அகதியாதல், போரின் அவலம், பின் போர் விளைவுகள் ஏற்படுத்தும் அஞர் என்பன எப்படி எல்லைகளும் கண்டங்களும் கடந்து மானுடத்தைப் பாதித்தன என்பதையும், இவற்றால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர்ந்தும் கூட தம் நினைவுகளையும் வடுக்களையும் எப்படி பொருட்களூடாகவும் ஞாபகச் சின்னங்களூடாகவும் பேணி அதை அஞரிலிருந்து கடப்பதற்கான ஒருவிதமான கருவிகளாகவும் கையாளுகின்றனர் என்பதை ஜயகரனின் கதைகளில் காணலாம்.
ஒழுங்குபடுத்தலின் வன்முறை
இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆசிரியர்களுக்கு இருக்கின்ற அதிகாரமும், அதனை உடல் உளவன்முறையாக மாணவர்கள் மேல் திணிப்பதுமாக பல்வேறு அவதானங்களை நாம் கடந்தே வந்திருப்போம். மாணவர்களைத் துன்புறுத்துவதிலும் அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதையும் உளமார ஒருவித குரூர திருப்தியுடன் அனுபவித்துச் செய்யும் ஆசிரியர்கள் பலரை நான் ஈழத்தில் கல்விகற்ற நாட்களில் கண்டிருக்கின்றேன். பலதடவைகள் அவற்றைப் பதிவுசெய்யவிரும்பியிருந்தாலும் இப்போது அனேகம் ஓய்வுபெறும் வயதில் இருக்கக்கூடிய அந்த ஆசிரியர்கள் மீது ஒருவேளை இவை குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துவிடுமோ என்று தவிர்த்தே வந்தேன். ... Continue Reading →