டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள் பற்றிய எனது உரையின் காணொலி

ஏப்ரல் 20, 2024 அன்று Zoom ஊடாக இலக்கியவெளி ஒருங்கிணைத்திருந்த இணையவெளி கலந்துரையாடல் 37இல் டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள் நூல் பற்றிய எனது உரையின் காணொலிவடிவம். https://www.youtube.com/embed/C98rbo4cog8?si=CtwbAx240Erir412 நன்றி - இலக்கியவெளி

கடுப்பூட்டும் கட்டுரைகள் – அருண்மொழிவர்மனின் ‘தாயகக்கனவுகள்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும் – வாசன்

அருண்மொழிவர்மனின் ‘தாயகக் கனவுகள்’ நூல் பார்வையிடக் கிடைத்தது. ‘பிரதிகளை முன் வைத்து ஓர்  உரையாடல்’  என்ற தலைப்புடன்   தனது வாசிப்பனுபவங்களையும் வாழ்பனுவங்களையும் திரட்டி அவர் எழுதிய 15 கட்டுரைகளின் தொகுப்பாக  நூல் வெளிவந்திருக்கின்றது. ஆழமானதும் விசாலமானதுமான அவரது வாசிப்பும், அந்த  எல்லைகளின் விஸ்தீரணமும்  வியக்க வைக்கின்றது. தமிழிலும் ஆங்கிலத்திலுமான அவரது வாசிப்புப் பயணமானது    மிலன் குந்த்ரோவின் ‘மாயமீட்சி’ இல் இருந்து தமிழினி, ஷோபா சக்தி, அகரமுதல்வன் போன்றவர்களின் படைப்பிலக்கியங்கள் ஊடாக பயணித்து,  கோர்டன் வைஸ் இன் ‘The... Continue Reading →

நூல்தேட்டப் பதிவு

நூல்தேட்டப் பதிவு 894.8(64)சமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் தாயகக் கனவுகள்: பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல். அருண்மொழிவர்மன் (இயற்பெயர்: சுதர்சன்ஸ்ரீநிவாசன்).கனடா: வடலி வெளியீடு, இல. 35, Long Meadow Road, Brampton, Ontario L6P 2B1;,1வது பதிப்பு, தை 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).xix, 122 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5x14 சமீ.,ISBN : 978-1-7779375-1-5. ஈழப்போராட்டம், அது குறித்த நூல்கள், அவற்றின் வாசிப்பு அனுபவங்கள் ஆகிய பரப்புக்களில்அருண்மொழிவர்மன் எழுதிய கட்டுரைகளின் தொகுதி... Continue Reading →

இன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை

தெணியான் ஈழத்தின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராவார்.  இவரது இயற்பெயர் கந்தையா நடேசு என்பதாகும். ஈழத்தில் வல்வெட்டித்துறையில் இருக்கின்ற பொலிகண்டி என்ற கிராமத்தில் “தெணி” என்ற இடத்தில் பிறந்தவர்.  அவரது வீட்டின் பெயரும் தெணியகம் என்பதாகும்.  இன்று ஈழத்தில் கிராமங்களுக்குப் பெயர்கள் இருப்பதுபோல முன்னர் ஒவ்வொரு காணிகளுக்கும் வீடுகளுக்கும் பெயர்கள் இருந்தன என்பதை அறிந்திருப்பீர்கள்.  அந்தப் பெயரினையே தனது புனைபெயராகவும் தெணியான் வரித்துகொண்டார்.  தெணியான் முற்போக்கு இயக்கத்துடன் சேர்த்து அடையாளம் காணப்படுபவர்.  சமூக மாற்றத்துக்கான ஒரு கருவியாகவும் தூண்டியாகவும்... Continue Reading →

ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினரால் பதிப்பிக்கப்பட்டு, சோமேசசுந்தரி கிருஷ்ணகுமாரை பதிப்பாசிரியராகக் கொண்டு ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை இந்துசாதனத்தில் எழுதிய எழுத்துகள் “உலகம் பலவிதம்” என்கிற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன.  கொழும்புவில் இடம்பெற்ற இந்த நூலின் வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து ஒக்ரோபர் மாதம் 22ம் திகதி ரொரன்றோவில் இந்நூலின் அறிமுக வெளியீட்டுவிழாவினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினரும் நூலக நிறுவனத்தினரும் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். புலம்பெயர் நாடுகளில் இயங்கிவருகின்ற பழைய மாணவர் சங்கங்கள்,... Continue Reading →

“தன்னெஞ்சறிவது பொய்யற்க” என்பது மனிதருக்கான இயல்பு! -அ. யேசுராசாவுடன் ஓர் உரையாடல்-

1946 டிசம்பர் 30 அன்று ஈழத்தின் வடகரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கின்ற குருநகர் என்கிற கடலோரக் கிராமத்தில் பிறந்த யேசுராசா அவர்கள் ஈழத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரும், இலக்கியச் செயற்பாட்டாளர்களில் ஒருவருமாவார்.  இவர் ஈழத்தில் இலக்கியத்தின் போக்குப் பற்றிய விவாதங்களும் உரையாடல்களும் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த எழுபதுகளில் இலக்கியத்தின் உள்ளடக்கம், அழகியல் தொடர்பாகவும் படைப்பாளிகளுக்கான அறம், இதர கலை வடிவங்களில் இருக்கவேண்டிய பரிச்சயம் என்பன குறித்தும் தொடர்ச்சியாகப் பேசியும், வலியுறுத்தியும் வருபவர்.  இன்றுவரை ஈழத்தின் கலை இலக்கிய... Continue Reading →

தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் : விமர்சன உரை

தமிழ்நதியின் பார்த்தீனியம் நூல்பற்றிய விமர்சன உரையை ஆற்றுமாறு நான் இங்கே கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றேன்.  கொடுக்கப்பட்ட கால இடைவெளிக்குள் சொல்லவேண்டிய விடயங்களைச் சொல்லிமுடிப்பது என்பது சவாலானது.  எனக்குத் தரப்பட்டிருக்கின்ற கால இடைவேளைக்குள் இந்நாவல் பற்றி ஆவணப்படுத்தல், வராலாற்றெழுதியல் என்பவற்றில் அக்கறைகொண்டிருப்பவன் என்கிற பின்னணியுடன் கூடிய எனது விமர்சனத்தை இங்கே பகிர இருக்கின்றேன்.  அந்த அளவில் இந்த “விமர்சனமானது” முழுமையான விமர்சனமாக அமையாமல் இருக்கக்கூடும் என்பதை முற்குறிப்பாக கூறிக்கொள்ளுகின்றேன். இந்நாவலானது ஈழப்போராட்டத்தில், பெருமளவு இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்துகொள்ளத் தொடங்கிய 80களின்... Continue Reading →

சட்டநாதனின் “மாற்றம்” சிறுகதைத் தொகுப்பு…

எழுபதுகளின் தொடக்கங்களில் எழுதத் தொடங்கிய படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்புகளை அண்மைக்காலமாக வாசித்துவருகின்றபோது இந்தக் காலகட்டத்தில் உள்ளடக்கம் சார்ந்தும், சொல்லப்படும் விதம் சார்ந்தும் முக்கியமானதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது என்று உறுதியாகக் கூறமுடிகின்றது.  அறுபதுகளில் ஈழத்தில் இடம்பெற்ற இலக்கியம் பற்றிய விவாதங்களையும் அந்நேரத்தில் முன்வைக்கப்பட்ட முற்போக்கு இலக்கியம் பற்றிய வரையறைகளையும் தொடர்ந்து கலையமைதிக்கு முக்கியத்துவம் கொடுத்து, உள்ளடக்கத்திலும் பல்வேறு புதிய கருக்களைப் படைப்புகளூடாகப் பேசிய காலப்பகுதியாக இது அமைகின்றது.  குறிப்பாக தனிமனிதர்களுக்கிடையிலான உறவுகள், அதனால் எழுகின்ற சிக்கல்கள், சமத்துவத்தையும், விடுதலையையும்... Continue Reading →

ஐ. சாந்தனின் “காலங்கள்”

எனது சிறிய வயதில் நான் நேரடியாகக் கண்டறிந்துகொண்ட முதல் எழுத்தாளர் என்று ஐ. சாந்தனையே சொல்ல முடியும்.  அவரது கிராமத்தையே நானும் சேர்ந்தவன் என்பது அதற்கான வாய்ப்பினையும் எனக்கு நல்கியது எனலாம்.  அப்போது நான் படித்துக்கொண்டிருந்த சிறுவர் பாடசாலையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் 1987ல் நடைபெற்றன.  அந்நிகழ்வுகளின் போதோ அல்லது அதனைத் தொடர்ந்து வந்த  ஒருசில ஆண்டுகளிலோ இடம்பெற்ற ஏதோ ஒரு பாடசாலை விழாவில் சாந்தன் அவர்களின் இயக்கத்தில் “சுப்பன்ணாவும் சோமன்ணாவும்” என்றொரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.  அந்த... Continue Reading →

தேவகாந்தனின் கனவுச்சிறை : அறிமுக உரை

ஈழத்துப் படைப்பாளிகளில் மிக நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் அரிது.  மிக அருமையான படைப்பிலக்கியங்களை ஆக்கிய பலர் இள வயதிலேயே மரணித்துள்ளார்கள்.  இன்னும் பலர் மிகச் சில படைப்புகளுடன் தம் எழுத்துகளை மட்டுப்படுத்திக்கொண்டுவிட்டார்கள்.  இந்த நிலையில், நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் எழுதிக்கொண்டிருக்கின்ற காத்திரமான படைப்பாளிகளுள் ஒருவர் தேவகாந்தன். “எங்கள் குடும்பம் அடிஅடியாக தமிழ்ப் புலவர் பரம்பரையில் வந்தது என்று என் தாயார் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்று மின்னம்பலத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தேவகாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார்.  தனது எழுத்துலகப் பிரவேசம் குறித்த... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑