நட்பதிகாரம் 1

கண் தெரியாதவருக்கு வண்ணங்கள் எப்படி இருக்கும் என்று உங்களால் புரியவைக்க முடிந்தால், இந்த உலகத்தில் உங்களால் எதையும் புரியவைக்க முடியும்!-@nesamani89 இந்தக் ட்வீற்றர் பதிவினை 18-04-2016 குங்குமம் இதழில் காணக்கிடைத்தபோது பதின்மங்களின் நினைவொன்று மீண்டும் துளிர்விட்டது. நினைவுகள் என்னைத் தாலாட்டும்போதும் வாட்டும்போதும் வாழ்க்கையை வாழவேண்டும் என்று எண்ணும் தோறும் நான் பேச விழையும் நட்பான விசாகனுடன் இந்த ட்வீற்றரினைப் பார்த்தவுடன் தொலைபேசியில் அழைத்துப் பேசி இருந்தேன். அப்போது மீட்டிய நினைவுகளை இப்போதும் காவித்திரிந்து  அவனது ஆறாம் மாத... Continue Reading →

மானிட நேயம் மாண்புறப் பேசினார் எஸ்பொ!

எஸ்பொ விற்குப் பிந்திய இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவன் நான்.  வாசிப்பு மீது அக்கறையும் ஆர்வமும் கொண்ட எனது தலைமுறையைச் சேர்ந்த பலரையும்போலவே எஸ்பொ எனக்கும் பிடித்தமான ஒரு எழுத்தாளர்.  சிறுவயதில் இந்தியப் பத்திரிகைகளையே அதிகம் படித்து வளர்ந்தவன் என்பதால் எழுத்தாளன் என்கிற கர்வத்துடனனான விம்பங்களாக இருவர் என் மனதில் பதியவைக்கப்பட்டனர்.  ஒருவர் பாரதி.  அடுத்தவர் ஜெயகாந்தன்.  பின்னாளில் அந்த திருவுருக்கள் மனதில் தூர்ந்துபோயினர்.  ஆனால் மறக்கவே முடியாதவராக, பேராளுமையாக தாக்கம் செலுத்தியவர் எஸ்பொ அவர்கள்.  அவருடன் நெருக்கமான... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑