யாழ்ப்பாணப் பெண்களின் கல்விப் பாரம்பரியம்: 18 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை

ஆய்வுக் கட்டுரை குறித்த அறிமுகம் பல்வேறு துறைகளில் ஆழங்காற்பட்ட ஆளுமைகொண்டவராக குறமகள் விளங்கியிருந்தாலும் கூட அவரது மிக முக்கியமான பணி “யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி – ஓர் ஆய்வு” என்கிற அவரது ஆய்வுநூலே.  தனது டிப்ளோமா படிப்பிற்காக எழுதிய “பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இலங்கையிற் பெண்கல்வி” என்கிற கட்டுரை பெற்ற வரவேற்பும் மதிப்பீடும், பெண்ணியம் தொடர்பாக அவருக்கு இயல்பாக இருந்த அக்கறையுடன் இணைந்து இந்த நூலை எழுதுவதற்காக முதலாவது விதையாக அமைந்தது என்று குறமகள் தனது முன்னுரையில் பதிவுசெய்கின்றார். ... Continue Reading →

ஆறுமுகநாவலர்: பதிப்புச் செயற்பாடா? மதச்செயற்பாடா?

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஒருங்கிணைத்த கருத்தரங்கில் ரா. கமலக்கண்ணன் பேசிய  ஆறுமுக நாவலரின் பதிப்புச் செயற்பாடுகள் என்கின்ற உரையை யூட்யூபில் பார்த்தேன்.  இதில்  ஆறுமுகநாவலர்  சைவத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக தமிழினை ஒரு கருவியாக பாவித்தார் என்று கூறி  ஆறுமுகநாவலர் தனது நிலைப்பாட்டில் இருந்து சரியாகத்தான் செயற்பட்டார் என்ற வாதத்தை முன்வைத்துப் பேசி இருக்கின்றார் கமலக்கண்ணன்.  இந்த உரையில் கிறிஸ்தவ மிஷனரிகள் இலங்கையில் மதப்பரப்பினைச் செய்யும் பொழுது  கல்விக்கூடங்களை நிறுவினார்கள், பதிப்புக்கூடங்களை நிறுவி நூல் பதிப்புகளைச்... Continue Reading →

குறமகள் என்றோர் ஆளுமை

சிறுபிராயம் ஈழத்தின் ஆரம்பகால பெண் எழுத்தாளர்களில் ஒருவரும், பெண்நிலைவாதிகளின் முன்னோடிகளில் ஒருவரும் என்ற வகையில் தவிர்க்கவே முடியாத ஆளுமைகளில் குறமகளும் ஒருவர் ஆவார்.  1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி ஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற காங்கேசன்துறை என்கிற கிராமத்தில் ”முக்கந்தர்” எம். ஏ. சின்னத்தம்பி என்பவருக்கும் செல்லமுத்து என்பவருக்கும் மூத்தமகளாகப் பிறந்த இவரது உண்மைப்பெயர் வள்ளிநாயகி என்பதாகும்.  அந்நாட்களில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள் இலங்கையில் பல பகுதிகளிலும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ... Continue Reading →

ஒழுக்க மதிப்பீடுகள் பெண்ணுக்கு மாத்திரம் இருக்கமுடியாது – குறமகள்

ஈழத்தின் ஆரம்பகால பெண் எழுத்தாளர்களில் ஒருவரும், சமூகச் செயற்பாட்டாளரும், நாடகம், பட்டிமன்றம், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டவருமான குறமகள் என்று பரவலாக அறியப்பட்ட வள்ளிநாயகி இராமலிங்கம் ஈழத்தின் வடக்கிலே இருக்கின்ற காங்கேசன்துறையில் ஜனவரி 9 ஆம் திகதி 1933 ஆம் ஆண்டில் பிறந்தவர்.  தனது பாடசாலைக்கல்வியைக் கல்வியை நடேஸ்வராக் கல்லூரியிலும், இளவாலை கொன்வென்டிலும் கற்ற இவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் பயிற்றப்பட்ட ஆசிரியராவார்.  இந்தியாவில் இருக்கின்ற உத்கல் என்கிற பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டதாரியாக... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑