பால் – பாலியல், காமம் – காதல், பெண் – பெண்ணியம்: ஓர்ஆண்நிலைநோக்கு : உரையாடல் ஒன்றுக்கான குறிப்புகள்

குறிப்பு: மீராபாரதி எழுதிய பால் பாலியல், காமம் காதல், பெண் பெண்ணியம் – ஓர் ஆண் நிலை நோக்கு என்கிற நூலின் வெளியீட்டினை முன்வைத்து ரொரன்றோவில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும்படி நூலாசிரியர் மீராபாரதி கேட்டிருந்தார்..  இந்நூல் பேசுகின்ற விடயமும் அது பற்றி மீராபாரதி அவர்கள் கொண்டிருக்கின்ற அக்கறையும் முக்கியமானது.  அந்த வகையில் இந்நூலையும் அதில் உள்ள கட்டுரைகளையும் தன் அக்கறையின் பாற்பட்டும், தான் கொண்ட கருத்தியலின் மீதிருக்கும் நம்பிக்கையின் பாற்பட்டும் மீராபாரதி தன்னோடும் சமூகத்தோடும் தொடர்ச்சியாக நடத்திய... Continue Reading →

அன்றாட பால்வாதம் (Everyday Sexism) திட்டம் பற்றிய அறிமுகம்

பொதுவெளியில் இயங்கிவருகின்ற பெண்களுக்கு எதிரான வன்மமும் அவதூறுகளும் தாக்குதல்களும் அதிகரித்துச் செல்வதையும் அவை தொழினுட்பத்தின் சகல சாத்தியங்களையும் மிகத் தவறான நோக்குடன் பயன்படுத்துவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  அதேநேரம் இது நாளாந்த வாழ்விலும், வேலைத்தளம் மற்றும் அனைத்துப் பொதுவெளிகளிலும் பெண்கள் ஒட்டுமொத்தமாக எதிர்நோக்குகின்ற பிரச்சனையாகவும் இருக்கின்றது.  பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்ற இதுபோன்ற வன்முறைகளைப் போலவே, இந்த வன்முறைகளுக்கான காரணங்களை ஆராய்கின்றோம் என்பதன் பெயரில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றத்துக்காக சூழலை உருவாக்கினார்கள் என்பதும் குற்ற உணர்ச்சியை நோக்கி நகர்த்துவதும் அந்த... Continue Reading →

ஒழுக்க மதிப்பீடுகள் பெண்ணுக்கு மாத்திரம் இருக்கமுடியாது – குறமகள்

ஈழத்தின் ஆரம்பகால பெண் எழுத்தாளர்களில் ஒருவரும், சமூகச் செயற்பாட்டாளரும், நாடகம், பட்டிமன்றம், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டவருமான குறமகள் என்று பரவலாக அறியப்பட்ட வள்ளிநாயகி இராமலிங்கம் ஈழத்தின் வடக்கிலே இருக்கின்ற காங்கேசன்துறையில் ஜனவரி 9 ஆம் திகதி 1933 ஆம் ஆண்டில் பிறந்தவர்.  தனது பாடசாலைக்கல்வியைக் கல்வியை நடேஸ்வராக் கல்லூரியிலும், இளவாலை கொன்வென்டிலும் கற்ற இவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் பயிற்றப்பட்ட ஆசிரியராவார்.  இந்தியாவில் இருக்கின்ற உத்கல் என்கிற பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டதாரியாக... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑