ஓகஸ்ட் 2023 முகநூல் குறிப்புகள்

ஓகஸ்ட் 3, 2023 சீமானும் அவர் பேசும் விடயங்கள் சமூகநீதிக்கு எதிரான, மானுட விரோதமானவையாகவே பல ஆண்டுகளாக இருக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டபோது அதில் உள்ள பாசிசக் கருத்துகள் குறித்த உரையாடல்கள் நடந்தன. அவை கீற்று இணையத்தளத்தில் வெளியாகி இருந்தன. பின்னர் ஆழி பதிப்பகம் அவற்றைத் தொகுத்து “எங்கே செல்கிறது நாம் தமிழர் கட்சி” என்ற நூலாக வெளியிட்டும் இருந்தது. நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் ஒரு பாசிச அறிக்கை என்பதைக்... Continue Reading →

வயல் மாதா முகநூல் உரையாடலின் பதிவு

“வயல் மாதா” சிறுகதைத் தொகுப்பிற்கான எதிர்ப்புகள் குறித்து நான் பதிவுசெய்த கருத்து பின்வருமாறு; “வயல் மாதா” சிறுகதைத் தொகுப்பிற்கான எதிர்ப்புகளை எழுத்தாளரின் படைப்புச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல் என்கிற வகையிலேயே பலரும் அணுகியிருந்தார்கள்.  தற்போது, அதிலுள்ள வயல் மாதா கதை, அந்தக் கதையை எழுதிய எழுத்தாளரின் ஊரில் நடந்த விடயத்தை, அதில் சம்பந்தப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களை அடையாளங்காணக்கூடிய விதத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றது என்று தெரிகின்றது.  இந்த இடத்தில் எழுத்தாளரின் பொறுப்புணர்வு பற்றியே நாம் பேசவேண்டி இருக்கின்றது.  மானுட நேயத்தையும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான... Continue Reading →

உரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து

புரூஸ் மக்ஆர்தரினால் கொலை செய்யப்பட்ட ஸ்கந்தா நவரட்ணம், கிருஷ்ணகுமார் கனகரட்ணம் உள்ளிட்ட எட்டுப் பேர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிகள் சென்ற வாரம் ரொரன்றோவில் இரண்டு இடங்களில் நடைபெற்றிருந்தன.  இவற்றில் வெள்ளிக்கிழமை ஸ்கார்பறோ சிவிக் சென்ரரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன்.  இந்நிகழ்வினை தமிழ்த்தாய் மன்றம் நாடு கடந்த தமிழீழ அரசு கனடியத் தமிழர் தேசிய அவை தமிழர் வகை துறை வள நிலையம் (தேடகம்) Alliance for South Asian Aids Prevention கனடிய நயினாதீவு அபிவிருத்திச் சங்கம் கந்தமுருகேசனார்... Continue Reading →

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும்

மார்ச் 18 அன்று ரொரன்டோ. கனடாவில் இலங்கையில் பௌத்த சிங்கள இனவாதிகளினால் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இடம்பெற்ற கண்டனக் கூட்டத்தில் பல்லின மக்களும் உணர்வுத் தோழமையுடன் கலந்துகொண்டனர். 200ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தங்கள் தோழமையை வெளிப்படுத்திய இந்தக்கூட்டத்தில் ரேமன்ட் சா (ஒன்ராறியோ பாராளுமன்ற உறுப்பினர்), கரி ஆனந்தசங்கரி (கனடா பாராளுமன்ற உறுப்பினர்), ஜோன் (அனைத்துலக மன்னிப்பு சபை), ரகுமான் ஜான் (அரசியல் செயற்பாட்டாளர்), அஜித் ஜினதாச (அரசியல் செயற்பாட்டாளர்), மீரா பாரதி... Continue Reading →

கனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள்

குறிப்பு: ரொரன்றோவில் இருக்கின்ற ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயத்திற்கு சிற்பிகளாக அழைத்து வரப்பட்ட நால்வர் CBC க்கு கோயில் தொழிலாளர்களை நடத்தும் விதம் குறித்தும் அங்கு நடக்கின்ற அத்துமீறல்கள் குறித்தும் தெரிவித்த தகவல்களையும் அது தொடர்பான மேலதிக கருத்துகளையும் தொகுத்து பதிவேற்றியிருக்கின்றது.  இவற்றை இக்கோயில் நிர்வாகம் மறுத்திருந்தாலும், அந்தக் குற்றச்சாற்றுகளில் உண்மை இருக்கலாம் என்று கருதமுடிகின்றது.   CBC இல் வெளியான கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம்.  http://www.cbc.ca/news/canada/toronto/hindu-priest-abuse-allegations-1.4485863 கனடாவில் இருக்கின்ற கோயில்களில் நடக்கின்ற சுரண்டல்கள் குறித்தும் அவை எவ்விதம்... Continue Reading →

ஒழுங்குபடுத்தலின் வன்முறை

இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆசிரியர்களுக்கு இருக்கின்ற அதிகாரமும், அதனை உடல் உளவன்முறையாக மாணவர்கள் மேல் திணிப்பதுமாக பல்வேறு அவதானங்களை நாம் கடந்தே வந்திருப்போம்.  மாணவர்களைத் துன்புறுத்துவதிலும் அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதையும் உளமார ஒருவித குரூர திருப்தியுடன் அனுபவித்துச் செய்யும் ஆசிரியர்கள் பலரை நான் ஈழத்தில் கல்விகற்ற நாட்களில் கண்டிருக்கின்றேன்.  பலதடவைகள் அவற்றைப் பதிவுசெய்யவிரும்பியிருந்தாலும் இப்போது அனேகம் ஓய்வுபெறும் வயதில் இருக்கக்கூடிய அந்த ஆசிரியர்கள் மீது ஒருவேளை இவை குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துவிடுமோ என்று தவிர்த்தே வந்தேன். ... Continue Reading →

அன்றாட பால்வாதம் (Everyday Sexism) திட்டம் பற்றிய அறிமுகம்

பொதுவெளியில் இயங்கிவருகின்ற பெண்களுக்கு எதிரான வன்மமும் அவதூறுகளும் தாக்குதல்களும் அதிகரித்துச் செல்வதையும் அவை தொழினுட்பத்தின் சகல சாத்தியங்களையும் மிகத் தவறான நோக்குடன் பயன்படுத்துவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  அதேநேரம் இது நாளாந்த வாழ்விலும், வேலைத்தளம் மற்றும் அனைத்துப் பொதுவெளிகளிலும் பெண்கள் ஒட்டுமொத்தமாக எதிர்நோக்குகின்ற பிரச்சனையாகவும் இருக்கின்றது.  பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்ற இதுபோன்ற வன்முறைகளைப் போலவே, இந்த வன்முறைகளுக்கான காரணங்களை ஆராய்கின்றோம் என்பதன் பெயரில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றத்துக்காக சூழலை உருவாக்கினார்கள் என்பதும் குற்ற உணர்ச்சியை நோக்கி நகர்த்துவதும் அந்த... Continue Reading →

முப்பால் காணொலி

அண்மையில் அதிகம் பாதித்த புத்தகம் என்று அடிக்கடி எழுதுவது சலிப்பைத் தந்தாலும், அண்மைக்காலமாக வாசித்த அனேகம் புத்தகங்கள் மனதளவில் பாதிப்பைத் தந்தனவாகவே இருக்கின்றன. “லிவிங் ஸ்மைல்” வித்யாவின் “நான் வித்யா”வை வாசித்தது அரவாணிகள் பற்றி இன்னும் அதிகம் வாசிக்கவேண்டும், அவர்கள் வாழ்க்கையைப் பற்றி, அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் ரேவதி தொகுத்த “உணர்வும் உருவமும்”, மற்றும் மகாராசன் தொகுத்த “அரவாணிகள்; உடலியல் – உளவியல்... Continue Reading →

ஈழத்தவரின் குறும்படங்களின் தேவைகள் | எம்மீது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு

ஈழத்தமிழர்களாகிய நாம் இன்று நமக்கான பண்பாட்டு அடையாளங்களைத் தனித்துவமானதாகப் பேண வேண்டிய மிகக் கடுமையான சவாலை எதிர்நோக்கியவாறு உள்ளோம்.  30 ஆண்டுகளாகத் தொடர்ந்த போரிற்குப் பின்னரான இன்றைய காலங்களில் பண்பாட்டுப் படையெடுப்பானது மிக வேகமாக எம்மை நோக்கி முடுக்கிவிடப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வட இந்தியப் பாணிகளையும், பண்பாட்டு முறைகளையும் எமது சடங்குகளில் இணைத்துவிடும் போக்கு மிக வேகமாகப் பரவிவருகின்றது.  கடந்த 10 ஆண்டுகளில் கனடாவில் திருமண வீடு அல்லது திருமணச்... Continue Reading →

கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட்

கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டுக்களில் ஒன்று.  விளையாட்டுக்களில் பெரிதாக ஆர்வம் இல்லாதவனாகிய நான் கிரிக்கெட்டை மட்டும் வாழ்வு ஏற்படுத்திய எந்த சலிப்புகளின்போதும் கூட இடைவிடாது தொடர்ந்தே வந்தேன்.  யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து கொடிகாமத்தில் இருக்கின்றபோது இராணுவம் கொடிகாமம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ஏப்ரல் 19, 1996 அன்று கூட கடுமையாக ஷெல் தாக்குதல்கள் எமது வீட்டுக்கு ஒரளவு அருகாமையில் விழுந்துகொண்டிருந்த போதும் கடுமையான பயத்துடனும் கூட அன்று ஷார்ஜாவில் இடம்பெற்றுக்கொண்டிருந்த இந்தியாவிற்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இறுதிப்போட்டியின்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑