ஆவணப்படுத்தலும் தமிழர்களும்

எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று நகர்கின்ற தமிழ்த் திரைப்படப்பாடல்களின் காலகட்டங்களில் நான் இளையராஜாவின் பாடல்களை அதிகம் விரும்புபவன் என்றாலும் எம்.எஸ். விஸ்வநாதனின் பல பாடல்கள் எனது நிரந்தர விருப்பப் பாடல்களாக இருக்கின்றன.  ராஜநடை திரைப்படத்தில் வருகின்ற கஸ்தூரி மான்குட்டியாம் மற்றும் தென்றலுக்குத் தாய்வீடு பொதிகை அல்லவா என்கிற பாடல்களின் மெட்டுகள் எனக்கு எப்போதும் பிடித்தவை.  அவரது எத்தனையோ பிரபலமான மெட்டுகளையும் பாடல்களும் இருக்க எனக்கு இந்த இரண்டு பாடல்கள் பிடித்தமையானவையாக இருப்பதற்கு எனக்கேயான தனிப்பட்ட காரணங்கள்... Continue Reading →

கொன்சர்வேடிவ் கட்சியினரின் தேர்தல் விளம்பரமும் கனேடியத் தமிழரின் மெத்தனமும்

கனேடிய பாராளுமன்ற தேர்தல்கள் மீண்டும் ஒருமுறை (கடந்த 7 ஆண்டுகளில் கனடா சந்திக்கின்ற 4வது பாராளுமன்ற தேர்தல் இது.  இந்த விடயத்தில் இந்தியா கூட கனடாவின் தற்போதைய நிலையை எண்ணிப் பெருமைப்படலாம்).  கனேடிய பாராளுமன்றத் தேர்தல்கள் வருகின்றா மே மாதம் 2ம் திகதி நடைபெற உள்ளன.  இந்தச் சூழ்நிலையில் Conservative Party of Canada அண்மையில் வெளியிட்ட தனது தேர்தல் விளம்பர வீடியோவைப் பார்க்க நேர்ந்தது.  அந்த விளம்பரத்தின் ஒளித்துண்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் கனடாவிற்கு... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑