ஈழத்து இலக்கிய வளர்ச்சியும் பிரதேசங்களது சமகால இலக்கியப் பங்களிப்பும்

ஈழத்து இலக்கியம் பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் தொடர்ச்சியாக உரையாடுகின்றபோது ஒரு முக்கிய விடயத்தைக் கவனிக்கவேண்டி இருக்கின்றது.  குறிப்பாக ஈழத்து இலக்கியம் வளர்ச்சியை நோக்கிச் செல்வதான ஒரு கருதுகோள் அண்மைக்காலமாக முன்வைக்கப்படுகின்றபோது அதன் உண்மைத்தன்மை பற்றியும் குறுக்குவெட்டுத் தோற்றம் பற்றியும் அலசவேண்டியது அவசியமாகின்றது.  அப்படிப் பார்க்கின்றபோது அவற்றின் செல்நெறி, இலக்கியத் தரம், கலைத்துவம், அவற்றின் உள்ளடக்கம் தனித்துவம் என்பவற்றோடு சமகாலத்தில் இலக்கிய முயற்சிகளும் செயற்பாடுகளும் ஈழத்தின் வெவ்வேறு பிரதேசங்களிலும் எவ்வாறு பரவியும், வளர்ச்சியடைந்தும் இருக்கின்றன என்பதைக் குறித்துக்... Continue Reading →

கிரிக்கெட்டின் மூலம் “இலங்கையர்” ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட் 3)

1996 உலகக் கிண்ணம் தொடங்கியபோது இலங்கை அணி முதலாவது ஆட்டத்திலேயே புத்துணர்ச்சியுடனும் வித்தியாசமான வியூகங்களுடனும் விளையாடியது.  சிம்பாப்வே அணியுடனான முதலாவது போட்டியில் ஆரம்ப ஆட்டக்காரர்கள் இருவரும் பெரிதாக ஓட்டங்கள் எதையும் பெறாதபோதும் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு இந்தியாவுடன் இலங்கை மோதியது.  இந்தப் போட்டி இலங்கை அணி, அதற்கு முன்னர் இருந்த இலங்கை அணி அல்ல என்பதை பிரகடனம் செய்த போட்டி போல அமைந்தது என்றே சொல்லவேண்டும்.  அன்றைய காலத்தில் நல்ல ஓட்டங்கள்... Continue Reading →

அரசியல் கிரிக்கெட் பகுதி 1

அப்போது எனக்கு பத்து வயதிருக்கும்.  பாடசாலையில் மதிய இடைவேளையில் பக்கத்து வகுப்பு மாணவர்களுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவது வழக்கம்.  வழமையான போட்டிகளின்போது ஸ்கோர் பதிவுகளைச் செய்கின்ற மாணவன் வராத நாளொன்றில் என்னை ஸ்கோர் பண்ணுமாறு கேட்டார்கள்.  நானும் கொப்பி ஒன்றின் பின்பக்கத்தில், விளையாடுகின்ற ஒவ்வொருவரது பெயரையும் எழுதி பந்துவீச்சில் கொடுத்த ஓட்டங்கள், துடுப்பாட்ட வீரர்கள் எடுத்துக்கொண்ட ஓட்டங்கள் என்று பதிவுசெய்தேன்.  ஒவ்வொரு வீரரும் எப்படி ஆட்டமிழந்தார்கள், யாரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்கள் என்கிற விபரங்களை எல்லாம் குறித்தேன்.  ஒவ்வொரு... Continue Reading →

தி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும்

ஈழத்தவர்களின் வரலாறு பற்றியும் அவர்களின் அடையாளம் குறித்தும் பேசும்போது ஈழத்தவர்களின் பண்பாட்டு வரலாற்றைப் பற்றிய ஆவணப்படுத்தல்களைச் செய்வதும் ஆய்வுகளைச் செய்வதும் அவற்றை மக்களிடம் கொண்டுசேர்ப்பதும் முக்கியமானவை.  குறிப்பாக ஈழத்து இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் நாம் எமது தனித்துவத்தையும் தனியான மரபையும் பற்றித் தொடர்ந்து சொல்லவேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.  ஈழத்தவர்களுக்கென்று பதிப்புத்துறை வளர்ச்சியடையாமல் இருக்கின்ற சூழலில் சந்தைப்படுத்தலும் சவாலாகவே இருக்கின்றது.  இதனால் ஏற்கனவே இருக்கின்ற பதிப்பகங்களும் கூட பொருளாதார ரீதியில் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வனவாகவே இருக்கின்றன.  இவற்றினை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும்... Continue Reading →

ஞாயிறு இதழ்

"ஈழத்தின் தமிழ் வளர்ச்சிக்கு ஆறுமுக நாவலர் செய்த தொண்டை சிற்பத்துக்கு ஸ்ரீ நவரத்தினம் செய்துள்ளார்" என்று எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கியால் விதந்து கூறப்பட்டவர் கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்கள்.  1898 இல் இலங்கையின் வடபுலத்தில் உள்ள வண்ணார்பண்ணை என்கிற கிராமத்தில் பிறந்த இவர் இலங்கை, இந்தியாவின் கலைகள், சிற்பங்கள் குறித்தும் சமயவியலிலும் குறிப்பாக சைவசித்தாந்தத்திலும் முக்கியமான நூல்களை எழுதியவர்.  இவர் எழுதி 1941இல் வெளியான “தென்னிந்திய சிற்பக் கலைகள்” என்கிற நூலே தமிழில் சிற்பக்கலைகள் குறித்து வெளியான... Continue Reading →

கலாநிதி: ஈழத்து இதழ்கள்

“இலங்கையில் தமிழ்க் கலையாக்கங் கருதி வெளிவரும் பத்திரிகை கலாநிதி ஒன்றே” என்ற பிரகடனத்தைத் தாங்கிக்கொண்டு 1942ம் ஆண்டு சித்திரைமாதம் தொடக்கம் மும்மாத வெளியீடாக “ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் (The Jaffna Oriental Studies Society)” வெளியிட்ட இதழே கலாநிதி ஆகும்.  இதன் நிர்வாக ஆசிரியராக சுன்னாகத்தைச் சேர்ந்த தி. சதாசிவ ஐயரும், பத்திராசிரியர்களாக சு. நடேசபிள்ளை, சுவாமி ஞானப்பிரகாசர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, வே. நாகலிங்கம், வை. இராமசுவாமி சர்மா, தி. சதாசிவ ஐயர்... Continue Reading →

இளங்கதிர்

கல்விப்புலம் சார்ந்த வெளியீடுகளில் பல்கலைக்கழகங்களின் ஊடாக வெளிவருகின்ற இதழ்களுக்கு தனித்துவமாக வரவேற்பு எப்போதுமே உண்டு.  ஆய்விதழ்களாகவும், பருவ இதழ்களாகவும் பல்கலைக்கழகங்கள் செய்யும் வெளியீடுகள் பற்றிய பரிச்சயம் எம்மில் பலருக்கு நிச்சயமாக இருக்கும்.  இந்த வகையில் 1948 ஆம் ஆண்டு முதல் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் சங்கத்தால் வெளியிடப்படும் “இளங்கதிர்” என்கிற ஆண்டுமலர் “தமிழ் இலக்கியம் பண்பாடு ஆகியவற்றை வளர்ப்பதையும், தமிழறிவைப் பரப்புவதையும் கலை ஆக்கங்களை ஊக்குவிப்பதையும் பிரதான நோக்கமாகக்கொண்டு இச்சஞ்சிகை வெளியிடப்படுகின்றது” எனும் நோக்குடன் வெளியாகின்றது.  குறிப்பாக... Continue Reading →

கலைச்செல்வி: ஈழத்து இதழ்கள்

ஈழத்தில் இருந்து வெளிவந்த இலக்கிய இதழ்களின் முன்னோடிகளில் ஒன்றான கலைச்செல்வி 1958 ஓகஸ்ற் மாதம் முதல் 1966 வரை அண்மையில் காலமான சிற்பி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியானது.  மாத இதழ் என்றே அறிவிக்கப்பட்டாலும் பல்வேறு சவால்களின் காரணமாக அதனால் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் வெளிவரமுடியவில்லை.  சிலதடவைகள் மாதாந்தமும், சிலதடவைகள் இரு மாதங்களுக்கு ஒன்றாகவும் இதழ் வெளியாக இருப்பதை அறியமுடிகின்றது. கலைச்செல்வி இதழ் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் பற்றியும் சூழல் பற்றியும் தெளிவத்தை ஜோசப் அவர்கள் பின்வருமாறு பதிவுசெய்கின்றார்:... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑