அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா அதிகாரத்திற்கெதிரான நமது இதயங்களைச் சிலுவையில் அறைவதா? என்கிற ஒரு காலத்தினதும் தலைமுறையினதும் மனசாட்சிகளின் தவிப்பாக இருந்த நிராதரவுக் குரலை எழுதிய எஸ்போஸ் என்றறியப்பட்ட சந்திரபோஸ் சுதாகர் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் திகதி தனது ஏழு வயது மகனின் கண்ணெதிரே மிகக் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு பத்தாண்டுகளுக்குப் பின்னர் எஸ்போஸ் படைப்புகள் மற்றும் எஸ்போஸ் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் என்கிற இந்தத் தொகுப்பு நூல் கருணாகரன், ப, தயாளன், சித்தாந்தன் ஆகியோரைத்... Continue Reading →
ஓவியர் / வரைகலை நிபுணர் / புகைப்படக் கலைஞர் கருணாவுடனான உரையாடல்
//ஈழத்தின் தனித்துவமான ஓவியர்களில் ஒருவரும் வளமான ஓவியர்கள் பலருக்கு ஓவியக்கலையைப் பயிற்றுவித்தவருமான மாற்கு அவர்களின் மாணவர்களில் கருணாவும் ஒருவர். இவரது சொந்தப் பெயர் இயூஜின் வின்சென்ற் என்பதாகும். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கனடாவுக்கு வந்த கருணா, கனடாவிலும் வரைகலை தொடர்பான தொழினுட்பங்கள் சிலவற்றை முறையாகக் கற்றுக்கொண்டார். 1992/93 காலப்பகுதிகளில் இருந்து டிஜிற்றல் முறையில் ஓவியங்களை வரைந்துவருகின்ற கருணாவே, ஈழத்தமிழர்களில் டிஜிற்றல் முறைகளில் ஓவியங்களை முதன்முதலில் வரைய ஆரம்பித்தவருமாவார். புலம்பெயர் நாடுகளில் இருந்து வெளிவந்த, வெளிவந்துகொண்டிருக்கின்ற இதழ்கள், மலர்கள், சிற்றிதழ்கள்... Continue Reading →
ஈழத்தின் முதல் தலைமுறைப் பெண்படைப்பாளி பவானி ஆழ்வாப்பிள்ளை
ஈழத்தின் மூத்த, முதல் தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான பவானி ஆழ்வாப்பிள்ளை, அறுபதுகளில் எழுத ஆரம்பித்தவர். ஈழத்தில் பெண்ணிய நோக்கிலான கருத்துகளை தனது படைப்புகளினூடாக வெளிப்படுத்திய முதல் பெண் எழுத்தாளர் இவரே என்று ஈழத்துச் சிறுகதை வரலாறு நூலில் செங்கை ஆழியான் குறிப்பிடுகின்றார். ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற அளவெட்டிக்கிராமத்தில் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியும் ஆவார். 1958/59 ஆம் ஆண்டுக்குரிய இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்தின் இதழாக “இளங்கதிரில்” இவரது அர்ப்பணம் என்கிற சிறுகதை “மதிற்பிற்குரியது, நூற்பரிசு... Continue Reading →
பாட்டி சுடாத வடை : கனடாவில் சிறுவர் இலக்கியம்
அண்மையில் வழமைபோல ரொரன்றோ முருகன் புத்தக நிலையத்துக்குச் சென்றிருந்தபோது பாட்டி சுடாத வடை என்கிற அழகிய முகப்புடன் கூடிய புத்தகத்தினைப் பார்க்கக் கிடைந்தது. சிறுவர் நூல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்ற இன்றைய சூழலில் (குறிப்பாக கனடாவில் அல்லது புலம்பெயர் நாடுகளில்) சிறுவர்களுக்கான நூலொன்றினைக் காண நேர்ந்தது ஈர்க்கவே அதனை எடுத்துப் பார்த்தேன். இந்த நூலினைக் கனடாவைச் சேர்ந்த ஆரணி ஞானநாயகன் என்கிற மாணவி எழுதியிருப்பது இன்னமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. தற்போது கனடாவில் 12ம் வகுப்பில் கல்விகற்று... Continue Reading →
குறமகள் என்றோர் ஆளுமை
சிறுபிராயம் ஈழத்தின் ஆரம்பகால பெண் எழுத்தாளர்களில் ஒருவரும், பெண்நிலைவாதிகளின் முன்னோடிகளில் ஒருவரும் என்ற வகையில் தவிர்க்கவே முடியாத ஆளுமைகளில் குறமகளும் ஒருவர் ஆவார். 1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி ஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற காங்கேசன்துறை என்கிற கிராமத்தில் ”முக்கந்தர்” எம். ஏ. சின்னத்தம்பி என்பவருக்கும் செல்லமுத்து என்பவருக்கும் மூத்தமகளாகப் பிறந்த இவரது உண்மைப்பெயர் வள்ளிநாயகி என்பதாகும். அந்நாட்களில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள் இலங்கையில் பல பகுதிகளிலும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ... Continue Reading →
கருணாவின் ஓவியக் கண்காட்சி
ஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடாவில் வசித்துவருகின்ற கருணாவின் ஓவியக் கண்காட்சி ஜனவரி மாதம் 14 ஆம், 15 ஆம் திகதிகளில் மார்க்கம் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. சமகாலத்தின் முக்கியமான ஓவியர்களில் ஒருவரும், வரைகலை நிபுணரும், புகைப்படக் கலைஞருமான கருணா அதற்கும் அப்பால் இதழ்கள், நாடகங்கள், அரங்க நிர்மாணம், இலக்கியம் என்று கலையின் பல்வேறு பரிமாணங்களிலும் முக்கிய பங்களிப்புகளை வழங்குகின்ற ஆளுமையும் ஆவார். கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கனடாவில்... Continue Reading →
புழுங்கலரிச் சோற்றுடன் குஞ்சுக்கணவாயின் புளி அவியல் | ”ஏழு கடல் கன்னிகள்”
தமயந்தி என்கிற பெயரினை, ஒரு ஆளுமையாக நிறையக் கேட்டிருக்கின்றேன். அவரது புகைப்படக் கண்காட்சி - அனேகம் அவரது முதலாவது கண்காட்சியாக இருக்கவேண்டும் - யாழ்ப்பாணத்தில் எண்பதுகளில் இடம்பெற்றதனை யேசுராசா ”பதிவுகள்” என்கிற தனது நூலில் பதிவுசெய்திருக்கின்றார். அவர் எடுத்த நிறையப் புகைப்படங்களை அவரது முகநூல் பதிவுகளூடாகப் பார்த்திருக்கின்றேன். சாதியம், அரசியல் உள்ளிட்ட கருத்துகளை குறிப்புகளாகவும், கட்டுரைகளாகவும் வாசித்திருக்கின்றேன். தவிர, எனக்கும் கூத்துக்கலை மீது ஆர்வம் இருப்பதால் அவர் பகிரும் கூத்துகள் தொடர்பான விடயங்களையும் காணொலிகளையும் பார்த்திருக்கின்றேன். ஈழத்துக்... Continue Reading →
“தன்னெஞ்சறிவது பொய்யற்க” என்பது மனிதருக்கான இயல்பு! -அ. யேசுராசாவுடன் ஓர் உரையாடல்-
1946 டிசம்பர் 30 அன்று ஈழத்தின் வடகரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கின்ற குருநகர் என்கிற கடலோரக் கிராமத்தில் பிறந்த யேசுராசா அவர்கள் ஈழத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரும், இலக்கியச் செயற்பாட்டாளர்களில் ஒருவருமாவார். இவர் ஈழத்தில் இலக்கியத்தின் போக்குப் பற்றிய விவாதங்களும் உரையாடல்களும் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த எழுபதுகளில் இலக்கியத்தின் உள்ளடக்கம், அழகியல் தொடர்பாகவும் படைப்பாளிகளுக்கான அறம், இதர கலை வடிவங்களில் இருக்கவேண்டிய பரிச்சயம் என்பன குறித்தும் தொடர்ச்சியாகப் பேசியும், வலியுறுத்தியும் வருபவர். இன்றுவரை ஈழத்தின் கலை இலக்கிய... Continue Reading →
ஓர் எழுதுவினைஞனின் டயறியை முன்வைத்து…
ஆனந்தமயிலின் எழுத்துகளையும், அவ்வாறு ஒரு எழுத்தாளர் இருந்தார் என்பதையும் மிக மிகத் தாமதமாக, அவர் இறந்தும் சில வருடங்களுக்குப் பின்பாகவே நான் அறிந்துகொண்டேன். சென்ற ஆண்டு யேசுராசா அவர்கள் எழுதிய நினைவுக்குறிப்பு ஒன்றினூடாகவே ஆனந்தமயில் பற்றிய அறிமுகம் எனக்குக் கிடைத்தது. சில காலங்களின் பின்னர் “ஓர் எழுதுவினைஞனின் டயறி” என்கிற அவரது சிறுகதைக் தொகுதியும் கிடைத்தது. படைப்பு என்பது ஓயாமல் பிரசவித்துக் கொண்டிருப்பது அல்ல, அது ஒரு எழுத்தாளரது இயல்பான மனவெழுச்சியாலும், பாதித்த, மனதிலும் நினைவுகளிலும் அசைபோட்ட... Continue Reading →
தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் : விமர்சன உரை
தமிழ்நதியின் பார்த்தீனியம் நூல்பற்றிய விமர்சன உரையை ஆற்றுமாறு நான் இங்கே கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றேன். கொடுக்கப்பட்ட கால இடைவெளிக்குள் சொல்லவேண்டிய விடயங்களைச் சொல்லிமுடிப்பது என்பது சவாலானது. எனக்குத் தரப்பட்டிருக்கின்ற கால இடைவேளைக்குள் இந்நாவல் பற்றி ஆவணப்படுத்தல், வராலாற்றெழுதியல் என்பவற்றில் அக்கறைகொண்டிருப்பவன் என்கிற பின்னணியுடன் கூடிய எனது விமர்சனத்தை இங்கே பகிர இருக்கின்றேன். அந்த அளவில் இந்த “விமர்சனமானது” முழுமையான விமர்சனமாக அமையாமல் இருக்கக்கூடும் என்பதை முற்குறிப்பாக கூறிக்கொள்ளுகின்றேன். இந்நாவலானது ஈழப்போராட்டத்தில், பெருமளவு இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்துகொள்ளத் தொடங்கிய 80களின்... Continue Reading →