மொஹமட் சபாஷி என்பவர் என் இனிய நண்பர். கனேடிய வாழ்வில் எனக்கு என் வாசிப்பையும், எண்ணங்களையும் பார்வைகளையும் எப்போதும் பகிர்ந்துகொள்ளலாம் என்று வாய்த்த அரிதான சில நண்பர்களில் ஒருவர். இரானியர். ஆனால் அவ்வாறு சொல்வதில் விருப்பமில்லாது தன்னை பாரசீகர் என்றே அழைத்துக்கொள்பவர். சட்டென்று பார்த்தால் காந்தியாரின் தோற்றத்தில் இருப்பார். இந்தியாவில் கல்வி கற்றவர். இலங்கை முழுக்க சுற்றுப்பயணம் புரிந்தவர், இரானிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். அதன் காரணமாக இரானை விட்டு வெளியேறியவர். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கெதிரான போராட்டங்கள் காரணமாக கனடாவிலும் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட்டவர். . என்னைப் போலவே சாப்பாட்டிலும், சமைத்தலிலும் விருப்பம் உள்ளவர். அவரது அறிமுகப்படுத்தலில் நான் பார்த்த ஒரு ஆவணப்படம். இவ் ஆவணப்படம் பற்றியும், இதைப் போன்ற பல்வேறு ஆவணப்படங்கள் பற்றியும் அறியவேண்டும் என்ற விருப்பத்தின் விழைவாக இதனை இங்கே பகிர்ந்துகொள்ளுகின்றேன்.