”குற்ற ஆலம்” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து…

டாம் சிவதாசனை அவர்களைக் கிட்டத்தட்டப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக அறிவேன் என்றாலும் இடையில் சில மாதங்கள் அவருடன் சற்றுக் கூடுதலாகப் பழகுகின்ற வாய்ப்பு கிடைத்தது.  அவரது அலுவலகத்தில் நடைபெறும் சந்திப்புகளில் சிலகாலம் தொடர்ந்து சென்றும் வந்தேன்.  வெவ்வேறு விடயப் பரப்புகள் குறித்துத் தேடி ஆர்வமுடன் வாசிக்கின்றதோர் வாசகராகவும், அவ்வாறு வாசித்தவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து உரையாடி மகிழ்பவராகவும் அவரைக் கணித்திருக்கிறேன்.  கதையாக அவரது ஒரே ஒரு கதையை மட்டுமே முன்னர் வாசித்திருந்தது நினைவில் இருக்கின்றது எவ்விதமோ ஏனைய கதைகளைத்... Continue Reading →

“தலைமறைவு வாழ்க்கை: ஒரு நினைவுக் குறிப்பு”நூல் பற்றிய அறிமுகக் குறிப்புகள்

ரெஜி சிறிவர்த்தனவின் “Working Undergroud: The LSSP in Warime, A memoir of happenings and personalities என்கிற நூலின் தமிழாக்கமான “தலை மறைவு வாழ்க்கை ஒரு நினைவுக் குறிப்பு” என்ற நூல் சமூகம் இயல் பதிப்பகத்தின் வெளியீடாக எஸ் கே விக்னேஸ்வரன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. எஸ். கே. விக்னேஸ்வரன் அவர்களுடனான எனது அறிமுகம் கிட்டத்தட்ட 10 - 12 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் கனடாவுக்கு வந்து சேர்ந்த சில காலங்களின் பின்னர் ஆரம்பித்தது. ... Continue Reading →

யாழ்ப்பாணப் பெண்களின் கல்விப் பாரம்பரியம்: 18 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை

ஆய்வுக் கட்டுரை குறித்த அறிமுகம் பல்வேறு துறைகளில் ஆழங்காற்பட்ட ஆளுமைகொண்டவராக குறமகள் விளங்கியிருந்தாலும் கூட அவரது மிக முக்கியமான பணி “யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி – ஓர் ஆய்வு” என்கிற அவரது ஆய்வுநூலே.  தனது டிப்ளோமா படிப்பிற்காக எழுதிய “பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இலங்கையிற் பெண்கல்வி” என்கிற கட்டுரை பெற்ற வரவேற்பும் மதிப்பீடும், பெண்ணியம் தொடர்பாக அவருக்கு இயல்பாக இருந்த அக்கறையுடன் இணைந்து இந்த நூலை எழுதுவதற்காக முதலாவது விதையாக அமைந்தது என்று குறமகள் தனது முன்னுரையில் பதிவுசெய்கின்றார். ... Continue Reading →

தோழர் வைகறை ரவி

கனடாவில் இருந்து வெளிவந்த முக்கியமான பத்திரிகைகளில் ஒன்றான வைகறையின் ஆசிரியரும் மிக நீண்டகாலமாகவே சமூக, அரசியல் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தவரும், நண்பருமான ரவி என்கிற ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை ஜனவரி  25, 2025 அன்று இயற்கையெய்தி இருக்கின்றார்.   தனது சிறுவயது முதலே சமூக நலனில் அக்கறையும் அரசியல் உணர்வும் கொண்டு வளர்ந்த ரவி, எண்பதுகளில் ஈழத்தமிழரின் தேசிய இன விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருக்கொள்ளத் தொடங்கியபோது தானும் விடுதலை இயக்க அரசியலில் இணைந்துகொண்டார்.  தேசிய இன... Continue Reading →

றஷ்மியின் சற்றே பெரிய கதைகளின் புத்தகம் – வாசிப்பனுபவம்

ஓவியராகவும் நூல் வடிவமைப்பாளராகவும் கவிஞராகவும் நன்கறியப்பட்டவரான றஷ்மி நிறைய நூல்களின் அட்டைப்படங்களை தனித்துவமான அழகியலோடு உருவாக்கிக் கொடுத்திருப்பவர்.  பல எழுத்தாளர்கள், கலை இலக்கியச் செயற்பாடுகளின் கோட்டோவியங்களை அவ்வப்போது வரைந்தும் முகநூலில் பகிர்ந்துவருவார்.  பலரது புரொஃபைல் படங்களாக றஷ்மி வரைந்த கோட்டோவியங்களே இருப்பதை அவதானித்திருக்கின்றேன்.   இதுவரை ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.  காவு கொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள், ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு, ஈதேனின் பாம்புகள், ஈ தனது பெயரை மறந்துபோனது, அடைவுகாலத்தின் பாடல்கள் என்கிற இவரது... Continue Reading →

“எம்.ஏ. நுஃமானின் கவிதையும் அரசியலும்: ஈழத்து அனுபவம்” நூல் அறிமுகம்

கவிதையும் அரசியலும் என்கிற இந்த இந்த நூலின் தலைப்பே முக்கியமானதான ஒன்றாகப்படுகின்றது.  ஈழத்தில் தேசிய இனப்பிரச்சனை பற்றிய எனது வாசிப்புகளின்போது முஸ்லிம்களின் அடையாள உருவாக்கம் பற்றிய வாசிப்புகளில் நுஃமான் எழுதிய Sri Lankan Muslims - Ethnic Identity within Cultural Diversity, என்ற நூல் முக்கியமான ஒன்றாக அமைந்திருந்தது. முஸ்லிம்கள் தேசிய இனமாக உருப்பெற்ற வரலாற்றினையும், இனமுரண்பாட்டின் வரலாற்றறையும் அந்த நூலில் அவர் ஆய்வுபூர்வமாக முன்வைத்திருப்பார்.  ஒரு கவிஞராகவும், மொழியியலாளராகவும் அதுவரை நான் அறிந்திருந்த நுஃமானின்... Continue Reading →

“விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்புவது என்பது இராணுவக் குழுக்களை உருவாக்குவதல்ல…” எஸ்.கே. விக்னேஸ்வரனுடனான நேர்காணல்

யாழ்ப்பாணம் அம்பனைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.கே. விக்னேஸ்வரன் அரசியல், கலை இலக்கியச் செயற்பாடுகள், இதழியல் போன்ற பல்வேறு துறைகளில் ஆழங்காற்பட்டவர். சிறுவயதிலிருந்தே வாசிப்பில் ஆர்வம் காட்டிய எஸ்.கே. விக்னேஸ்வரன், வாசிப்பினூடாக இடதுசாரிக் கருத்தியல் நோக்கி நகர்கின்றார். இலங்கையில் இடதுசாரிக்கட்சிகள் செல்வாக்குடன் இருந்த எழுபதுகளில் மாணவராக அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கிய இவர், தேசிய இனப்பிரச்சனை பிரதான பிரச்சனையாக உருவெடுத்த காலப்பகுதியில் தேசிய இன விடுதலைப் போராட்டத்திலும் நேரடியாக ஈடுபட்டவர். ”ஆயுதப்போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டத்தை வரலாறாக்கிவிடத்... Continue Reading →

பாரதி: அறிவுத் தாகமா? சனாதனத் தாகமா?

“வ.ந. கிரிதரனின் கட்டுரைகள்” நூலின் வெளியீட்டில் நான் வாசித்த கட்டுரைக்கான எதிர்வினையாகச் சில கருத்துகளை வ.ந. கிரிதரன் பகிர்ந்துள்ளார்.  இவை பற்றிய தெளிவுபடுத்தல்ளைச் செய்யும் பொருட்டு இந்தப் பதிவை எழுதுகின்றேன்.  “வ.ந. கிரிதரனின் கட்டுரைகள்” நூலை முன்வைத்துச் சில குறிப்புகள் என்கிற இந்தக் கட்டுரையில் பின்வருமாறு நான் குறிப்பிட்டிருப்பேன்: “பாரதி ஒரு மார்க்சியவாதியா?” என்கிற 1983 இல் எழுதப்பட்ட கட்டுரையும் “பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு” என்கிற கட்டுரையும் பாரதியை மார்க்சிக் கோட்பாடுகளின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளமுனைகின்றன. ... Continue Reading →

பெரியார் தாத்தா நூல் அறிமுகம்

தமிழ் ஸ்டூடியோ அருணின் செயற்பாடுகளை மிக நீண்டகாலமாக ஆர்வத்துடன் பார்த்துவருகின்றேன்.  பேசாமொழி என்கிற இணைய இதழ், Pure Cinema என்கிற புத்தக விற்பனைக்கான இணையத்தளம், படச்சுருள் என்கிற திரைப்படம் குறித்த சிற்றிதழ், திரைப்பட திரையிடல்கள், திரைப்படம் குறித்தும், திரை ஆளுமைகளுடனும் உரையாடல்கள் என்று பல்வேறு வேலைத்திட்டங்களின் மூலமாக தனது நோக்குகளை நோக்கிய பயணத்தைத் தளர்வில்லாமல் முன்னெடுப்பவர் அவர்.  அந்தப் பயணத்தினதும் அவரது வேலைத் திட்டத்தினதும் தொடர்ச்சியாகவே அவர் எழுதி “மகிழ்” வெளியீடாக வந்துள்ள பெரியார் தாத்தா என்கிற... Continue Reading →

அன்று வந்ததும் அதே நிலா; இன்று வந்ததும் அதே நிலா

தனது சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின் பின்னர் வழமையான தெனாவெட்டுடன் ஜெயமோகன் எழுதியிருக்கும் கட்டுரைகள் தொடர்பாக பி.கே. சிவகுமார் எழுதிய “ஓர் அமெரிக்கத் தமிழனின் சிந்தனைகள்” என்ற கட்டுரை திண்ணையில் வெளியாகி இருக்கின்றது.  இந்தக் கட்டுரையை வாசித்த போது, 2011 இல் கனடாவிற்கு வந்திருந்த ஜெயமோகன் ரொரன்ரோவில் இடம்பெற்ற குறும்பட விழாவில் கலந்துகொண்ட பின்னர் அவரது உரையில் கனடாவுக்கு சிறுவயதில் வந்து இங்கேயே படித்த இளைஞர்களை நோக்கி நீங்கள் ஜானகிராமனை படித்திருக்கின்றீர்களா என்று கேட்டு தி. ஜானகிராமன் உட்படச்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑