கொம்ரேட் காங்ஸ்டாவின் “Break The Bloody Silence”

கொம்ரேட் காங்ஸ்டாவின் யூட்யூப் பக்கத்தில் “Break The Bloody Silence” என்கிற தற்போதைய பலஸ்தீனப் பிரச்சனை குறித்த தமிழ் ரப் பாடலினையும், அதன் வெளியீட்டுவிழாவில் செல்வா, ராஜு முருகன், யுகபாரதி ஆகியோர் ஆற்றிய உரைகளையும் பார்த்தேன்.  சமூக நீதிக்கான அரசியலுக்கான தணிக்கைகளும், அந்த அரசியல் பேசுவதையும் பேசுவோரையும் மைய ஊடகங்கள் தவிர்த்தும் புறக்கணித்தும் வருகின்ற, வலதுசாரி அரசியலுக்கு எதிரான கருத்துகள் கடுமையாகத் தணிக்கை செய்யப்படுகின்ற சூழலில் இதுபோன்ற சுயாதீன பாடல்களின் வருகை முக்கியமானதும் ஆதரவளிக்கவேண்டியதுமாகும்.  இந்தப் பாடலுக்கான... Continue Reading →

செப்ரம்பர் 2023 முகநூல் குறிப்புகள்

செப்ரம்பர் 12, 2023 பாரதி இறப்புக் குறித்து… பாரதியார் செப்ரம்பர் 12, 1921 அன்று அதிகாலை 1 மணிக்கு இறந்தார், இதனை செப்ரம்பர் 11 என்று குறிப்பிட்டுவருகின்றார்கள். உண்மையில் பாரதியார் இறந்தது செப்ரம்பர் 12, 1921 என்பதே சரியானது.  அதுமட்டுமல்ல, பாரதியார் யானையால் தாக்கப்பட்டு அதிலிருந்து மீளமுடியாமல் விரைவில் இறந்தார் என்றும், அவர் யானையால் தாக்கப்பட்டது ஜூன் 1921 என்பதால் யானையால் தாக்கப்பட்டு 3 மாதங்களின் பின்னர் இறந்தார் என்றும் இருவிதக் கருத்துகளே தொடர்ந்தும் கூறப்பட்டு வந்தது. ... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑