The cricket monthly என்ற பெயரில் ESPN Cricinfo தளத்தினரால் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கின்ற கிரிக்கெட்டிற்கான இதழில் The Lost Boys of Jaffna என்கிற பெயரிலான கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கின்றது. இக்கட்டுரையில் போர்க்காலங்களில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த திறமையான கிரிக்கெட் வீரர்களான காண்டீபன் (சென்.ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்), நிஷாந்தன் (சென். பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர்) இருவரும் கட்டுரைக்காக சந்திக்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் பற்றிய பல்வேறு தகவல்களையும் கொண்டதாக இக்கட்டுரை அமைதிருக்கின்றது. இக்கட்டுரையை பலர் மகிழ்வுடன், எம்... Continue Reading →
திரு ஆர். எம். நாகலிங்கம் அவர்களுடனான சந்திப்பினை முன்வைத்து; சாதியம் : ஓர் அறிமுகம் ஓர் அனுபவம் ஓர் அவதானம்
திரு ஆர். எம். நாகலிங்கம் அவர்களைச் சந்திக்கும் அருமையான வாய்ப்பொன்றினை திரு நவம் அவர்களூடாகக் கிடைத்ததுஅண்மையில் எனக்குக் கிடைத்த பேறென்றே சொல்லுவேன். அந்தச் சந்திப்பின் போது அவரது சமூகப்பணிகளையும், செயற்பாடுகளையும் கோட்பாடுகளையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் வெளியான எழுச்சிப்பாதை என்கிற நூலையும் பெற்றுக்கொண்டேன். யார் இந்த ஆர். எம் நாகலிங்கம் என்று அறிந்துகொண்டால் நான் முன்னர் சொன்னதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம். இவர் 1936ம் ஆண்டில் மாவிட்டபுரத்தில் பிறந்தவர். ஈழத்தில் மிக மோசமான சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட சமூகங்களில் ஒன்றான... Continue Reading →
மகாபாரதம் சொல்லும் அரசியல் என்ன? 2
நான் மகாபாரதம் சொல்லும் அரசியல் என்ன? என்கிற என் முன்னைய குறிப்பில் வலியுறுத்தியது, இங்கே குறிப்பிடப்படும் அறம் என்பது, “ஆள்வோர்க்கான அறம்” என்பதை வலியுறுத்தவே. அவ் அறம், எல்லாருக்கும் பொதுவானதாகவோ அல்லது எல்லாருக்கும் அறமாகவோ இருப்பதில்லை. புராணக்கதைகள், தொன்மங்கள் என்பவற்றைப் பற்றி ஆராயும்போது அன்றைய காலப்பகுதியுடன் வைத்தே பேசவேண்டும். அன்றைய வழமைகளை ஆராயவேண்டும். அவற்றுடன் பொருத்திப் பார்க்கவேண்டும். அவையெல்லாம் புராணங்களை நியாயப்படுத்துவதற்காக அல்ல. அதே நேரத்தில் புராணங்கள், அடிப்படைவாதம் ஒன்றினையோ அல்லது மதவெறியையோ தூண்டவோ அல்லது... Continue Reading →
மகாபாரதக் கதையின் அரசியல் என்ன?
மகாபாரதக் கதையின் அரசியல் என்ன என்கிற கேள்வியொன்றினை அண்மையில் முகநூலில் மீராபாரதி அவர்கள் எழுப்பி இருந்தார். மகாபாரதம் சிறுவயது முதலே எனக்கு மிகவும் பிடித்த காவியம். இராமாயணத்தைவிடவும் கூட. அதிலும் குறிப்பாக நான் யாழ்ப்பாணத்தில் இருந்த 1990 – 96 வரையான காலப்பகுதியில் அனேகமான ஆலயங்களில் திருவிழாக்காலங்களில் கம்பராமாயண சொற்பொழிவு தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தது. பெரும்பாலும் கம்பன் கழகத்தைச் சேர்ந்தவர்களாலும், சில தனிப்பட்டவர்களாலும் இச்சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. ஆயினும், மகாபாரதம் போல இராமாயணம் ஒருபோதும் நெருக்கமானதாக இருந்ததில்லை. மகாபாரதம்... Continue Reading →
எனது நினைவில் பாலுமகேந்திரா…
காலஞ்சென்ற பாலுமகேந்திரா அவர்கள் தமிழ்நாட்டு மையசினிமாவில் நல்லசினிமாக்கள் என்று சொல்லக்கூடிய சில சினிமாக்களை இயக்கியவர், ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் அவரைப் போற்றிப் புகழும் விதம் மிகமிக அளவுக்கு மிஞ்சியதாகவே அவதானிக்க முடிந்தது. ஒரு படைப்பாளி என்பதைத் தாண்டி பாலுமகேந்திராவின் தனிப்பட்ட வாழ்வில் அவருக்கும் மௌனிகாவிற்கும் இடையிலான உறவு, அவ் உறவு பற்றி பாலுமகேந்திராவும், மௌனிகாவும் வழங்கிய பேட்டிகள், பகிர்வுகள் போன்றன மீண்டும் மீண்டும் பகிரப்பட்டன. (பாலுமகேந்திராவின் மரணச்சடங்கில் கலந்துகொள்ள வந்த மௌனிகா இயக்குனர் பாலாவினால் தடுக்கப்பட்டமையும்... Continue Reading →
ஶ்ரீஸ்கந்தனின் இரண்டு நூல்கள் : அரியாலை ஊரை ஆவணப்படுத்தும் முயற்சிகள்
சென்ற கோடைகாலத்தின் தொடக்கத்தில் ஸ்ரீஸ்கந்தன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பல்வேறு சஞ்சிகைகளிலும், இதழ்களிலும் தொடர்ச்சியாக தான் எழுதிய கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுத்த சில கட்டுரைகளை அரியாலையூர் நாடகக் கலைஞர்கள் பற்றிய ஒரு தொகுப்பாகவும், தனது அனுபவங்களை, நினைவுப்பதிவுகளை, அவரே சொன்ன வார்த்தையையில் குறிப்பிட்டால் முசுப்பாத்திகளை ஒரு தொகுப்பாகவும் ஆக இரண்டு புத்தகங்களாக்கும் எண்ணம் இருப்பதாகவும் கூறினார். அடடே, நல்ல விஷயம் தானே. அது முக்கியமானதும் கூட என்று எனது ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தேன். நினைவுப்பதிவுகளாகவும், அனுபவப் பகிர்வுகளாகவும், நனவிடை... Continue Reading →
Grass: A Nation’s Battle for Life (1925)
மொஹமட் சபாஷி என்பவர் என் இனிய நண்பர். கனேடிய வாழ்வில் எனக்கு என் வாசிப்பையும், எண்ணங்களையும் பார்வைகளையும் எப்போதும் பகிர்ந்துகொள்ளலாம் என்று வாய்த்த அரிதான சில நண்பர்களில் ஒருவர். இரானியர். ஆனால் அவ்வாறு சொல்வதில் விருப்பமில்லாது தன்னை பாரசீகர் என்றே அழைத்துக்கொள்பவர். சட்டென்று பார்த்தால் காந்தியாரின் தோற்றத்தில் இருப்பார். இந்தியாவில் கல்வி கற்றவர். இலங்கை முழுக்க சுற்றுப்பயணம் புரிந்தவர், இரானிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். அதன் காரணமாக இரானை விட்டு வெளியேறியவர். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கெதிரான போராட்டங்கள் காரணமாக... Continue Reading →
“ராஜீவ் காந்தி படுகொலை – வெளிவராத மர்மங்கள்” புத்தகம்.
கட்டுரையை வாசிக்கும் முன்னரான சிறு குறிப்பு: ராஜீவ் காந்தி படுகொலை பற்றி முன்பொருமுறை திருச்சி வேலுசாமியின் புத்தகத்தை வாசித்த கையோடு எழுதியது இக்கட்டுரை. இவ்வழக்கு விசாரணையில் இருக்கின்ற மிக மிக வெளிப்படையான சில அபத்தங்களைச் சுட்டிக்காட்ட இக்கட்டுரையை இப்போது மீளப் பகிர்கின்றேன். இந்தக் கொலையை யார் செய்தார்கள் / செய்யவில்லை என்பதைவிட இவ்வழக்கு விசாரணையின் அபத்தங்களும், வேண்ட்மென்றே சில விடயங்கள் கடந்து செல்லப்பட்டதன் பின்னால் இருக்கக்கூடிய சதிவலையும் கவனிக்கப்படவேண்டும் என்பதும் மரண தண்டனை ஒழிப்பு மீதான அக்கறையுமே... Continue Reading →
நாம் தமிழர் கட்சி ஆவணம் : ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப்போகும் ஆகப்பெரிய சவால்
கட்டுரையை வாசிக்கும் முன்னான சிறுகுறிப்பு : 2012ம் ஆண்டு மேமாதம் அளவில் நாம் தமிழர் கட்சியினர் தமது கட்சியின் அறிக்கையை வெளியிட்டனர். இவ் ஆவணத்தில் இருக்கின்ற கருத்திய ரீதியிலான முரண்கள் தொடர்பான விமர்சனங்கள் இணையத்தளங்களில் குறிப்பாக சமூக வலைத் தளங்களில் நடைபெறுகின்றன. அந்நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் / அமைப்பாளர் சீமான் மற்றும் அவர் அரசியல் குறித்த பல்வேறு விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும், அவருக்கான ஆதரவான போக்கென்பது என்னுடன் இருந்தே வந்தது. அந்த அடிப்படையில் நாம்... Continue Reading →
நாம் தமிழர் கட்சி ஆவணம் தொடர்பாக சில கருத்துக்கள்
##நாம் தமிழர் ஆவணத்தை ஒருவாறாக இன்று வாசிக்கக் கிட்டியது. ஆவணத்தில் திராவிடர்கள் யாரென்பது தொடர்பாகக் கூறப்பட்டிருக்கின்ற கருத்துக்களிலும், தமிழ்நாட்டில் நிலவுகின்ற முகாமையான முரண்பாடுகள் என்று பட்டியலிடப்பட்டுள்ள 10 முரண்பாடுகளில் முகமதியர்கள், கிறீஸ்தவர்கள் தொடர்பாக எச்சரிக்கையோடும், விழிப்போடும், அன்போடும் கையாளப்படவேண்டிய தரப்பினர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதிலும் உடன்பாடு இல்லை. முகமதியர்கள், கிறீஸ்தவர்கள் தொடர்பான இந்தப் பார்வை முழுக்கத் தவறானதும் கூட. (இந்த முரண்பாட்டுப் பட்டியலில் எனக்கு உடன்பாடில்லாத வேறு முரண்பாடுகளுன் இருந்தாலும், முக்கியத்துவம் கருதி இங்கே இதனைச் சுட்டிக்காட்டுகின்றேன்.)... Continue Reading →