நேற்று (பெப்ரவரி 8, 2025) இலண்டனில் பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டமும் தமிழ் மொழிச் செயற்பாட்டகமும் இணைந்து ஒருங்கிணைத்திருந்த “தமிழர் தலைவர் தந்தை பெரியார் மீது தொடர்ந்து வீசப்படும் அவதூறுகள்: விளக்கமும் உரையாடலும்” என்கிற நிகழ்வில் புகுந்து நிகழ்ச்சியைக் குழப்பும் நோக்குடன் செய்யப்பட்டது ரவுடியிசம். இது தன்னிச்சையாக நடந்தது அல்ல; தொடர்ச்சியாகச் செய்யப்பட்ட வெறுப்பூட்டும் பேச்சுகள், இனப்பெருமிதங்கள், சாகச வாதக் கதைகள், உருட்டல் திரித்தல் கதைகளினூடாக மூளைச் சலவை செய்யப்பட்ட ஒரு கூட்டத்தின் செயற்பாடு இப்படித்தான் அமையும். இந்தப்... Continue Reading →
தேரா மன்னா!
வெளிப்படையானதும் வினைத்திறனையும் கொண்டதாக ஓர் உரையாடல் அமையவேண்டுமானால் நாம் உரையாடும் எதிர்த்தரப்பினர் என்ன சொல்கின்றார்கள் என்பதைக் கூர்மையாக அவதானிப்பதும், அதில் ஏதும் குழப்பம் இருப்பின் தெளிவுபடுத்திக்கொள்வதும், தாம் இருக்கும் நிலைப்பாட்டுடன் எதிர்த்தரப்பினர் சொல்லும் கருத்துநிலை / எடுக்கின்ற நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுத் தமக்குள் கேள்வி எழுப்பிக் கொள்வதும், அவர்கள் என்ன அர்த்தத்தில் (context) சொல்கின்றார்கள், எந்த உரையாடலின் அல்லது கடந்தகால நிலைப்பாடுகளின் தொடர்ச்சியாக அதைச் செய்கின்றார்கள் என்பதையும் முன் முடிவுகளோ அல்லது திரிவுபடுத்தல்களோ இல்லாமல் புரிந்துகொள்வதும், குறைந்த பட்சம்... Continue Reading →
தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?
ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவான ஆரம்ப காலத்தில் அதற்குத் தமிழ்நாட்டில் இருந்து திராவிடக் கட்சிகளும் திராவிட இயக்கங்களும் பெரும் ஆதரவைக் கொடுத்துக்கொண்டிருந்தன. கிட்டத்தட்ட இதே சமகாலத்தில் எமர்ஜென்சி மூலம் தமிழ்நாட்டில் நடந்த ஒடுக்குமுறைகள், ஒன்றிய அரசால் எப்போதும் கலைக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய நிலையிலேயே மாநில அரசுகள் கட்சிகளும் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தி இருந்தது. அதுபோலவே ஆயுதப் போராட்டத்தின் மூலம் புரட்சியை நடத்தி சோசலிச அரசை இந்தியாவில் ஏற்படுத்தலாம் என்ற நோக்குடன் இருந்த நக்ஸல்பாரிகளின் தாக்கத்தினைப் பெற்றிருந்த... Continue Reading →
ஈழப்போராட்டம் குறித்த பிரச்சனைகள்
ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சனைகள், ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள், ஈழப்போராட்டத்தின் மூலோபாய தந்திரோபாய பிரச்சனைகள் என்கிற மூன்று நூல்களைக் கொண்ட நூற்தொகுதி ரகுமான் ஜான் அவர்கள் தொகுத்து, வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்த நூல்களுக்குள் நுழையமுன்னர் நூலின் தொகுப்பாசிரியர் ரகுமான் ஜான் குறித்து இந்நூலிலேயே தரப்பட்டுள்ள அறிமுகத்தைப் பார்ப்போம், ரகுமான் ஜான் தமிழீழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர், ஈழப்போராட்டத்தை அதன் குறுகிய எல்லைகளைக் கடந்து ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்பில் அரசியல் தலையீடு செய்யவேண்டும் என்பதில் தீவிரமாக... Continue Reading →
கடுப்பூட்டும் கட்டுரைகள் – அருண்மொழிவர்மனின் ‘தாயகக்கனவுகள்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும் – வாசன்
அருண்மொழிவர்மனின் ‘தாயகக் கனவுகள்’ நூல் பார்வையிடக் கிடைத்தது. ‘பிரதிகளை முன் வைத்து ஓர் உரையாடல்’ என்ற தலைப்புடன் தனது வாசிப்பனுபவங்களையும் வாழ்பனுவங்களையும் திரட்டி அவர் எழுதிய 15 கட்டுரைகளின் தொகுப்பாக நூல் வெளிவந்திருக்கின்றது. ஆழமானதும் விசாலமானதுமான அவரது வாசிப்பும், அந்த எல்லைகளின் விஸ்தீரணமும் வியக்க வைக்கின்றது. தமிழிலும் ஆங்கிலத்திலுமான அவரது வாசிப்புப் பயணமானது மிலன் குந்த்ரோவின் ‘மாயமீட்சி’ இல் இருந்து தமிழினி, ஷோபா சக்தி, அகரமுதல்வன் போன்றவர்களின் படைப்பிலக்கியங்கள் ஊடாக பயணித்து, கோர்டன் வைஸ் இன் ‘The... Continue Reading →
தாயகக் கனவுகள் நூல்வெளியீடு – தீபன் சிவபாலனின் தொகுப்பும் உரையும்
“தாயகக் கனவுகள்: பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல்” என்கிற தலைப்பில் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை, ஒக்ரோபர் 08, 2022 அன்று கனடாவின் ஸ்கார்பரோ நகரில் இடம் பெற்றது. நிகழ்வில் தீபன் சிவபாலன் ஆற்றிய உரை. https://www.youtube.com/embed/UQc-VZlR5IA நன்றி - வடலியின் யூட்யூப் தளம்
நூல்தேட்டப் பதிவு
நூல்தேட்டப் பதிவு 894.8(64)சமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் தாயகக் கனவுகள்: பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல். அருண்மொழிவர்மன் (இயற்பெயர்: சுதர்சன்ஸ்ரீநிவாசன்).கனடா: வடலி வெளியீடு, இல. 35, Long Meadow Road, Brampton, Ontario L6P 2B1;,1வது பதிப்பு, தை 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).xix, 122 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5x14 சமீ.,ISBN : 978-1-7779375-1-5. ஈழப்போராட்டம், அது குறித்த நூல்கள், அவற்றின் வாசிப்பு அனுபவங்கள் ஆகிய பரப்புக்களில்அருண்மொழிவர்மன் எழுதிய கட்டுரைகளின் தொகுதி... Continue Reading →
நந்திக்கடல் பேசுகிறது தொகுப்பை முன்வைத்து…
ஈழப்போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் அழிவுகள் குறித்தும் தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்தும், பின்போர்க்கால நிலைமைகள் குறித்ததுமான பல்வேறு தொகுப்புகளும் அறிக்கைகளும் பதிவுகளும் வெவ்வேறு தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ளன என்றாலும் இன்று வரை போரினால் நிகழ்த்தப்பட்ட அழிவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு முடியவில்லை என்பதே உண்மை. அதுபோல போர் நிறைவடைந்த பின்னரும் தொடருகின்ற பண்பாட்டு இனப்படுகொலையும் அதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அம்பலப்படுத்தப்படவில்லை. இவை குறித்த செய்திகளும் பதிவுகளும் பெரும்பாலும் தனித்த சம்பவங்களாகவே கடந்து செல்லப்படுகின்றன. இத்தகைய சூழலில் இந்த அழிவுகளை... Continue Reading →
பௌத்த குருமாரும் இலங்கை அரசியலும்
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் ஞானசார தேரர் தலைமையில் நீதிமன்றத் தீர்ப்பினைப் புறம் தள்ளி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்திருக்கின்ற நிகழ்வு இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் காட்டுகின்ற செல்வாக்கினையும் அதிகாரத்தையும் மீண்டும் வெளிப்படுத்திக் காட்டுவதுடன் அங்கே சிறுபான்மையினருக்கு எந்தவிதமான சம உரிமைகளும் இலகுவில் கிடைக்கப்போவதில்லை என்பதையும் காட்டுகின்றது சமவுரிமைக்கும் சமத்துவத்துக்கும் குரல் எழுப்புகின்றனவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தவிடயம் குறித்துப் போராடவேண்டும். செப்ரம்பர் 2019 தாய்வீடு பத்திரிகையில் க. சண்முகலிங்கம் எழுதிய பௌத்த குருமாரும் இலங்கை... Continue Reading →