பெரியண்ணன்கள் கவனம்!

அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியர் கண்ணன் பாமினி எழுத்துருக்களைப் பற்றிச் சில கருத்துகளைக் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து முகநூலில் தொடர்ச்சியான விவாதம் ஒன்று இடம்பெற்றது.  அந்தக் குறிப்பினைப் பார்த்தபோது அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை விட கண்ணனின் தொனியே மிகவும் மோசமானதாகவும், மேட்டிமைத்தனத்தைத் காட்டுவதாயும் அமைந்திருந்தது.  அதைத்தொடர்ந்து தனது சிறுகதைகளால் பரவலாக அறியப்பட்ட ரஞ்சகுமார் கண்ணனின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.  அவர் முன்வைத்த  முக்கிய வாதம், //எல்லோருக்கும் உடனே புரியக்கூடிய ஒரேயொரு... Continue Reading →

ஐ. சாந்தனின் “காலங்கள்”

எனது சிறிய வயதில் நான் நேரடியாகக் கண்டறிந்துகொண்ட முதல் எழுத்தாளர் என்று ஐ. சாந்தனையே சொல்ல முடியும்.  அவரது கிராமத்தையே நானும் சேர்ந்தவன் என்பது அதற்கான வாய்ப்பினையும் எனக்கு நல்கியது எனலாம்.  அப்போது நான் படித்துக்கொண்டிருந்த சிறுவர் பாடசாலையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் 1987ல் நடைபெற்றன.  அந்நிகழ்வுகளின் போதோ அல்லது அதனைத் தொடர்ந்து வந்த  ஒருசில ஆண்டுகளிலோ இடம்பெற்ற ஏதோ ஒரு பாடசாலை விழாவில் சாந்தன் அவர்களின் இயக்கத்தில் “சுப்பன்ணாவும் சோமன்ணாவும்” என்றொரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.  அந்த... Continue Reading →

மீசை என்பது வெறும் மயிர் | சிறுவர் நூல்கள் | “தழும்பு” குறும்படம்

மீசை என்பது வெறும் மயிர் புனைவு நூலொன்றின் புனைவு எதில் இருந்து தொடங்குகின்றது? என்பதைக் கேள்வியாக எழுப்பி, புனைவு நூலொன்றின் புனைவு அதன் அட்டையில் இருந்தே தொடங்குகின்றது என்று நந்தஜோதி பீம்தாஸ் கூறுவதாக “மீசை என்பது வெறும் மயிர்” என்கிற நூலில் வருகின்றது.  என்ன சுவாரசியம் என்றால் புனைவினை அதன் முன்னட்டையில் இருந்து பின்னட்டை வரை புனைவாகவே கொண்டமைந்த நூல் என்று மீசை என்பது வெறும் மயிரே அமைகின்றது. யார் இந்த நந்தஜோதி பீம்தாஸ்? நாடு திரும்பாத... Continue Reading →

தேவகாந்தனின் கனவுச்சிறை : அறிமுக உரை

ஈழத்துப் படைப்பாளிகளில் மிக நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் அரிது.  மிக அருமையான படைப்பிலக்கியங்களை ஆக்கிய பலர் இள வயதிலேயே மரணித்துள்ளார்கள்.  இன்னும் பலர் மிகச் சில படைப்புகளுடன் தம் எழுத்துகளை மட்டுப்படுத்திக்கொண்டுவிட்டார்கள்.  இந்த நிலையில், நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் எழுதிக்கொண்டிருக்கின்ற காத்திரமான படைப்பாளிகளுள் ஒருவர் தேவகாந்தன். “எங்கள் குடும்பம் அடிஅடியாக தமிழ்ப் புலவர் பரம்பரையில் வந்தது என்று என் தாயார் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்று மின்னம்பலத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தேவகாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார்.  தனது எழுத்துலகப் பிரவேசம் குறித்த... Continue Reading →

ரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ் | வேர்களைத்தேடி நாடகம்

ரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ் ரொரன்றோவில் இருந்து வசந்த காலத்துக்கும் கோடை காலத்துக்கும் சேர்த்து ஓர் இதழாகவும், இலையுதிர் காலத்துக்கும் பனிக்காலத்துக்கும் சேர்த்து ஓர் இதழாகவும் ஆண்டொன்றிற்கு இரண்டு இதழ்களாக சென்ற ஆண்டு முதல் The Humber Literary Review என்கிற இலக்கிய இதழ் ஒன்று வெளிவருகின்றது.  இதன் மூன்றாவது இதழில் The Pharaoh’s Refusal or, The Right To Eat Peas With Knife” என்கிற Alberto Manguel எழுதிய அருமையான கட்டுரை... Continue Reading →

நந்தினி சேவியரின் “அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்”

சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்கள் இணைந்து நந்தினி சேவியரின் “நெல்லிமரப் பள்ளிக்கூடம்” என்கிற சிறுகதைத் தொகுப்பினைப் பற்றிய அறிமுகம் ஒன்றினைச் செய்வதற்குத் திட்டமிட்டிருந்தனர்.  அதன் நிமித்தம் நெல்லிமரப் பள்ளிக்கூடத்தினை வாசித்ததன் ஊடாக நந்தினி சேவியரின் அறிமுகம் எனக்கு நிகழ்ந்தது. அதன் பின்னர் அண்மையில் விடியல் பதிப்பகம் வெளியிட்ட “நந்தினி சேவியர் படைப்புகள்” என்கிற தொகுப்பினையும் வாசிக்கக் கிடைத்தது.  ஈழத்துப் படைப்பாளி ஒருவரின் படைப்புகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்பது மகிழ்ச்சிகரமானது என்றாலும், அவர் எழுதிய 30 சிறுகதைகளில் 16 மட்டுமே... Continue Reading →

ஆவணப்படுத்தலும் தமிழர்களும்

எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று நகர்கின்ற தமிழ்த் திரைப்படப்பாடல்களின் காலகட்டங்களில் நான் இளையராஜாவின் பாடல்களை அதிகம் விரும்புபவன் என்றாலும் எம்.எஸ். விஸ்வநாதனின் பல பாடல்கள் எனது நிரந்தர விருப்பப் பாடல்களாக இருக்கின்றன.  ராஜநடை திரைப்படத்தில் வருகின்ற கஸ்தூரி மான்குட்டியாம் மற்றும் தென்றலுக்குத் தாய்வீடு பொதிகை அல்லவா என்கிற பாடல்களின் மெட்டுகள் எனக்கு எப்போதும் பிடித்தவை.  அவரது எத்தனையோ பிரபலமான மெட்டுகளையும் பாடல்களும் இருக்க எனக்கு இந்த இரண்டு பாடல்கள் பிடித்தமையானவையாக இருப்பதற்கு எனக்கேயான தனிப்பட்ட காரணங்கள்... Continue Reading →

அகாலம் கட்டுரை தொடர்பான புஷ்பராணியின் முகநூல் பதிவிற்கான பதில்

புஷ்பராணி அவர்களுக்கு, அகாலம் குறித்து நான் வாசித்த கட்டுரை தொடர்பான உங்களது கருத்துக்களைப் பகிர்ந்திருந்தீர்கள்.  நன்றி.  அவை தொடர்பாக எனது விளக்கங்கள். அகாலத்தை ஒரு அனுபவப்பிரதியாக எழுதி இருந்தீர்கள்.  எனவே நீங்கள் எவ்விதம் உணருகின்றீர்களோ அல்லது உங்கள் நிலைப்பாடு எவ்விதம் இருக்கின்றதோ அதுவே உங்கள் பிரதியில் பதிவாகும்.  அதே நேரம் அகாலத்தை மட்டுமல்லாமல் ஈழப்போராட்டம் தொடர்பான அனைத்துப் பிரதிகளையும் ஆர்வமுடம் படிப்பதும், அவை பற்றிய உரையாடல்களில் ஈடுபடுவதும் ஒருவிதத்தில் ஈழப்போராட்டம் தொடர்பான case study ஒன்றுக்கான எனது... Continue Reading →

ஒருநாள் : சாத்தனூர் என்னும் “கனவுக் கிராமம்”

ஒரு மாற்றத்திற்காக தொடர்ச்சியாக சில புனைவுகளைப் படித்துக்கொண்டிருப்பதுவும் நல்லதோர் அனுபவமாகவே இருக்கின்றது.  அந்த வகையில் க.நா.சு எழுதிய சர்மாவின் உயில், ஒருநாள் ஆகிய இரண்டு புனைவுகளையும் அடுத்தடுத்து வாசிக்கமுடிந்தது. “ஒருநாள்”, சாத்தனூர் என்கிற கற்பனை கிராமத்தில் மேஜர் மூர்த்தி கழிக்கின்ற ஒருநாளில் நிகழ்கின்ற நிகழ்வுகளையும், அவனது நினைவு மீட்டல்களையும், அவன் நிகழ்த்துகின்ற உரையாடல்களையும், அவை ஏற்படுத்துகின்ற சிந்தனைகளையும் கொண்டு எழுதப்பட்டது.  அமைப்பு ரீதியில் இதனை குறுநாவல் என்று சொல்லலாம் என்று நினைக்கின்றேன். கிருஷ்ணமூர்த்தி என்கிற மூர்த்தி பெற்றோரை... Continue Reading →

மரண தண்டனையும் ஒரு கொலையே! – சமஸின் கட்டுரைக்கான எதிர்வினை

அண்மைக்காலமாக பலராலும் முக்கியமான சமகாலத்தியக் கட்டுரையாளாராகக் குறிப்பிடப்படுபவர் சமஸ்.  அவ்வாறு குறிப்பிடப்படத் தொடங்கிய காலம் முதற்கொண்டே அவரது கட்டுரைகளைப் படித்துவருகின்றேன்.  சமஸ் பற்றிய எனது கணிப்பு என்னவென்றால் அவர் மைய நீரோட்ட / வெகுஜன கருத்துகளை முற்போக்குத் தோரணையுடன் வெளியிடுபவர் என்பதே!  இந்தப் போக்கினைப் பின்பற்றுபவர்களும் அவர்களின் செயற்பாடுகளின் விளைவுகளும் உண்மையான சமூக அக்கறையுடனும் முற்போக்குச் சிந்தனைகளுடனும் இயங்குபவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக ஆக்க் கூடியன.  குறிப்பாக, தமிழ் இந்து என்கிற பெரியதோர் வாசகர் வட்டத்துடன் இயங்குகின்ற பத்திரிகையில்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑