ஈழத்தவரின் குறும்படங்களின் தேவைகள் | எம்மீது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு

ஈழத்தமிழர்களாகிய நாம் இன்று நமக்கான பண்பாட்டு அடையாளங்களைத் தனித்துவமானதாகப் பேண வேண்டிய மிகக் கடுமையான சவாலை எதிர்நோக்கியவாறு உள்ளோம்.  30 ஆண்டுகளாகத் தொடர்ந்த போரிற்குப் பின்னரான இன்றைய காலங்களில் பண்பாட்டுப் படையெடுப்பானது மிக வேகமாக எம்மை நோக்கி முடுக்கிவிடப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வட இந்தியப் பாணிகளையும், பண்பாட்டு முறைகளையும் எமது சடங்குகளில் இணைத்துவிடும் போக்கு மிக வேகமாகப் பரவிவருகின்றது.  கடந்த 10 ஆண்டுகளில் கனடாவில் திருமண வீடு அல்லது திருமணச்... Continue Reading →

கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட்

கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டுக்களில் ஒன்று.  விளையாட்டுக்களில் பெரிதாக ஆர்வம் இல்லாதவனாகிய நான் கிரிக்கெட்டை மட்டும் வாழ்வு ஏற்படுத்திய எந்த சலிப்புகளின்போதும் கூட இடைவிடாது தொடர்ந்தே வந்தேன்.  யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து கொடிகாமத்தில் இருக்கின்றபோது இராணுவம் கொடிகாமம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ஏப்ரல் 19, 1996 அன்று கூட கடுமையாக ஷெல் தாக்குதல்கள் எமது வீட்டுக்கு ஒரளவு அருகாமையில் விழுந்துகொண்டிருந்த போதும் கடுமையான பயத்துடனும் கூட அன்று ஷார்ஜாவில் இடம்பெற்றுக்கொண்டிருந்த இந்தியாவிற்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இறுதிப்போட்டியின்... Continue Reading →

“புறநானூறு மீது தமிழ்ப்பண்பாடு வைத்த விமர்சனமே திருக்குறள் என்பார் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை”

ஈழத்தமிழர்களின் மிக முக்கியமான புலமையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை தமிழ் மொழியிலும், சாசனவியலிலும், மதங்கள் பற்றியும் ஆழ்ந்த புலமைகொண்டிருந்தார்.  தனது 28வது வயதிலேயே இரண்டு கலாநிதிப் பட்டங்களைப் பெற்றிருந்த அவர், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் மாணவர்.  வடமராட்சியில் இருக்கின்ற புலோலியில் 1936ல் பிறந்தவர்.  தனது ஆரம்பக் கல்வியை புலோலித் தமிழ்ப்பாடசாலையிலும், பின்னர் ஹாட்லிக் கல்லூரியிலும் கற்றவர்.  பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் கடமையாற்றியவர்.  பின்னர் 1984 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத்... Continue Reading →

ஜெயகாந்தன் காலத்திற்குப் பின்னர் ஜெயகாந்தன் பற்றிய பார்வை

ஜெயகாந்தன் தமிழ் எழுத்தாளர்களில் பிற எவரும் பெற்றிராத அளவுக்கு பிரபல்யத்தையும், பெரும் ரசிகர் கூட்டத்தினையும் பெற்றிருந்தவர்.  படைப்பிலக்கியம் சார்ந்து மட்டுமல்லாமல் அரசியல், திரைப்படம் என்று பல்வேறு துறைகளிலும் தீவிரமாக ஈடுபட்டவர்.  வரலாற்றில் ஜெயகாந்தன் என்கிற பொருளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இன்றைய நிகழ்வில் பேசப்படுகின்ற விடயங்களூடாகவும் ஜெயகாந்தனின் இந்தப் பன்முக ஆளுமையை நாம் புரிந்துகொள்ளலாம்.  நான் மிகச் சிறுவனாக இருந்த காலத்திலேயே ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தியிருந்தார்.  அதன்பின்னர் அவரது மீள் பிரவேசம் நிகழ்ந்தாலும் அது தொடர்ச்சியான இயக்கமாக இருக்கவில்லை.  எனவே,... Continue Reading →

திரைப்படங்களாகும் நாவல்கள்/இலக்கியங்கள்

நாவல்களையும், சிறுகதைகளையும் திரைப்படங்களாக்குவது பற்றி பல்வேறு இடங்களில் பேசப்பட்டிருக்கின்றது.  தமிழ்த் திரைப்படங்களில் கதையம்சம் மிகவும் பலவீனமாக இருப்பது பற்றிப் பேசும்போதெல்லாம், நாவல்களும், இலக்கியங்களும் திரைப்படங்களாக்கப்படவேண்டும் என்பதுவும் பரவலாக முன்வைக்கப்படும் ஆலோசனை.  ஆரம்ப காலங்களில் தனது நாவல்களான காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, பிரியா போன்றன திரைப்படங்களாக எடுக்கப்பட்ட போது அவை நாவல்களாக இருந்தபோது கொண்டிருந்த ஜீவனை இழந்து, மிகவும் அந்நியமாக வெளிவந்ததாக சுஜாதா பல்வேறு பத்திகளில் எழுதி இருக்கின்றார்.  பதின்மங்களில் பலருக்கும் பிடித்திருந்த அவரது பிரிவோம் சந்திப்போம் பின்னர்... Continue Reading →

C-51 குடியுரிமையையும் சுதந்திரத்தையும் பறிக்கிறது -ராதிகா சிற்சபைஈசன்

கனடாவைப் பொறுத்தவரை நாம் பார்த்தால் கனடிய மைய நீரோட்ட அரசியலில் ஈடுபடும் தமிழர்களில் அனேகம் பேர் இலங்கையில் தமது ஆரம்பக் கல்வியைக் கற்று கனடாவிற்கு தமது மத்திம வயதுகளில் வந்தவர்கள்.  இந்த இடத்தில் நீங்கள் மிகச் சிறிய வயதில் கனடாவிற்கு வந்திருக்கின்றீர்கள்.  இலங்கை போன்ற ஒரு நாட்டில் இன முரண்பாடுகள் கூர்மை பெற்றிருக்கின்றபோது அங்கு அரசியல் ஆர்வம் வருவதற்கான காரணமும், உந்துதலும் வேறு.  உங்களது நிலைமையில் அது வேறு.  மையநீரோட்ட அல்லது நாடாளுமன்ற அரசியல் தொடர்பான உங்கள்... Continue Reading →

ஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ

கௌரவன் பாரதக்கதை என்பது அனேகம் எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் மிக மிகப் பெரும்பாலோனோர் முழுமையாக வாசித்திராத தொன்மங்களில் ஒன்றாகும்.  எனக்கு ஏழு / எட்டு வயதிருக்கும்போது வாசித்த கைக்கடக்கமான மகாபாரதப் பிரதி முதலே மகாபாரதத்தின் மீதான் என் ஈர்ப்பு அதிகரித்தே சென்றது.  ஆயினும் வாசித்த குறிப்பிடத்தக்க அளவிலான முதலாவது மகாபாரதம் என்றால் ராஜாஜி எழுதிய “வியாசர் விருந்து” தான் நினைவுக்கு வருகின்றது.  இராமாயணத்துடனான எனது அறிமுகமும் ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தித் திருமகன் ஊடாகவே நிகழ்ந்தது இங்கு குறிப்பிட்டுச்... Continue Reading →

ஈழத்தமிழ் அடையாளங்கள் பேணப்படவேண்டும் என்பதாலேயே பொங்குதமிழ் என்று பெயரிட்டேன்! – சுரதா யாழ்வாணனின் நேர்காணல்

இன்று இணையத்தில் தமிழ் படிப்பதும், பகிர்வதும் மிக இலகுவானதாக இருக்கின்றது.  தமிழ் தேடுபொறிகள், வலைப்பதிவுகள், தமிழ் தட்டச்சுக்கான மென்பொருட்கள் எழுத்துருக்கள் என்று பெருவளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளுக்குள் வேகமாக அரங்கேறியிருக்கின்றது.  இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்திய முன்னோடிகளுள் ஒருவர் சுரதா யாழ்வாணன்.  யுனிக்கோடு பரவலான பாவனைக்கு வருவதற்கு முன்னைய காலங்களில் தமிழில் வெவ்வேறு இணையத்தளங்களும் வெவ்வேறு எழுத்துருக்களைப் பாவித்து வந்தன.  அந்தத் தளங்களைப் பார்ப்பதற்கு வெவ்வேறு எழுத்துருக்களை கணனியில் நிறுவ வேண்டியது அவசியமானதாக இருந்தது.  இது ஒருவிதத்தில் தமிழ்... Continue Reading →

சட்டநாதனின் “மாற்றம்” சிறுகதைத் தொகுப்பு…

எழுபதுகளின் தொடக்கங்களில் எழுதத் தொடங்கிய படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்புகளை அண்மைக்காலமாக வாசித்துவருகின்றபோது இந்தக் காலகட்டத்தில் உள்ளடக்கம் சார்ந்தும், சொல்லப்படும் விதம் சார்ந்தும் முக்கியமானதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது என்று உறுதியாகக் கூறமுடிகின்றது.  அறுபதுகளில் ஈழத்தில் இடம்பெற்ற இலக்கியம் பற்றிய விவாதங்களையும் அந்நேரத்தில் முன்வைக்கப்பட்ட முற்போக்கு இலக்கியம் பற்றிய வரையறைகளையும் தொடர்ந்து கலையமைதிக்கு முக்கியத்துவம் கொடுத்து, உள்ளடக்கத்திலும் பல்வேறு புதிய கருக்களைப் படைப்புகளூடாகப் பேசிய காலப்பகுதியாக இது அமைகின்றது.  குறிப்பாக தனிமனிதர்களுக்கிடையிலான உறவுகள், அதனால் எழுகின்ற சிக்கல்கள், சமத்துவத்தையும், விடுதலையையும்... Continue Reading →

அதனிலும் கொடிது முதுமையில் தனிமை

ஆரஞ்சு மிட்டாய் படம் பார்த்தேன்.  இன்றைய அவசர உலகில் உறவுகளின் அபத்தம், தனிமனிதத் தேர்வுகளின் மீது லௌதீக காரணிகள் திணிக்கும் தாக்கம் அல்லது நெருக்கடிகள் பற்றி இத்திரைப்ப்டம் விவரிக்க முயலுகின்றது.  நன்றாக எடுத்திருக்கக் கூடிய கதை.  ஆனால் திரைக்கதையின் பலவீனத்தாலும், கதையை நகர்த்திச் செல்வதில் ஓரளவு வெளிப்படையாகவே தெரிந்த குழப்பத்தாலும், பொறுத்தமற்ற பாத்திரத் தேர்வுகளாலும் சற்றே தள்ளாடித் தள்ளாடி.... ஆயினும் நல்ல திரைப்படம் ஒன்றைக் கொடுக்கவேண்டும் என்ற ஆர்வம் விஜய் சேதுபதியிடமும், பிஜூ விஸ்வநாத்திடமும் இருப்பது வெளிப்படையாகத்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑