பாரதியும் சரவணமுத்துப்பிள்ளையும்

“ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னைஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறைமேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்” என்று தொடங்குகின்ற பாரதி எழுதிய பாடல், நாட்டுப் பாட்டு என்ற பெயரில் 1919 இல் வெளியான அவரது கவிதை / பாடல் தொகுதியில் இடம்பெற்றிருந்தது.  இந்தப் பாடலில் பாரதி,  புத்தம் புதிய கலைகள் – பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்மெத்த வளருது மேற்கே – அந்தமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லைசொல்லவும் கூடுவ தில்லை –... Continue Reading →

பெரியாரின் எழுத்துகளும் காப்புரிமையும்

“பெரியாரின் எழுத்துக்களை ஏன் நாட்டுடைமை ஆக்கிவில்லை? அவற்றை ஏன் பதுக்கி வேண்டும்? உண்மைகள் வெளிவந்து விடும் என்பதாலா? “ என்ற கேள்வியை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார். சீமானின் திட்டமிட்ட அவதூறுகளில் ஒன்றினை அப்படியே நம்பிக்கொண்டே நண்பர் என்னிடம் கேள்வி கேட்கின்றார்; அவருக்கான தனிப்பதிலாக இல்லாமல் இந்தக் கேள்வி இருக்கக் கூடிய பலருக்குமான விளக்கமாக இதுபற்றிச் சற்றே பகிர்கின்றேன்.எவரேனும் ஒன்றைச் சொன்னால் அதை அப்படியே ஒப்பிக்காமல் சிறிதளவேனும் ஆராய்ந்து முடிவெடுத்தலே பகுத்தறிவு; அதன்படி சீமான் சொல்வதை அப்படியே... Continue Reading →

அவரை மட்டும் தான் தலைவராக ஏற்றுக்கொள்ளவேண்டுமா?

நேற்று (பெப்ரவரி 8, 2025) இலண்டனில் பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டமும் தமிழ் மொழிச் செயற்பாட்டகமும் இணைந்து ஒருங்கிணைத்திருந்த “தமிழர் தலைவர் தந்தை பெரியார் மீது தொடர்ந்து வீசப்படும் அவதூறுகள்: விளக்கமும் உரையாடலும்” என்கிற நிகழ்வில் புகுந்து நிகழ்ச்சியைக் குழப்பும் நோக்குடன் செய்யப்பட்டது ரவுடியிசம்.  இது தன்னிச்சையாக நடந்தது அல்ல; தொடர்ச்சியாகச் செய்யப்பட்ட வெறுப்பூட்டும் பேச்சுகள், இனப்பெருமிதங்கள், சாகச வாதக் கதைகள், உருட்டல் திரித்தல் கதைகளினூடாக மூளைச் சலவை செய்யப்பட்ட ஒரு கூட்டத்தின் செயற்பாடு இப்படித்தான் அமையும்.  இந்தப்... Continue Reading →

தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?

ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவான ஆரம்ப காலத்தில் அதற்குத் தமிழ்நாட்டில் இருந்து திராவிடக் கட்சிகளும் திராவிட இயக்கங்களும் பெரும் ஆதரவைக் கொடுத்துக்கொண்டிருந்தன.  கிட்டத்தட்ட இதே சமகாலத்தில் எமர்ஜென்சி மூலம் தமிழ்நாட்டில் நடந்த ஒடுக்குமுறைகள், ஒன்றிய அரசால் எப்போதும் கலைக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய நிலையிலேயே மாநில அரசுகள் கட்சிகளும் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தி இருந்தது.  அதுபோலவே ஆயுதப் போராட்டத்தின் மூலம் புரட்சியை நடத்தி சோசலிச அரசை இந்தியாவில் ஏற்படுத்தலாம் என்ற நோக்குடன் இருந்த நக்ஸல்பாரிகளின் தாக்கத்தினைப் பெற்றிருந்த... Continue Reading →

பெரியார் தாத்தா நூல் அறிமுகம்

தமிழ் ஸ்டூடியோ அருணின் செயற்பாடுகளை மிக நீண்டகாலமாக ஆர்வத்துடன் பார்த்துவருகின்றேன்.  பேசாமொழி என்கிற இணைய இதழ், Pure Cinema என்கிற புத்தக விற்பனைக்கான இணையத்தளம், படச்சுருள் என்கிற திரைப்படம் குறித்த சிற்றிதழ், திரைப்பட திரையிடல்கள், திரைப்படம் குறித்தும், திரை ஆளுமைகளுடனும் உரையாடல்கள் என்று பல்வேறு வேலைத்திட்டங்களின் மூலமாக தனது நோக்குகளை நோக்கிய பயணத்தைத் தளர்வில்லாமல் முன்னெடுப்பவர் அவர்.  அந்தப் பயணத்தினதும் அவரது வேலைத் திட்டத்தினதும் தொடர்ச்சியாகவே அவர் எழுதி “மகிழ்” வெளியீடாக வந்துள்ள பெரியார் தாத்தா என்கிற... Continue Reading →

பெரியாரின் திருக்குறள் குறித்த கருத்துகள் தொடர்பாக

பெரியாருடைய எழுத்துகள், பேச்சுகள், செயற்பாடுகள் சுயமரியாதை என்பதை நோக்கியதாகவே இருந்தன. அந்த வகையில் மொழி குறித்த பெரியாரின் கருத்துகள் பெருமிதத்தாலோ, வெறுப்பினாலோ எழுந்தவை அல்ல; அவை சுயமரியாதையை நோக்கிய அவரது பயணத்தில் குறித்த காலகட்டங்களில் மொழி, இலக்கியம், பழந்தமிழ் நூல்கள் என்பனவும் அவற்றை எழுதியோரும் தாங்கி நிற்கும் கருத்துகள் மக்களின் சுயமரியாதை உணர்வில் எவ்விதத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்கிற வகையிலான விமர்சனங்களே. தமிழ்மொழி மீது இந்தி, சமஸ்கிருதம் என்பன திணிக்கப்பட்டபோது மொழியை உரிமை என்கிற வகையில் பிரக்ஞைபூர்வமாக... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑