தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி என்கிற சிறுகதைத்தொகுதி அண்மைக்காலத்தில் ஈழத்தில் இருந்து அல்லது ஈழத்தமிழர்களால் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுதிகளில் முக்கியமானதொன்றாகும். இச்சிறுகதைத் தொகுதியில் 2008 ஏப்ரல் முதல் 2011 யூலைக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட 9 கதைகளும், தேவமுகுந்தன் க.பொ.த உயர்தரப்ப் பரீட்சை எழுதிவிட்டு இருந்த காலப்பகுதிகளில், 1992ல் எழுதிய மரநாய்கள் என்கிற கதையுமாக மொத்தம் 10 கதைகளைக் கொண்டதாக அமைகின்றது. இந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளியான அதே காலப்பகுதியிலேயே சிறுகதைத் தொகுப்புகளும், நாவல்களும், குறுநாவல்களுமாக பல்வேறு... Continue Reading →
அ. யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்”
“தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்” என்கிற அ. யேசுராசவின் சிறுகதைத் தொகுப்பினை சென்ற ஆண்டளவில் வாசித்து இருந்தேன். அப்போது அது பற்றி எழுதவேண்டும் என்று நினைத்திருந்த சிறு குறிப்பும், வழமைபோலவே “எழுத நினைத்த விடயங்கள் பட்டியலில்” சென்று புதைந்துவிட்டது. சில நாட்களின் முன்னர் யேசுராசா அத்தொகுப்புப் பற்றி நினைவுக்குறிப்பு ஒன்றினை முகநூலில் பகிர்ந்திருந்தார்; அதனை வாசித்தவுடன் மீண்டும் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தொகுப்பினை எடுத்து வாசித்தேன். அண்மைக்காலத்தில் உணர்வுரீதியாக மிக நெருக்கமாக உணர்ந்த தொகுப்பாக அந்த... Continue Reading →
தெட்சிணாமூர்த்தி ஆவணப்பட வெளியீடு | மேற்கிந்தியத் தீவுகளில் பொங்கல் | ஈழத்துத் தமிழ் இதழ்கள்
மேற்கிந்தியத் தீவுகளில் பொங்கல் கொண்டாட்டம் மேற்கிந்தியத் தீவுகளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா என்று சாம் விஜய் எழுதிய கட்டுரை ஒன்று தை மாத “காக்கைச் சிறகினிலே” இதழில் வெளியாகி இருக்கின்றது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க யுனெஸ்கோ ஒருங்கிணைப்பாளரும் பிரான்சில் உள்ள “நான் இந்தியாவை காதலிக்கின்றேன்” அமைப்பின் தலைவருமான சாம் விஜய் அவர்கள் “தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளின் அடிச்சுவட்டில் அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் சென்று, அவர் ஆராய்ச்சியின் தொடர்ச்சியை தன்னார்வத்துடன் செய்துகொண்டிருப்பவர்” என்று காக்கைச் சிறகினிலே இதழ்... Continue Reading →
குறும்படப் பயிற்சிப் பட்டறை : சர்க்கரைப் பந்தலிற் தேன்மழை
ஈழத்தமிழர்கள் தம்மை ஒரு தேசிய இனமாக உணர்வது போல தமக்கான தனியான பண்பாட்டு வெளிப்பாடுகளையும் பேணவேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு. துரதிஸ்டவசமாக, பெரும்பாலும் நாம் எம்மை தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்களுடன் கலந்தே அடையாளப்படுத்தி வருகின்றோம். இது எமக்கான தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களை அழித்துவிடுவதுடன், தேச உருவாக்கத்திலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றது. எளிய உதாரணமாக, புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற திருமண விழாக்கள் போன்ற சடங்குகளில் தமிழகத்து, வட இந்திய பாணியினது செல்வாக்குகள் அதிகரித்து வருவதை அவதானிக்கலாம். தவிர, புலம்பெயர்... Continue Reading →
17வது அரங்காடல் ஒரு பார்வை
ரொரன்றோவில் வெகுஜனக் கலாசாரத்தின் மத்தியில் சீரிய நாடகங்களை நோக்கி பார்வையாளர்களை இழுக்கும் நோக்குடன் நாடகம் மீது அக்கறை கொண்ட நண்பர்கள் பலர் இணைந்து 1996 இல் உருவாக்கிய அமைப்பே மனவெளி கலையாற்றுக் குழு ஆகும். பொதுவாக மனவெளி கலையாற்றுக் குழுவினர் வருடாந்தம் “அரங்காடல்” என்ற பெயரில் நாடகவிழாக்களை ரொரன்றோவில் நடத்துவது உண்டு. அந்த வகையில் அதன் 17வது அரங்காடல் ஏப்ரல் 26ம் திகதி “ஃப்ளேடோ மார்க்கம் தியேட்டர்” இல் நடத்துவதாக திட்டமிட்டிருந்தனர். மனவெளி கலையாற்றுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில்... Continue Reading →
ரொரன்றோ தமிழ்ச் சங்கம் | ரொரன்றோ பொது நூலகம் | வைரமுத்து – குமுதம் கார்ப்பரேட் வியாபாரம்
ரொரன்றோ தமிழ் சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் சார்பில் ஒழுங்கு செய்யப்படும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்களில் இயன்றவரை கலந்துகொள்ளுகின்றேன். ஒவ்வொரு மாதமும் இறுதிச் சனிக்கிழமை மாலை என்று ஒரு குறித்த தினத்தில் நிகழ்வுகள் தொடர்ச்சியாக திட்டமிட்டு நடத்தப்படுவது முக்கியமானது. அதுபோல ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு மையப் பொருள் தேர்வு செய்யப்பட்டு, அது பற்றிய ஒரு விரிவான கட்டுரை வாசிப்பு ஒன்றும், பின்னர் அதை ஒட்டிய துணைத் தலைப்புகளிலான கட்டுரை வாசிப்புகளுமாக நிகழ்வு நடைபெற்று வருகின்றது. இறுதியாக ஐயந்தெளிதல்... Continue Reading →
சாம்பல் பறவைகள் குறுநாவலை முன்வைத்து
ஒப்பீட்டளவில் குறைவாகவே படைப்பிலக்கியங்கள் வெளியாகும் கல்முனையில் இருந்து எஸ். அரசரெத்தினம் எழுதிய சாம்பல் பறவைகள் என்ற குறுநாவலை வாசிக்கமுடிந்தது. இக்குறுநாவல் 2009ல் ஈழப்போரில் தொடர்ச்சியாக அகப்பட்டு, கடுமையான இழப்புகளைச் சந்தித்த ஒரு குடும்பத்தைப் பற்றியும், அதன் கதாபாத்திரங்கள் ஊடாக எம்முடனான உரையாடல்களையும், விமர்சனங்களையும் மேற்கொள்ளுவதால் முக்கியமான ஒன்றாக அமைகின்றது. வன்னியைச் சேர்ந்த பவானிக்கும் வவுனியாவைச் சேர்ந்த ஆனந்தனுக்கும் அவர்கள் வவுனியாவில் ஆசிரியர்களாகப் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றபோது காதல் உருவாகின்றது. பெரும் செல்வந்தரான ஆனந்தனின் தந்தை தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதோடு,... Continue Reading →
பூர்ணம் விஸ்வநாதன் முன்னொருநாள் சொன்ன கதை
பூர்ணம் விஸ்வநாதன் என்றவுடன் எமக்கு அவர் திரையில் ஏற்று நடித்த சில பாத்திரங்களே நினைவு வரும். குறிப்பாக மகாநதி, வருஷம் 16, ஆசை திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள். தனது நாடகங்கள் பலவற்றுக்கு உயிர் கொடுத்தவர் பூர்ணம் விஸ்வநாதன் என்று சுஜாதா எழுதியிருக்கின்றார். தொடக்கத்தில் தான் எழுதி அவர் நடித்த நாடகங்கள் நிறைவானதாக தனக்குத் தோன்றியதால் பிற்பாடு சில நாடகங்களை பூர்ணம் விஸ்வநாதனை மனதில் வைத்துக்கொண்டே தான் எழுதியதாகவும் சுஜாதா கற்றதும் பெற்றதுவும் இல் குறிப்பிட்டிருந்தார். ... Continue Reading →
மனுநீதிச் சோழன் யார்? அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா?
Good Governance: Who Is Responsible? என்கிற Upali Cooray எழுதிய கட்டுரை ஒன்று கொழும்பு ரெலிலிகிராப் இணைய இதழில் மார்ச் 11, 2015 அன்று வெளியாகியிருந்தது. அதில் கிமு 205 முதல் கிமு 161 வரை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்ட எலார (எல்லாளன் என்று தமிழில் நாம் அழைக்கும் மன்னன் மகாவம்சத்தில் எலார என்றே குறிப்பிடப்படுகின்றான்) என்ற சோழ மன்னன் தன் அரண்மனையில் அவனிடம் நீதி வேண்டிவருவோர் ஒலிக்கவிடவேண்டிய மணி ஒன்றினை பேணியதாகவும், மன்னனின் மகன்... Continue Reading →
மானிட நேயம் மாண்புறப் பேசினார் எஸ்பொ!
எஸ்பொ விற்குப் பிந்திய இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். வாசிப்பு மீது அக்கறையும் ஆர்வமும் கொண்ட எனது தலைமுறையைச் சேர்ந்த பலரையும்போலவே எஸ்பொ எனக்கும் பிடித்தமான ஒரு எழுத்தாளர். சிறுவயதில் இந்தியப் பத்திரிகைகளையே அதிகம் படித்து வளர்ந்தவன் என்பதால் எழுத்தாளன் என்கிற கர்வத்துடனனான விம்பங்களாக இருவர் என் மனதில் பதியவைக்கப்பட்டனர். ஒருவர் பாரதி. அடுத்தவர் ஜெயகாந்தன். பின்னாளில் அந்த திருவுருக்கள் மனதில் தூர்ந்துபோயினர். ஆனால் மறக்கவே முடியாதவராக, பேராளுமையாக தாக்கம் செலுத்தியவர் எஸ்பொ அவர்கள். அவருடன் நெருக்கமான... Continue Reading →