ஒழுங்குபடுத்தலின் வன்முறை

இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆசிரியர்களுக்கு இருக்கின்ற அதிகாரமும், அதனை உடல் உளவன்முறையாக மாணவர்கள் மேல் திணிப்பதுமாக பல்வேறு அவதானங்களை நாம் கடந்தே வந்திருப்போம்.  மாணவர்களைத் துன்புறுத்துவதிலும் அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதையும் உளமார ஒருவித குரூர திருப்தியுடன் அனுபவித்துச் செய்யும் ஆசிரியர்கள் பலரை நான் ஈழத்தில் கல்விகற்ற நாட்களில் கண்டிருக்கின்றேன்.  பலதடவைகள் அவற்றைப் பதிவுசெய்யவிரும்பியிருந்தாலும் இப்போது அனேகம் ஓய்வுபெறும் வயதில் இருக்கக்கூடிய அந்த ஆசிரியர்கள் மீது ஒருவேளை இவை குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துவிடுமோ என்று தவிர்த்தே வந்தேன். ... Continue Reading →

புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற சங்கங்களும் அமைப்புக்களும் கவனத்திற் கொள்ளவேண்டியவை

- சில கருத்துப் பகிர்வுகள் கனடாவுக்கான ஈழத்தமிழர்களின் வருகை பற்றிய பதிவுகள் 1950களின் நடுப்பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெறுகின்றன.  ஆயினும் ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வானது சடுதியாக அதிகரித்த ஆண்டாக 1983 இனையும் அதற்குரிய பிரதான காரணியாக 1983 இல் பௌத்த சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் பின்புலத்துடன் இடம்பெற்ற ஆடிக்கலவரத்தையும் குறிப்பிடலாம்.  ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்ற நாடான கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற மாகாணங்களாக ஒன்ராரியோவும் கியூபெக்கும் இருக்கின்றன.  1983 வரை சில நூறுகளிலேயே தமிழர்களின் சனத்தொகை... Continue Reading →

புத்தாண்டு தினக் கொண்டாட்டங்கள் பற்றிய கட்டுரைக்கான எதிர்வினை

புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களின்போது (ஜனவரி 01, 2017 அன்று) பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் ரீதியான வன்முறைகளை முன்வைத்து அகில்குமார் என்பவர் எழுதிய காமத்தைக் கொண்டாடுதல் என்கிற பதிவினைப் படிக்கநேர்ந்தது.  இந்தப் பதிவு பலராலும் தொடர்ச்சியாக பகிரப்பட்டும் வந்ததை அவதானித்ததன் அடிப்படையில் அதுபற்றிய சிலவிடயங்களைப் பகிர்வது முக்கியமானது எனக் கருதுகின்றேன்.  பொதுவாகவே எமது சமூகத்தில் பெண்கள் பற்றியதாக இருக்கின்ற பொதுப்புத்தியின் அடிப்படையிலான எதிர்பார்ப்புகளும், ஆணாதிக்கப் போக்கும் பெண்ணை ஒரு பண்டமாக நினைக்கின்ற போக்கும் இது போன்ற நிகழ்வுகளின்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑