நூல்களுக்கான அறிமுக உரை வழங்குவது என்பது எச்சரிக்கையுடன் கையாளவேண்டியியதாகவே இருந்துவருகின்றது. பொதுவாக அறிமுக உரைகள் நூல்களின் வெளியீட்டின்போதே வழங்கப்படுகின்றன. இதனால் அந்த நூலை அரங்கிலிருப்போரும் இதர வாசகர்களும் வாசித்திருக்கக் கூடிய சாத்தியம் மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது. இதனால் அறிமுக உரையாற்றுபவருக்கு நூலின் உள்ளடக்கம் குறித்த பின்னணி, நூலாசிரியர் குறித்த எழுத்து, நோக்கு போன்றவை குறித்ததானவையாகவும் நூல் குறித்த அறிமுகமாகவும் கூறுவதாகவே அறிமுக உரை அமைகின்றது. உண்மையில், நூல் வெளியீடு செய்யப்பட்ட சிலகாலங்களின் நூலினை வாசித்தவர்கள் நூல் குறித்த... Continue Reading →
ஒக்ரோபர் 2023 முகநூல் குறிப்புகள்
ஒக்ரோபர் 16, 2023 பலஸ்தீனத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கின்ற இனப்படுகொலை பற்றிய வரலாற்றுப் பின்னணியை சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்தச் சந்திப்பில் மீநிலங்கோ வெளிப்படுத்துகின்றார். பார்க்கவேண்டியதோர் காணொலி. பலஸ்தீனத்தில் இந்தச் சந்திப்பில் மீநிலங்கோ இரண்டு புத்தகங்களைப் பரிந்துரைத்திருப்பார். அதுபோல சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் பிரகாஷ் வெங்கடேசன் புத்தகமொன்றினை எனக்குப் பரிசாகக் கொடுத்தனுப்பியிருந்தார். மூன்று புத்தகங்களையும் ஆர்வமுள்ளவர்களுக்காக இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். https://www.youtube.com/watch?v=MxMOTkzgqX4&si=VaAeLUaym2NVtGNN&fbclid=IwAR1INog1zHZzruY98JrG_dFdSvromOAKGHr81Bexq9O34WucYHuPkzuDJwM ஒக்ரோபர் 21, 2023 தமிழ் இலக்கியத்தில் அறம் என்கிற தலைப்பிலான ஜெயமோகனின் உரை ஒன்று தமிழ் இலக்கியத்... Continue Reading →
அன்று வந்ததும் அதே நிலா; இன்று வந்ததும் அதே நிலா
தனது சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின் பின்னர் வழமையான தெனாவெட்டுடன் ஜெயமோகன் எழுதியிருக்கும் கட்டுரைகள் தொடர்பாக பி.கே. சிவகுமார் எழுதிய “ஓர் அமெரிக்கத் தமிழனின் சிந்தனைகள்” என்ற கட்டுரை திண்ணையில் வெளியாகி இருக்கின்றது. இந்தக் கட்டுரையை வாசித்த போது, 2011 இல் கனடாவிற்கு வந்திருந்த ஜெயமோகன் ரொரன்ரோவில் இடம்பெற்ற குறும்பட விழாவில் கலந்துகொண்ட பின்னர் அவரது உரையில் கனடாவுக்கு சிறுவயதில் வந்து இங்கேயே படித்த இளைஞர்களை நோக்கி நீங்கள் ஜானகிராமனை படித்திருக்கின்றீர்களா என்று கேட்டு தி. ஜானகிராமன் உட்படச்... Continue Reading →
திரைப்படங்களாகும் நாவல்கள்/இலக்கியங்கள்
நாவல்களையும், சிறுகதைகளையும் திரைப்படங்களாக்குவது பற்றி பல்வேறு இடங்களில் பேசப்பட்டிருக்கின்றது. தமிழ்த் திரைப்படங்களில் கதையம்சம் மிகவும் பலவீனமாக இருப்பது பற்றிப் பேசும்போதெல்லாம், நாவல்களும், இலக்கியங்களும் திரைப்படங்களாக்கப்படவேண்டும் என்பதுவும் பரவலாக முன்வைக்கப்படும் ஆலோசனை. ஆரம்ப காலங்களில் தனது நாவல்களான காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, பிரியா போன்றன திரைப்படங்களாக எடுக்கப்பட்ட போது அவை நாவல்களாக இருந்தபோது கொண்டிருந்த ஜீவனை இழந்து, மிகவும் அந்நியமாக வெளிவந்ததாக சுஜாதா பல்வேறு பத்திகளில் எழுதி இருக்கின்றார். பதின்மங்களில் பலருக்கும் பிடித்திருந்த அவரது பிரிவோம் சந்திப்போம் பின்னர்... Continue Reading →
இயல் விருது விழா – 2015
2014ஆம் ஆண்டிற்குரிய இயல் விருது மற்றும் கனேடிய இலக்கியத் தோட்டத்தின் விருதுகள் வழங்கும் நிகழ்வு, ஜூன் 13ஆம் திகதி ரொரன்றோ றடிசன் ஹோட்டலில் இடம்பெற்றது. 2014ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது. அத்துடன், புனைவுக்கான நாவல் பரிசு தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’, குணா. கவியழகனின் ‘நஞ்சுண்டகாடு’ ஆகிய இரு நாவல்களுக்கும், அபுனைவு நூலுக்கான பரிசு மு. நித்தியானந்தனின் ‘கூலித்தமிழ்’, ஜெயராணியின் ‘ஜாதியற்றவளின் குரல்’ ஆகிய இரு நூல்களுக்கும், கவிதைக்கான பரிசு கதிர்பாரதியின் ‘மெசியாவிற்கு மூன்று... Continue Reading →
எஸ்பொ பற்றி ஒரு நனவிடை
முற்குறிப்பு : சென்றவாரம் வழமைபோலவே கடைசிநேரத்தில் வாராந்த யாழ் உதயனுக்கான கட்டுரையை எழுதிக்கொண்டிருந்தபோது முகநூல் உரையாடல் மூலம் இடைவெட்டிய நண்பர் கற்சுறா “எஸ்பொ அதிக நாள் தாங்கமாட்டார் என்று செய்தி கிடைத்திருப்பதாகக் கூறினார். அதன்பிறகு அன்றைய கட்டுரையை மனமொருமித்து எழுதமுடியவில்லை. மனம்பாரமான வழமையான பொழுதுகளில் செய்வதுபோலவே மலேசியாவில் இருக்கின்ற நண்பன் விசாகனை அழைத்து சிறிதுநேரம் பேசிவிட்டு உறங்கிவிட்டேன். மறுநாள் வேலையில் விடுப்பு, தூங்கி எழுந்தால் தொலைபேசியில் குறுஞ்செய்தி காத்திருந்தது. தேவகாந்தன் அனுப்பியிருந்தார், “EsPo expired two hrs... Continue Reading →
ஜெயமோகனின் இணையத்தளத்தில் என் பெயர் இடம்பெற்ற “ஜென்ம சாபல்யத்துடன்”
-1- நேற்று ரொரன்ரோவில் நடைபெற்ற குறும்பட விழா பற்றி ஜெயமோகன் அவர்கள் சில கருத்துக்களை எழுதி இருந்தார். அதில் என் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெயமோகன் சொல்கிறார், "‘நீங்கள் தமிழ் சினிமா குப்பை என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் ஏன் அதில் பணியாற்றுகிறீர்கள்?’ என்று ஒரு கேள்வி. அருண்மொழி வர்மன் என்பவர் கேட்டது. ‘அய்யா நான் சொன்னது நேர் மாறு’ என்று சொன்னவற்றை அப்படியே திருப்பிச் சொன்னேன். உடனே அடுத்த கேள்வி ‘சரி, ஆனால் தமிழ் சினிமாவில் தரம் இல்லை... Continue Reading →
சாரு நிவேதிதா, ஜெயமோகன் மற்றும் ஊடகங்கள் இணைந்து வழங்கும் “நித்திய ஆனந்தம்”
நித்தியானந்தர் பற்றி எழுதாமல் வலைப்பதிவே எழுத முடியாது என்பது போல எல்லாப் பக்கம் இருந்தும் நித்தியானந்தர் பற்றிய கட்டுரைகளே குவிகின்றன. எரிகிற கொள்ளியில் பிடுங்கினவரை லாபம் என்பது போல சன்னும், நக்கீரனும் தொடக்கி வைத்த இந்த வியாபாரத்தில் இப்போது எல்லாத் தரப்பாருமே குதித்துள்ளனர். ஒரு கள்ளனைக் காட்டிக் கொடுக்கிறோம் என்ற பெயரில் பல கள்ளர்கள் கூட்டுக் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். நான் இப்படி எழுதுகிறேன் என்றவுடன் நான் ஏதோ நித்தியானந்தருக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைக்கவேண்டாம். நித்தியானந்தர் மட்டுமல்ல... Continue Reading →
ஜெயமோகன் – ஏழாம் உலகம் சொன்னவை
நவீன இலக்கியங்களுடனான தொடர்பு எனக்கு நெருக்கமாவதில் ஜெயமோகனின் பங்கு பெருமளவானது. ஆனால் அவரது புத்தகங்களை என்னால் பெருமளாவு அணுகமுடியவில்லை. முதலில் விஷ்ணுபுரம் வாசிக்க தொடங்கினேன். ஏனோ என்னால் அதில் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. இதே நிலை தான் சாருவின் ஸீரோ டிகிரிக்கும் ஏற்பட்டதால் அது நவீன இலக்கியங்களுடன் எனக்கு அந்த நேரத்தில் போதிய பயிற்சி இல்லாமல் இருந்தது காரணமாக இருக்கலாம். ஜெயமோகனின் எழுத்துக்களில் அவர் இலக்கியமுன்னோடிகள் வரிசை என்று எழுதிய சில நூல்களை வாசித்திருக்கின்றேன். சில முக்கியமான... Continue Reading →