பா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து

அகதியாதல், போரின் அவலம், பின் போர் விளைவுகள் ஏற்படுத்தும் அஞர் என்பன எப்படி எல்லைகளும் கண்டங்களும் கடந்து மானுடத்தைப் பாதித்தன என்பதையும், இவற்றால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர்ந்தும் கூட தம் நினைவுகளையும் வடுக்களையும் எப்படி பொருட்களூடாகவும் ஞாபகச் சின்னங்களூடாகவும் பேணி அதை அஞரிலிருந்து கடப்பதற்கான ஒருவிதமான கருவிகளாகவும் கையாளுகின்றனர் என்பதை ஜயகரனின் கதைகளில் காணலாம். 

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும்

மார்ச் 18 அன்று ரொரன்டோ. கனடாவில் இலங்கையில் பௌத்த சிங்கள இனவாதிகளினால் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இடம்பெற்ற கண்டனக் கூட்டத்தில் பல்லின மக்களும் உணர்வுத் தோழமையுடன் கலந்துகொண்டனர். 200ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தங்கள் தோழமையை வெளிப்படுத்திய இந்தக்கூட்டத்தில் ரேமன்ட் சா (ஒன்ராறியோ பாராளுமன்ற உறுப்பினர்), கரி ஆனந்தசங்கரி (கனடா பாராளுமன்ற உறுப்பினர்), ஜோன் (அனைத்துலக மன்னிப்பு சபை), ரகுமான் ஜான் (அரசியல் செயற்பாட்டாளர்), அஜித் ஜினதாச (அரசியல் செயற்பாட்டாளர்), மீரா பாரதி... Continue Reading →

புஷ்பராணியின் “அகாலம்”

ஈழத்தில் மயிலிட்டி என்கிற சிறிய கிராமத்தில் 1950 ல் பிறந்த புஷ்பராணி ஈழவிதலைப் போராட்டம் ஆயுதப்  போராட்டமாக உருவெடுத்தபோது அதில் பங்கெடுத்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.  தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழீழ விடுதலை இயக்கத்திலும் அதன் ஆரம்ப காலம் தொட்டு பங்கெடுத்தவர்.  ஈழப்போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியபோது சிறை சென்ற முதல் பெண்போராளியும் ஆவார்.  அந்த வகையில் புஷ்பராணி எழுதிய அகாலம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக ஓரு பெண் சைக்கிள் ஓடுவதே அதிசயமாகப் பார்க்கப்பட்ட ஒரு காலத்தில்,... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑