கலாநிதி: ஈழத்து இதழ்கள்

“இலங்கையில் தமிழ்க் கலையாக்கங் கருதி வெளிவரும் பத்திரிகை கலாநிதி ஒன்றே” என்ற பிரகடனத்தைத் தாங்கிக்கொண்டு 1942ம் ஆண்டு சித்திரைமாதம் தொடக்கம் மும்மாத வெளியீடாக “ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் (The Jaffna Oriental Studies Society)” வெளியிட்ட இதழே கலாநிதி ஆகும்.  இதன் நிர்வாக ஆசிரியராக சுன்னாகத்தைச் சேர்ந்த தி. சதாசிவ ஐயரும், பத்திராசிரியர்களாக சு. நடேசபிள்ளை, சுவாமி ஞானப்பிரகாசர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, வே. நாகலிங்கம், வை. இராமசுவாமி சர்மா, தி. சதாசிவ ஐயர்... Continue Reading →

”மரபுரிமையக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான் – பா.அகிலன்”

யாழ்ப்பாணம் அராலியைப் பிறப்பிடமாகக் கொண்ட பாக்கியநாதன் அகிலன் நல்லூரை நெடுங்காலமாக வாழிடமாகக் கொண்டிருக்கிறார். தனது ஆரம்பப் பாடசாலைக் கல்வியை வவுனியா சைவப்பிரகாச வித்தியாசாலை, நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் மிகக் குறுகிய காலம் பெற்ற பின்னர் யாழ்ப்பாணம் சென் ஜோன் பொஸ்கோவிலிருந்து பெற்றுக் கொண்டார்.  பின்னர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றில் (நுண்கலை) பட்டமும் குஜராத்திலுள்ள பரோடா எம்.எஸ் பல்கலைக்கழகத்தில் கலை விமர்சனத்தில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றார்.  தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்... Continue Reading →

“தன்னெஞ்சறிவது பொய்யற்க” என்பது மனிதருக்கான இயல்பு! -அ. யேசுராசாவுடன் ஓர் உரையாடல்-

1946 டிசம்பர் 30 அன்று ஈழத்தின் வடகரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கின்ற குருநகர் என்கிற கடலோரக் கிராமத்தில் பிறந்த யேசுராசா அவர்கள் ஈழத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரும், இலக்கியச் செயற்பாட்டாளர்களில் ஒருவருமாவார்.  இவர் ஈழத்தில் இலக்கியத்தின் போக்குப் பற்றிய விவாதங்களும் உரையாடல்களும் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த எழுபதுகளில் இலக்கியத்தின் உள்ளடக்கம், அழகியல் தொடர்பாகவும் படைப்பாளிகளுக்கான அறம், இதர கலை வடிவங்களில் இருக்கவேண்டிய பரிச்சயம் என்பன குறித்தும் தொடர்ச்சியாகப் பேசியும், வலியுறுத்தியும் வருபவர்.  இன்றுவரை ஈழத்தின் கலை இலக்கிய... Continue Reading →

ஓர் எழுதுவினைஞனின் டயறியை முன்வைத்து…

ஆனந்தமயிலின் எழுத்துகளையும், அவ்வாறு ஒரு எழுத்தாளர் இருந்தார் என்பதையும் மிக மிகத் தாமதமாக, அவர் இறந்தும் சில வருடங்களுக்குப் பின்பாகவே நான் அறிந்துகொண்டேன்.  சென்ற ஆண்டு யேசுராசா அவர்கள் எழுதிய நினைவுக்குறிப்பு ஒன்றினூடாகவே ஆனந்தமயில் பற்றிய அறிமுகம் எனக்குக் கிடைத்தது.  சில காலங்களின் பின்னர் “ஓர் எழுதுவினைஞனின் டயறி” என்கிற அவரது சிறுகதைக் தொகுதியும் கிடைத்தது.  படைப்பு என்பது ஓயாமல் பிரசவித்துக் கொண்டிருப்பது அல்ல, அது ஒரு எழுத்தாளரது இயல்பான மனவெழுச்சியாலும், பாதித்த, மனதிலும் நினைவுகளிலும் அசைபோட்ட... Continue Reading →

தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் : விமர்சன உரை

தமிழ்நதியின் பார்த்தீனியம் நூல்பற்றிய விமர்சன உரையை ஆற்றுமாறு நான் இங்கே கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றேன்.  கொடுக்கப்பட்ட கால இடைவெளிக்குள் சொல்லவேண்டிய விடயங்களைச் சொல்லிமுடிப்பது என்பது சவாலானது.  எனக்குத் தரப்பட்டிருக்கின்ற கால இடைவேளைக்குள் இந்நாவல் பற்றி ஆவணப்படுத்தல், வராலாற்றெழுதியல் என்பவற்றில் அக்கறைகொண்டிருப்பவன் என்கிற பின்னணியுடன் கூடிய எனது விமர்சனத்தை இங்கே பகிர இருக்கின்றேன்.  அந்த அளவில் இந்த “விமர்சனமானது” முழுமையான விமர்சனமாக அமையாமல் இருக்கக்கூடும் என்பதை முற்குறிப்பாக கூறிக்கொள்ளுகின்றேன். இந்நாவலானது ஈழப்போராட்டத்தில், பெருமளவு இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்துகொள்ளத் தொடங்கிய 80களின்... Continue Reading →

பிரதீஸ் என்றொரு நண்பன் அல்லது ஜூலை 09, 1995

அருண்மொழிவர்மன்'s avatarஅருண்மொழிவர்மன் பக்கங்கள்

downloadபிரதீஸுடன் நான் எப்போது நெருக்கமாக இருந்தேன் என்பது எனக்கு இன்றும் சரிவர தெரியவில்லை எனது முதல் நண்பன் யாரென்று இப்போது இணைய தளங்களில் கடவுச்சொல்லை ஞாபகப்படுத்தக் கேட்கும்போதெல்லாம் அவனது பேர் தான் ஞாபகம் வருகின்றது. ஆனால் எந்தக் காலப்பகுதியிலும் எனக்கு ஆக நெருக்கமான நண்பனாக அவன் இருந்ததில்லை.

அப்போது நாங்கள் நவாலியில் இருந்தோம். நவாலி மகாவித்தியாலயம் என்ற பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பு படித்துவந்தேன். புதிய இடம். புதிய சூழல். எவருடனும் பெரிதாக நெருங்கி பழக முடியவில்லை. கொழும்பில் இருந்துவிட்டு வந்திருந்ததால் எனது பேச்சுத் தமிழ் கூட அவர்கள் பேசிய தமிழுடன் வேறுபட்டு இருந்திருக்கலாம். இதனால் பள்ளிக்கூடம் போவதே ஏதோ சிறைக்கு போவதை போன்று இருந்தது. இந்த நாட்களில் தான் பிரதீஸ் அறிமுகம் ஆனான். ஏதோ அவனுடனும் துளசி(1) என்ற இன்னொருவனிடமும் தான் கொஞ்சம் பழக ஆரம்பித்தேன்.

எப்போதும் அந்த பள்ளிக்கூட நண்பர்களை விட்டு விலகியே இருந்த என்னை அவன் மெல்ல மெல்ல பூமிக்கு இழுத்துவந்தான். ஒரு மழை நாளில் பள்ளிக்கூட ஆசிரியர்கள் வராமல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது இரண்டு கற்களை எப்படி காந்தம் ஆக்குவது(2) என்ற ரகசியத்தை எனக்கு மட்டும் சொல்லி தந்தான். அந்த வயதிலேயே அவனுக்கு நிறைய விடயங்கள் தெரிந்திருந்தன. பூக்களை அவற்றின் காம்பை பிடித்து கிள்ளும்போது அவை விழும் விதத்தில் இருந்து ஆண் பூவா பெண் பூவா என்று கண்டறியும் வித்தையை(2) ஒரு முறை எனக்கு பள்ளிக்கூடம் விட்டு வரும்போது…

View original post 854 more words

கதாகாலம்: மகாபாரத மறுவாசிப்பு

  அரசர்களும் ராஜ்யங்களும் நிறைந்த அரச கதைகள் கேட்பதென்பது எல்லாருக்கும் சிறு வயதில் பிடித்தமானதொன்றே.  எனக்கும் என் பத்தாவது வயதில் ஏற்பட்டிருந்த இந்த மோகத்துக்கு அம்புலிமாமாவும் அதில் வெளியாகி வந்த அரசகதைகளும் தீனியிட்டு வளர்த்துவந்தன.   அதே நேரம் எமக்குப் பாடமாக இருந்த வரலாறும் அதனை சுவாரஸ்யமாக கற்றுத்தந்த ஆசிரியர்களான சண்முகராஜாவும், கோபியும் கூட வரலாற்றுப் புதினங்களை வாசிப்பதில் பெரும் ஆவலை தூண்டியிருந்தார்கள்.   இதன் தொடர்ச்சியாக அப்போது ஏதோ வெறி பிடித்ததுபோல பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், வேங்கையின் மைந்தன்,... Continue Reading →

இளங்கதிர்

கல்விப்புலம் சார்ந்த வெளியீடுகளில் பல்கலைக்கழகங்களின் ஊடாக வெளிவருகின்ற இதழ்களுக்கு தனித்துவமாக வரவேற்பு எப்போதுமே உண்டு.  ஆய்விதழ்களாகவும், பருவ இதழ்களாகவும் பல்கலைக்கழகங்கள் செய்யும் வெளியீடுகள் பற்றிய பரிச்சயம் எம்மில் பலருக்கு நிச்சயமாக இருக்கும்.  இந்த வகையில் 1948 ஆம் ஆண்டு முதல் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் சங்கத்தால் வெளியிடப்படும் “இளங்கதிர்” என்கிற ஆண்டுமலர் “தமிழ் இலக்கியம் பண்பாடு ஆகியவற்றை வளர்ப்பதையும், தமிழறிவைப் பரப்புவதையும் கலை ஆக்கங்களை ஊக்குவிப்பதையும் பிரதான நோக்கமாகக்கொண்டு இச்சஞ்சிகை வெளியிடப்படுகின்றது” எனும் நோக்குடன் வெளியாகின்றது.  குறிப்பாக... Continue Reading →

நியோகா : சில பகிர்தல்கள்

ஏப்ரல் இரண்டாம் திகதி கனடாவுக்கான நியோகா திரைப்படத்தின் முதலாவது திரையிடலில் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது.  இத்திரைப்படம் கனடாவில் வாழும் எழுத்தாளரும் நாடகரும் குறும்பட இயக்குனருமான சுமதி பலராமின் முதலாவது முழுநீளத் திரைப்படமாகும்.  பெரும்பாலும் கனடாவிலேயே படப்பிடிப்பு நடந்த இத்திரைப்படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்களும்  தொழினுட்பக் கலைஞர்களும் கனடாவைச் சேர்ந்தவர்கள்.  ஆயினும் இத்திரைப்படம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற  சர்வதேசதிரைப்பட விழாவிலும், இத்தாலி லுமினியர் திரைப்பட விழாவிலும், லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்ற திரைப்படவிழாவிலும், யகார்த்தாவில் இடம்பெற்ற பெண்கள் திரைப்பட விழாவிலும் ஆக வெவ்வேறு... Continue Reading →

கலைச்செல்வி: ஈழத்து இதழ்கள்

ஈழத்தில் இருந்து வெளிவந்த இலக்கிய இதழ்களின் முன்னோடிகளில் ஒன்றான கலைச்செல்வி 1958 ஓகஸ்ற் மாதம் முதல் 1966 வரை அண்மையில் காலமான சிற்பி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியானது.  மாத இதழ் என்றே அறிவிக்கப்பட்டாலும் பல்வேறு சவால்களின் காரணமாக அதனால் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் வெளிவரமுடியவில்லை.  சிலதடவைகள் மாதாந்தமும், சிலதடவைகள் இரு மாதங்களுக்கு ஒன்றாகவும் இதழ் வெளியாக இருப்பதை அறியமுடிகின்றது. கலைச்செல்வி இதழ் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் பற்றியும் சூழல் பற்றியும் தெளிவத்தை ஜோசப் அவர்கள் பின்வருமாறு பதிவுசெய்கின்றார்:... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑