கல்விப்புலம் சார்ந்த வெளியீடுகளில் பல்கலைக்கழகங்களின் ஊடாக வெளிவருகின்ற இதழ்களுக்கு தனித்துவமாக வரவேற்பு எப்போதுமே உண்டு. ஆய்விதழ்களாகவும், பருவ இதழ்களாகவும் பல்கலைக்கழகங்கள் செய்யும் வெளியீடுகள் பற்றிய பரிச்சயம் எம்மில் பலருக்கு நிச்சயமாக இருக்கும். இந்த வகையில் 1948 ஆம் ஆண்டு முதல் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் சங்கத்தால் வெளியிடப்படும் “இளங்கதிர்” என்கிற ஆண்டுமலர் “தமிழ் இலக்கியம் பண்பாடு ஆகியவற்றை வளர்ப்பதையும், தமிழறிவைப் பரப்புவதையும் கலை ஆக்கங்களை ஊக்குவிப்பதையும் பிரதான நோக்கமாகக்கொண்டு இச்சஞ்சிகை வெளியிடப்படுகின்றது” எனும் நோக்குடன் வெளியாகின்றது. குறிப்பாக... Continue Reading →
நியோகா : சில பகிர்தல்கள்
ஏப்ரல் இரண்டாம் திகதி கனடாவுக்கான நியோகா திரைப்படத்தின் முதலாவது திரையிடலில் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது. இத்திரைப்படம் கனடாவில் வாழும் எழுத்தாளரும் நாடகரும் குறும்பட இயக்குனருமான சுமதி பலராமின் முதலாவது முழுநீளத் திரைப்படமாகும். பெரும்பாலும் கனடாவிலேயே படப்பிடிப்பு நடந்த இத்திரைப்படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்களும் தொழினுட்பக் கலைஞர்களும் கனடாவைச் சேர்ந்தவர்கள். ஆயினும் இத்திரைப்படம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சர்வதேசதிரைப்பட விழாவிலும், இத்தாலி லுமினியர் திரைப்பட விழாவிலும், லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்ற திரைப்படவிழாவிலும், யகார்த்தாவில் இடம்பெற்ற பெண்கள் திரைப்பட விழாவிலும் ஆக வெவ்வேறு... Continue Reading →
கலைச்செல்வி: ஈழத்து இதழ்கள்
ஈழத்தில் இருந்து வெளிவந்த இலக்கிய இதழ்களின் முன்னோடிகளில் ஒன்றான கலைச்செல்வி 1958 ஓகஸ்ற் மாதம் முதல் 1966 வரை அண்மையில் காலமான சிற்பி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியானது. மாத இதழ் என்றே அறிவிக்கப்பட்டாலும் பல்வேறு சவால்களின் காரணமாக அதனால் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் வெளிவரமுடியவில்லை. சிலதடவைகள் மாதாந்தமும், சிலதடவைகள் இரு மாதங்களுக்கு ஒன்றாகவும் இதழ் வெளியாக இருப்பதை அறியமுடிகின்றது. கலைச்செல்வி இதழ் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் பற்றியும் சூழல் பற்றியும் தெளிவத்தை ஜோசப் அவர்கள் பின்வருமாறு பதிவுசெய்கின்றார்:... Continue Reading →
எனது நினைவில் செங்கை ஆழியான்
அண்மையில் காலமான செங்கை ஆழியான் எனது பதின்மங்களின் ஆரம்பங்களில் எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவராக இருந்தவர். செங்கை ஆழியானின் மரணத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட சில அஞ்சலிக் கட்டுரைகளும், அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற ஜேகே யின் வானொலிப் பகிர்வொன்றும் அவர் பற்றிய நினைவுகளை மீட்டிக்கொண்டேயிருந்தன. அவர் பற்றி எழுத நினைத்த சிறு நினைவுக்குறிப்பொன்றும் கூட நேரநெருக்கடி காரணமாக தவறவிடப்பட்டிருந்தது. தொன்னூறுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டை போர் முழுமையாகச் சூழ்ந்திருந்த காலப்பகுதியில் தென்னிந்திய சஞ்சிகைகளும், நூல்களும் கூட பெரும்பாலும் மாறிமாறி... Continue Reading →
அகரமுதல்வனின் “சாகாள்” : சில குறிப்புகள்
அகரமுதல்வனின் சாகாள் கதை மே 2009 இல் ஈழப்போராட்டம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட பின்னரான பெண்போராளிகளின் நிலையையும் அவர்கள் இராணுவத்தின் பிடியில் இருந்தபோது என்ன நடந்தது என்பதையும் சித்திகரிப்பதாக அமைகின்றது. அந்தக் கதையினை அவர் சிவகாமி என்கிற விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான பெண்தலைவர் ஒருவரை மையமாகக்கொண்டு கதை எழுதுகின்றார். இந்தக்கதை பேசுவது முழுக்க சிவகாமி பற்றியதே என்பதுடன் இது சிவகாமியைப் பற்றி எழுதுவதற்காகவே எழுதப்பட்ட கதை என்பதே உண்மை. இந்த சிவகாமி என்பவர் அண்மையில் காலமான தமிழினி அவர்களே என்பதை... Continue Reading →
ஒழுக்க மதிப்பீடுகள் பெண்ணுக்கு மாத்திரம் இருக்கமுடியாது – குறமகள்
ஈழத்தின் ஆரம்பகால பெண் எழுத்தாளர்களில் ஒருவரும், சமூகச் செயற்பாட்டாளரும், நாடகம், பட்டிமன்றம், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டவருமான குறமகள் என்று பரவலாக அறியப்பட்ட வள்ளிநாயகி இராமலிங்கம் ஈழத்தின் வடக்கிலே இருக்கின்ற காங்கேசன்துறையில் ஜனவரி 9 ஆம் திகதி 1933 ஆம் ஆண்டில் பிறந்தவர். தனது பாடசாலைக்கல்வியைக் கல்வியை நடேஸ்வராக் கல்லூரியிலும், இளவாலை கொன்வென்டிலும் கற்ற இவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் பயிற்றப்பட்ட ஆசிரியராவார். இந்தியாவில் இருக்கின்ற உத்கல் என்கிற பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டதாரியாக... Continue Reading →
லண்டன்காரர்: அறிமுக உரை
ஈழத்து இலக்கியம், ஈழத்தவர் அடையாளம், அவர்கள் வாழ்வியல் பற்றிய கேள்விகளும் உரையாடல்களும் பெருமளவில் அண்மைக்காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அண்மைக்காலமாக ஈழத்தவர்களது நாவல்களாகவும், குறுநாவல்களாகவும் பல்வேறு வெளியீடுகளையும் வாசிக்கக் கிடைத்திருக்கின்றது. இவற்றின் பொதுத்தன்மையை எடுத்துக்கொண்டால் இவற்றில் பெரும்பாலனவை ஈழப்போரின் பிந்தைய காலகட்டங்களில் வெளியானவை, ஓரளவு சுய அனுபவக் குறிப்புகளை உள்வாங்கியவை. அது தவறானதும் அல்ல. கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான அரசியல் குழப்பங்களும், இடது சாரிய புரட்சிகர நடவடிக்கைகளிற்கான முயற்சிகளும், சாதி ஒழிப்பு உள்ளிட்ட சமூகப் போராட்டங்களும் 30... Continue Reading →
மொழிபெயர்ப்பு : சவால்களும் சில பரிந்துரைகளும்
அண்மையில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது விளம்பரம் ஒன்றில் “துமித்தலையில் நீர் வடிகின்றதா?” என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறி, அவர்கள் எதனைக் குறிப்பிடுகின்றார்கள் என்பதை என்னால் அனுமானிக்கமுடிகின்றதா என்று கேட்டிருந்தார். சற்று யோசித்தேன். எதையும் ஊகிக்க முடியாமல் என்ன சொல்கின்றார்கள் என்று கேட்டேன். Shower Head என்பதற்கான தமிழ்ச் சொல்லாகவே அவர்கள் “துமித்தலை” என்பதைப் பயன்படுத்துகின்றார்கள் என்று குறிப்பிட்டார். Shower Head என்பதற்கான சரியான சொல் தமிழில் இல்லை என்ற அளவில் அதற்கான சொல்லாக்கம் செய்யப்படவேண்டியதன் அவசியம் முக்கியமானதே. அதேநேரம்... Continue Reading →
“தமிழரின் வாழ்வியற்கலையே சிலம்பம்!”
பழந்தமிழரின் ஆதிக்கலைகளில் முக்கியமானது சிலம்பம். சிலம்பல் என்கிற சொல்லுக்கு ஓசை என்பது பொருள். இன்றும் கூட வழக்கத்தில் தண்ணீருக்குள் கையையோ காலையோ வீசு சிறுவர்கள் ஓசை எழுப்புகின்றபோது “சிலம்பாதே” என்று பெரியோர்கள் கூறுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. சிலம்ப விளையாட்டில் கம்பினை வேகமாக வீசும்போது அது காற்றைக் கிழித்து ஓசை எழுப்புவதாலும், கம்புகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஓசை எழுப்புவதனாலும் அதற்கு சிலம்பம் என்கிற பெயர் ஏற்பட்டிருக்கலாம். மலைகளில் தொடர்ச்சியாக அருவிகளதும், பறவைகளதும் மிருகங்களதும் ஓசைகள் கேட்டுக்கொண்டிருப்பதால்... Continue Reading →
ஈழத்தவரின் குறும்படங்களின் தேவைகள் | எம்மீது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு
ஈழத்தமிழர்களாகிய நாம் இன்று நமக்கான பண்பாட்டு அடையாளங்களைத் தனித்துவமானதாகப் பேண வேண்டிய மிகக் கடுமையான சவாலை எதிர்நோக்கியவாறு உள்ளோம். 30 ஆண்டுகளாகத் தொடர்ந்த போரிற்குப் பின்னரான இன்றைய காலங்களில் பண்பாட்டுப் படையெடுப்பானது மிக வேகமாக எம்மை நோக்கி முடுக்கிவிடப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வட இந்தியப் பாணிகளையும், பண்பாட்டு முறைகளையும் எமது சடங்குகளில் இணைத்துவிடும் போக்கு மிக வேகமாகப் பரவிவருகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் கனடாவில் திருமண வீடு அல்லது திருமணச்... Continue Reading →