லிடியன் நாதஸ்வரமும் அவர் சகோதரி அமிர்தவர்ஷினியும் இணைந்து திருக்குறளின் 1330 குறள்களையும், அவற்றிற்கு சக்திவாசன் எழுதியுள்ள பொருளையும் கிட்டத்தட்ட 1000 பாடகர்களின் குரல்களில் ”குறளிசைக்காவியம்” என்ற பெயரில் இசையமைத்துள்ளார்கள். இது பற்றிய பதிவுகளப் பார்த்தபோது எனக்குப்பிடித்த சில திருக்குறள்களை, அவை ஏற்கனவே அவர்களின் யூடியூப் தளத்தில் கிடைக்கின்றனவா என்பதை ஆர்வத்துடன் தேடிப்பார்த்தேன். அப்போது இந்தக் குறள் பற்றிய நினைவுகள் வந்தன. ”தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” என்கிற இந்தக் குறளுக்கான பொருளாக பரிமேலழகர்... Continue Reading →
லிட்டில் லைப்ரரி
எனது வாசிப்புப் பழக்கத்திற்கு உந்துதலாக இருந்தவர் எனது பெரியப்பா சிவதாசன் என்று பலமுறை பகர்ந்திருக்கின்றேன். எனது சிறுவயது முதல் அள்ளி அள்ளி புத்தகங்களை எமக்காக அவர் வாங்கி அனுப்பிக்கொண்டேயிருந்தார். அவர் கொழும்புவில் இருந்து அனுப்புகின்ற இதழ்கள் அப்போது நவாலியில் இருந்த எமக்கு தபாலில் வரும். பெருந்தொகையாக வருகின்ற இதழ்களை சாக்குகளில் கொண்டுவந்து எங்கள் வீட்டிற்கு விநியோகம் செய்வார்கள். வீட்டில் அம்மாவும் நிறைய வாசிக்கின்றவராக இருந்ததுவும் அப்பா துறைசார்ந்து தேர்ந்து வாசிக்கின்றவராகவும் அதேநேரத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஆதரிக்கின்றவராகவும் இருந்தார்... Continue Reading →