உரையாடல் என்பது எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்றாகவே இருந்திருக்கின்றது. வெவ்வேறு கருத்துகளை, பார்வைகளை, அரசியலைக் கொண்டோர் மேற்கொள்ளும் உரையாடல்களை ஆர்வத்துடன் தேடி வாசித்து வந்திருக்கின்றேன். இவ்வாறான உடையாடல்கள் மூலம் தெளிவும், நாம் கட்டமைத்து வைத்திருக்கின்ற கருத்துகளை, அரசியலை மீள்பார்வை, மீள் பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கின்றன. அண்மையில் பிளேட்டோவின் குடியரசை வாசிக்கத் தொடங்கியபோது உரையாடல் என்பது எத்தனை வீச்சான வடிவம் என்பதையும் அறிய முடிந்தது. வெறும் வாதத்துக்காக என்றில்லாமல் ஆழமாக தத்தம் நிலைகளை முன்வைத்துப் பேசுகின்ற விவாதங்களும்... Continue Reading →
The Cage-ஐ முன்வைத்து ஈழப் போர் – எனது வாசிப்புகளூடான ஒரு பார்வை
ஈழத்தில் நடந்தேறிய போரின் இறுதிக் கட்டத்தில் பாரிய அளவில் போர்க் குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் பரவலாக வெளிவந்துகொண்டிருக்கின்ற காலப்பகுதியில் வந்திருக்கின்ற மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று கோடன் வைஸ் (Gordon Weiss) எழுதி வெளிவந்திருக்கின்ற The Cage: The Fight For Srilanka and The Last Days of Tamil Tigers என்கிற நூலாகும். அவுஸ்திரேலியாவில் பிறந்த கோடன் வைஸ் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளராகச் செயலாற்றுவதுடன், கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஐக்கிய நாடுகள்... Continue Reading →
கோ மற்றும் பயணம் திரைப்படங்களை முன்வைத்துச் சில கருத்துக்கள்
-1-கோ திரைப்படத்தைச் சற்றுத் தாமதமாக நேற்றுத்தான் பார்த்தேன். சினிமா போன்ற வணிக ஊடகங்கள் எப்படி மக்கள் மத்தியில் விஷம் தோய்ந்த கருத்துக்களை விதைக்கின்றார்கள் என்பதற்கு நல்லதோர் உதாரணம் இந்தத் திரைப்படம். நக்சல்கள் பற்றி இவ்வளவு மோசமாக அண்மைக்காலத்தில் விபரித்த திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். படத்தில் தின அஞ்சல் என்கிற பத்திரிகையில் புகைப்படக் கலைஞராக / செய்தியாளனாக வரும் ஜீவா (படத்தில் இவர் கமராக்காரன் என்றே பிறரால் சுட்டிக் காட்டப்பட்டபோதும், சமயங்களில் செய்தி சேகரிக்கும் பணிகளையும்... Continue Reading →
புலம்பெயர் நாடுகளின் அரசியலும், புலம்பெயர் தமிழர்களும்: செய்யவேண்டியது என்ன
கனேடிய பாராளுமன்றத் தேர்தல்கள் நிறைவுபெற்று ஹார்பர் தலைமையின் கீழான வலதுசாரி பழமைவாதக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியக் கைப்பற்றி இருக்கின்றது. அதே நேரம் புதிய ஜன நாயகக் கட்சி (NDP) கனேடியப் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே முதன் முறையாக இரண்டாவது அதிக இருக்கைகளைக் கைப்பற்றி, உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சியாக தெரிவாகியுள்ளது. தொடர்ச்சியாக NDP கட்சியை அவதானித்துவந்ததன் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் எனது விருப்பத்துக்குரிய கட்சியாகவும் NDPயினரே இருந்துவந்துள்ளனர். இதுவரை காலமும் நிறைய இடங்களில் என்டிபி கட்சியனர் பற்றிக் கூறியபோதெல்லாம்,... Continue Reading →
கனேடியத் தேர்தல்களும் தமிழ்விண்ணின் தில்லாலங்கடிகளும் மற்றும் ராகவன் பரஞ்சோதி
கனேடியத் தேர்தல்கள் சூடுபிடித்திருக்கின்ற இந்த நிலையில் ஏற்கனவே ஒரு முறை தமிழ் விண் (tamilwin.com) இந்தத் தேர்தல்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் செய்து வருகின்ற தகிடுதித்தங்கள் பற்றி முன்பொருமுறை முகப் பகக்த்தில் நண்பர்களுடன் நடைபெற்ற உரையாடல் ஒன்றில் கவனப்படுத்தி இருந்தேன். இன்று காலை மீண்டும் ஒரு முறை தமிழ் விண் தன் சாமர்த்தியத்தை / தகிடுதித்தத்தைக் காட்டியுள்ளது. நேற்று மாலை கனேடியத் தமிழ் பேரவையும், சீன கனேடிய தேசிய கவுன்சிலும் அனைத்துக் கட்சி வேட்பாளர் விவாதம் ஒன்றுக்கு... Continue Reading →
கொன்சர்வேடிவ் கட்சியினரின் தேர்தல் விளம்பரமும் கனேடியத் தமிழரின் மெத்தனமும்
கனேடிய பாராளுமன்ற தேர்தல்கள் மீண்டும் ஒருமுறை (கடந்த 7 ஆண்டுகளில் கனடா சந்திக்கின்ற 4வது பாராளுமன்ற தேர்தல் இது. இந்த விடயத்தில் இந்தியா கூட கனடாவின் தற்போதைய நிலையை எண்ணிப் பெருமைப்படலாம்). கனேடிய பாராளுமன்றத் தேர்தல்கள் வருகின்றா மே மாதம் 2ம் திகதி நடைபெற உள்ளன. இந்தச் சூழ்நிலையில் Conservative Party of Canada அண்மையில் வெளியிட்ட தனது தேர்தல் விளம்பர வீடியோவைப் பார்க்க நேர்ந்தது. அந்த விளம்பரத்தின் ஒளித்துண்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் கனடாவிற்கு... Continue Reading →
ஷோபா சக்தி மீதான முகப்புத்தக விவாதங்கள் பற்றி சில பகிர்தல்கள்
ஷோபா சக்தியின் புனைவுகளும் அதில் அவர் செய்யும் எள்ளல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தொடர்ந்து குறிப்பிட்டே வந்துள்ளேன். ஆனால் அண்மைக்காலமாக ஷோபா சக்தி மீது செய்யப்படும் விமர்சனங்களை முன்வைத்து அவரது அனேகம் எழுத்துக்களை மீளப்படித்தபோதுதான் அவர் மீதும் எனக்கொரு அவநம்பிக்கை பிறந்தது. இதற்கு Dse கேட்டிருந்த நான்காவது கேள்விக்கான (http://djthamilan.blogspot.com/2011/02/blog-post_15.html) பதிலை அவர் கடந்து சென்ற விதம் ஒரு நல்ல உதாரணம். அது மட்டுமல்ல, ஹரிகரசர்மா தன் பெயரின் பின்னொட்டாக வந்திருந்த சர்மா என்ற சாதிய... Continue Reading →
“ராஜீவ் காந்தி படுகொலை – வெளிவராத மர்மங்கள்” புத்தகம்.
அவிழ்க்கப்படாத மர்மங்களுடன் இருக்கின்ற அரசியற் படுகொலைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில் ராஜீவ் காந்தி படுகொலையும் ஒன்று. அதுவும் ராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு இனத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதியதில் பெரும்பங்கு வகித்தது என்பதை நாம் கடந்த காலங்களில் கண்கூடாகவே கண்டிருக்கின்றோம். 1991ம் ஆண்டு மே 21ம் திகதி இரவு கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் கொலை வழக்கின் விசாரணைகள் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதுடன், 5 ஆண்டுகாலம் விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி மாற்றப்பட்டு புதிதாகப் பொறுப்பேற்ற நீதிபதி சில... Continue Reading →
இலங்கை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – சில குறிப்புகள்: அருண்மொழிவர்மன்
இலங்கையில் வருகின்ற வருட ஆரம்பத்தில் நடைபெற இருக்கின்ற சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றி முதன் முதலில் எஸ்.பொ. கீற்று இணையத் தளத்தில் தன் எதிர்ப்பினைப் பதிவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து அந்த மாநாட்டினை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு தமிழகத்துச் சஞ்சிகைகளில் கட்டுரைகளும் கருத்துரைகளும் வெளியாகி இருந்தன. எஸ்.பொவின் கட்டுரையை எனது முகப்புத்தகத்தில் தொடுப்புக் கொடுத்திருந்த நான் அது பற்றிய எனது நிலைப்பாட்டையும் கூடவே பதிவு செய்திருந்தேன். இந்த நிலையில் இந்த மாநாட்டைப் நிராகரிக்கின்றோம் என்ற பத்மநாப... Continue Reading →
இரண்டாவது எதிர்வினை – ஈழப்போராட்டம்
மருதன்,நீங்கள் எனது பதிவுக்கு ஆற்றிய எதிர்வினைக்கு மீண்டும் நான் பதில் அளித்திருந்தேன். அதற்கு மீண்டும் எதிர்வினையாற்றி இருக்கின்றீர்கள். தொடர்ச்சியாக விவாதம் நிகழ்வது வரவேற்கத்தக்கது என்றாலும், எந்த விதமான அர்த்தமும் இல்லாமல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. முதலில் எனது கட்டுரையில் நான் மாற்றுக் கருத்தாளர்கள் விடும் தவறுகள், ஊடகங்கள் ஈழப் பிரச்சனையை வணிக நோக்கில் அணுகுவது, மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை தொடர்ந்து வெளியிடுவது, புலி எதிர்ப்பையே மாற்றுக் கருத்து என்ற அர்த்தத்தில் ஏற்றுக்... Continue Reading →