குறிப்பு: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் அழைப்பில் ஆறு திருமுருகன் அவர்கள் கனடா வருகைதர இருப்பது குறித்த செய்தியொன்று வெளியாகி இருந்தது. இது குறித்து சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்த எனது நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்குடன் சங்கத்து நான் அனுப்பிய பதவி விலகல் கடிதத்தைப் பொதுவெளியில் பகிர்கின்றேன். இக்கடிதத்தை சங்கத்தின் நிர்வாக சபைக்கு அனுப்பியதுடன் சங்கத்தின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் இதனை அனுப்பிவைக்கும்படியும் கேட்டிருந்தேன். எனது பதவி விலகலை ஏற்றுக்கொண்ட சங்கத்தினர் அதனை அங்கத்தவருடன் பகிரும்படியான... Continue Reading →
மற்றும் பலர் நடித்த: ஓர் அறிமுகம்
சிறுவர் இதழ்களை வாசிப்பதால் ஏற்பட்ட வாசிப்பின் அறிமுகம் அதிலிருந்து வெகுஜன இதழ்களை நோக்கிச் சென்றபோது கல்கண்டில் பொது அறிவுத் துணுக்குகள், ஒரு பக்கக் கட்டுரைகள், சங்கர்லால் துப்பறியும் தொடர்கதைகள் போன்றவற்றைப் போலவே அதில்வரும் தமிழ்த் திரைப்பட விமர்சனங்களும் விருப்பத்துக்குரியனவாக அமைந்திருந்தன. திரைப்படம் என்பது அப்போது எனக்குத் தமிழ்த் திரைப்படங்களாகவே இருந்தது. திரைப்படங்களைப் பார்ப்பது போலவே திரைப்படங்கள் குறித்த இதழ்களை வாசிப்பதிலும், திரை விமர்சனங்களை வெவ்வேறு இதழ்களில் வாசிப்பதிலும் சிறுவயதில் ஆர்வம் இருந்தது. அந்த இதழ்களிலும் சினிமா பற்றிய... Continue Reading →
“எம்.ஏ. நுஃமானின் கவிதையும் அரசியலும்: ஈழத்து அனுபவம்” நூல் அறிமுகம்
கவிதையும் அரசியலும் என்கிற இந்த இந்த நூலின் தலைப்பே முக்கியமானதான ஒன்றாகப்படுகின்றது. ஈழத்தில் தேசிய இனப்பிரச்சனை பற்றிய எனது வாசிப்புகளின்போது முஸ்லிம்களின் அடையாள உருவாக்கம் பற்றிய வாசிப்புகளில் நுஃமான் எழுதிய Sri Lankan Muslims - Ethnic Identity within Cultural Diversity, என்ற நூல் முக்கியமான ஒன்றாக அமைந்திருந்தது. முஸ்லிம்கள் தேசிய இனமாக உருப்பெற்ற வரலாற்றினையும், இனமுரண்பாட்டின் வரலாற்றறையும் அந்த நூலில் அவர் ஆய்வுபூர்வமாக முன்வைத்திருப்பார். ஒரு கவிஞராகவும், மொழியியலாளராகவும் அதுவரை நான் அறிந்திருந்த நுஃமானின்... Continue Reading →
சீமை இதழ்
மலையகத்தைத் தளமாகக் கொண்டு வெளிவருகின்ற சீமை இதழின் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களின் இதழ்களை அண்மையில் வாசித்தேன். காத்திரமான, மக்களுக்கு விழிப்புணர்வையூட்டும் நோக்குடனான கட்டுரைகளைக் கொண்ட இதழாக சீமை வந்துகொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலைக் கருத்திற்கொண்ட கட்டுரைகளுடன் கிட்ணன் செல்வராஜா எழுதியுள்ள அசலும் நகலும்: தோட்டத்தொழிலாளர் சம்பள விடயத்தில் என்ற கட்டுரை தோட்டத் தொழிலாளருக்கு 1700 ரூபா சம்பளம் என்று ஜனாதிபதி ரணில் சம்பள அறிவிப்பை அறிவித்தபின்னரும் 21 கம்பனிகள் தொடுத்த வழக்கினடிப்படையில் இந்த அறிவிப்புச்... Continue Reading →
“விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்புவது என்பது இராணுவக் குழுக்களை உருவாக்குவதல்ல…” எஸ்.கே. விக்னேஸ்வரனுடனான நேர்காணல்
யாழ்ப்பாணம் அம்பனைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.கே. விக்னேஸ்வரன் அரசியல், கலை இலக்கியச் செயற்பாடுகள், இதழியல் போன்ற பல்வேறு துறைகளில் ஆழங்காற்பட்டவர். சிறுவயதிலிருந்தே வாசிப்பில் ஆர்வம் காட்டிய எஸ்.கே. விக்னேஸ்வரன், வாசிப்பினூடாக இடதுசாரிக் கருத்தியல் நோக்கி நகர்கின்றார். இலங்கையில் இடதுசாரிக்கட்சிகள் செல்வாக்குடன் இருந்த எழுபதுகளில் மாணவராக அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கிய இவர், தேசிய இனப்பிரச்சனை பிரதான பிரச்சனையாக உருவெடுத்த காலப்பகுதியில் தேசிய இன விடுதலைப் போராட்டத்திலும் நேரடியாக ஈடுபட்டவர். ”ஆயுதப்போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டத்தை வரலாறாக்கிவிடத்... Continue Reading →
கெடுப்பாரிலானுங் கெடும் இனம்
கடந்த சில நாட்களில் வெளித்தெரிய வந்த இரண்டு முக்கியமான பிரச்சனைகள் குறித்து இந்த அவதானம். சிவபூமி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மகளிர் இல்லங்களில் இருக்கும் சிறுமியர் கட்டாயமாகத் திறந்த வெளியில் குளிக்குமாறு பணிக்கப்பட்டதாயும் அவ்வாறு அவர்கள் குளிக்கும் இடங்களை நோக்கி CCTV கமரா பொறுத்தப்பட்டதாகவும் வெளிவந்துள்ள செய்தியில் மக்கள் அறம் சார்ந்து, அவ்வாறு நடந்திருப்பது உண்மையா என்றும் நடந்திருப்பின் சிவபூமி அறக்கட்டளை, அதன் நிர்வாகிகளை பொறுப்புக் கோரும்படி கேட்டுத்தான் குரலெழுப்பியிருக்கவேண்டும். ஆனால் பிரச்சனை, அது தொடர்பாக உதயன்... Continue Reading →
பாரதி: அறிவுத் தாகமா? சனாதனத் தாகமா?
“வ.ந. கிரிதரனின் கட்டுரைகள்” நூலின் வெளியீட்டில் நான் வாசித்த கட்டுரைக்கான எதிர்வினையாகச் சில கருத்துகளை வ.ந. கிரிதரன் பகிர்ந்துள்ளார். இவை பற்றிய தெளிவுபடுத்தல்ளைச் செய்யும் பொருட்டு இந்தப் பதிவை எழுதுகின்றேன். “வ.ந. கிரிதரனின் கட்டுரைகள்” நூலை முன்வைத்துச் சில குறிப்புகள் என்கிற இந்தக் கட்டுரையில் பின்வருமாறு நான் குறிப்பிட்டிருப்பேன்: “பாரதி ஒரு மார்க்சியவாதியா?” என்கிற 1983 இல் எழுதப்பட்ட கட்டுரையும் “பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு” என்கிற கட்டுரையும் பாரதியை மார்க்சிக் கோட்பாடுகளின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளமுனைகின்றன. ... Continue Reading →
“வ.ந. கிரிதரனின் கட்டுரைகள்” நூலை முன்வைத்துச் சில குறிப்புகள்
நூல்களுக்கான அறிமுக உரை வழங்குவது என்பது எச்சரிக்கையுடன் கையாளவேண்டியியதாகவே இருந்துவருகின்றது. பொதுவாக அறிமுக உரைகள் நூல்களின் வெளியீட்டின்போதே வழங்கப்படுகின்றன. இதனால் அந்த நூலை அரங்கிலிருப்போரும் இதர வாசகர்களும் வாசித்திருக்கக் கூடிய சாத்தியம் மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது. இதனால் அறிமுக உரையாற்றுபவருக்கு நூலின் உள்ளடக்கம் குறித்த பின்னணி, நூலாசிரியர் குறித்த எழுத்து, நோக்கு போன்றவை குறித்ததானவையாகவும் நூல் குறித்த அறிமுகமாகவும் கூறுவதாகவே அறிமுக உரை அமைகின்றது. உண்மையில், நூல் வெளியீடு செய்யப்பட்ட சிலகாலங்களின் நூலினை வாசித்தவர்கள் நூல் குறித்த... Continue Reading →
தாயகக் கனவுகள் நூல் அறிமுகம் – சத்தியதேவன்
தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஜூன் 28 அன்று நடைபெற்ற புத்தக அரங்க விழாவில் எனது "தாயகக் கனவுகள்: நூல் குறித்த அறிமுகத்தை சத்தியதேவன் செய்திருந்தார். இந்நிகழ்வைப் பதிவுசெய்து காணொலியை Red Fox Club பதிவுசெய்துள்ளனர். அந்தக் காணொலியை இங்கே பகிர்கின்றேன். தொடர்ச்சியாக புத்தக அறிமுக விழாக்களை ஒருங்கிணைக்கும் தனுஜனுக்கும், உரையாற்றிய சத்தியனுக்கும், காணொலியப் பதிவுசெய்த Red Fox Clubக்க்கும் நன்றி.https://www.youtube.com/embed/fpjOgyRiHGE?si=ZXf-sSVDBSZ2BqF9&start=2880
Ontario Science Centre மூடுதல் அறிவிப்பும் செய்தித் தணிக்கையும்
ஒன்ராறியோவின் உட்கட்டுமான அமைச்சர் (infrastructure minister) Kinga Surma, Ontario Science Centre இன் கூரையில் உள்ள ஓடுகள்/கூரை மோசமான நிலையில் இருப்பதாகவும், அதனால், பொதுமக்களின் நலனை முன்னிட்டு அதனை பொதுமக்கள் பாவனையில் இருந்து உடனடியாக மூடப்பட வேண்டும் என்று நிபுணர்களின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி Ontario Science Centre உடனடியாக மூடப்படுவதாக வெள்ளிக்கிழமை, ஜூன் 21, 2024 அன்று அறிவித்தார். ஆயினும் இந்தப் பரிசோதனைகளைச் செய்த Rimkus Consulting Group இன் அறிக்கையின்படி Ontario Science Centre... Continue Reading →