப்புரைச் செய்தபோதும் கூட தொடர்ச்சியாக தொழினுட்பத்தை நம்புபவராகவே இருந்தார். 

பிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியரும் பல்வேறு பாடநூல்களை எழுதியவருமான பிரான்சிஸ் மாஸ்ரர் என்றழைக்கப்படுகின்ற மனுவேல்பிள்ளை பிரான்சிஸ் அவர்கள் நவம்பர் 18 அன்று தனது 91வது வயதில் இயற்கையெய்தியிருக்கின்றார்.  அவரது இழப்பு, பலவாண்டுகளுக்கு முன்னர் அவரிடம் கற்ற பல்வேறு மாணவர்களுக்கும் கூட ஏற்படுத்தியிருக்க்கின்ற  தாக்கத்தை அறியக்கூடியதாக இருக்கின்றது. பிரான்சிஸ் மாஸ்ரரிடம் நான் கல்விகற்கவில்லை; ஆனாலும் அவரிடமிருந்தும் கற்றுக்கொண்டேன். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் 2017 ஆம் ஆண்டிற்கான கலையரசி நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவம் செய்யப்பட்ட... Continue Reading →

புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற சங்கங்களும் அமைப்புக்களும் கவனத்திற் கொள்ளவேண்டியவை

- சில கருத்துப் பகிர்வுகள் கனடாவுக்கான ஈழத்தமிழர்களின் வருகை பற்றிய பதிவுகள் 1950களின் நடுப்பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெறுகின்றன.  ஆயினும் ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வானது சடுதியாக அதிகரித்த ஆண்டாக 1983 இனையும் அதற்குரிய பிரதான காரணியாக 1983 இல் பௌத்த சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் பின்புலத்துடன் இடம்பெற்ற ஆடிக்கலவரத்தையும் குறிப்பிடலாம்.  ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்ற நாடான கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற மாகாணங்களாக ஒன்ராரியோவும் கியூபெக்கும் இருக்கின்றன.  1983 வரை சில நூறுகளிலேயே தமிழர்களின் சனத்தொகை... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑