வெளிப்படையானதும் வினைத்திறனையும் கொண்டதாக ஓர் உரையாடல் அமையவேண்டுமானால் நாம் உரையாடும் எதிர்த்தரப்பினர் என்ன சொல்கின்றார்கள் என்பதைக் கூர்மையாக அவதானிப்பதும், அதில் ஏதும் குழப்பம் இருப்பின் தெளிவுபடுத்திக்கொள்வதும், தாம் இருக்கும் நிலைப்பாட்டுடன் எதிர்த்தரப்பினர் சொல்லும் கருத்துநிலை / எடுக்கின்ற நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுத் தமக்குள் கேள்வி எழுப்பிக் கொள்வதும், அவர்கள் என்ன அர்த்தத்தில் (context) சொல்கின்றார்கள், எந்த உரையாடலின் அல்லது கடந்தகால நிலைப்பாடுகளின் தொடர்ச்சியாக அதைச் செய்கின்றார்கள் என்பதையும் முன் முடிவுகளோ அல்லது திரிவுபடுத்தல்களோ இல்லாமல் புரிந்துகொள்வதும், குறைந்த பட்சம்... Continue Reading →
தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?
ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவான ஆரம்ப காலத்தில் அதற்குத் தமிழ்நாட்டில் இருந்து திராவிடக் கட்சிகளும் திராவிட இயக்கங்களும் பெரும் ஆதரவைக் கொடுத்துக்கொண்டிருந்தன. கிட்டத்தட்ட இதே சமகாலத்தில் எமர்ஜென்சி மூலம் தமிழ்நாட்டில் நடந்த ஒடுக்குமுறைகள், ஒன்றிய அரசால் எப்போதும் கலைக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய நிலையிலேயே மாநில அரசுகள் கட்சிகளும் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தி இருந்தது. அதுபோலவே ஆயுதப் போராட்டத்தின் மூலம் புரட்சியை நடத்தி சோசலிச அரசை இந்தியாவில் ஏற்படுத்தலாம் என்ற நோக்குடன் இருந்த நக்ஸல்பாரிகளின் தாக்கத்தினைப் பெற்றிருந்த... Continue Reading →
கண்கள் இரண்டினில் ஒன்றை…
பெண்களுக்கான வோட்டுரிமையை 1931 முதலே வழங்கிய நாடென்ற பெயர் இலங்கைக்கு இருக்கின்றது; அரசியலில் பங்களிக்கும் உரிமையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையும் பெண்களுக்கு சமத்துவமானதென்கிற UN Convention on Eradication of all forms of Discriminations Against Women என்கிற உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நாடுகளில் ஒன்றென்ற வகையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவப்படுத்தலையும், பங்கேற்பையும் உறுதிப்படுத்தும் கடப்பாடும், அவர்கள் பங்களிக்க முன்வரும்போது எதிர்கொள்ளுகின்ற தடைகளை உடைப்பதற்கான கடப்பாடும் முக்கியமானது. ஆயினும் இலங்கைத் தேர்தல் திணைக்களத்தின் தரவுகளின்படி தற்போது இலங்கையில் மக்கள்... Continue Reading →
பாடசாலைச் சங்கங்கள்: பொறுப்புணர்வும் மதச்சார்பின்மையும்
குறிப்பு: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் அழைப்பில் ஆறு திருமுருகன் அவர்கள் கனடா வருகைதர இருப்பது குறித்த செய்தியொன்று வெளியாகி இருந்தது. இது குறித்து சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்த எனது நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்குடன் சங்கத்து நான் அனுப்பிய பதவி விலகல் கடிதத்தைப் பொதுவெளியில் பகிர்கின்றேன். இக்கடிதத்தை சங்கத்தின் நிர்வாக சபைக்கு அனுப்பியதுடன் சங்கத்தின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் இதனை அனுப்பிவைக்கும்படியும் கேட்டிருந்தேன். எனது பதவி விலகலை ஏற்றுக்கொண்ட சங்கத்தினர் அதனை அங்கத்தவருடன் பகிரும்படியான... Continue Reading →
கெடுப்பாரிலானுங் கெடும் இனம்
கடந்த சில நாட்களில் வெளித்தெரிய வந்த இரண்டு முக்கியமான பிரச்சனைகள் குறித்து இந்த அவதானம். சிவபூமி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மகளிர் இல்லங்களில் இருக்கும் சிறுமியர் கட்டாயமாகத் திறந்த வெளியில் குளிக்குமாறு பணிக்கப்பட்டதாயும் அவ்வாறு அவர்கள் குளிக்கும் இடங்களை நோக்கி CCTV கமரா பொறுத்தப்பட்டதாகவும் வெளிவந்துள்ள செய்தியில் மக்கள் அறம் சார்ந்து, அவ்வாறு நடந்திருப்பது உண்மையா என்றும் நடந்திருப்பின் சிவபூமி அறக்கட்டளை, அதன் நிர்வாகிகளை பொறுப்புக் கோரும்படி கேட்டுத்தான் குரலெழுப்பியிருக்கவேண்டும். ஆனால் பிரச்சனை, அது தொடர்பாக உதயன்... Continue Reading →
ஈழப்போராட்டம் குறித்த பிரச்சனைகள்
ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சனைகள், ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள், ஈழப்போராட்டத்தின் மூலோபாய தந்திரோபாய பிரச்சனைகள் என்கிற மூன்று நூல்களைக் கொண்ட நூற்தொகுதி ரகுமான் ஜான் அவர்கள் தொகுத்து, வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்த நூல்களுக்குள் நுழையமுன்னர் நூலின் தொகுப்பாசிரியர் ரகுமான் ஜான் குறித்து இந்நூலிலேயே தரப்பட்டுள்ள அறிமுகத்தைப் பார்ப்போம், ரகுமான் ஜான் தமிழீழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர், ஈழப்போராட்டத்தை அதன் குறுகிய எல்லைகளைக் கடந்து ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்பில் அரசியல் தலையீடு செய்யவேண்டும் என்பதில் தீவிரமாக... Continue Reading →
ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம்
அவருக்கு கிட்டத்தட்ட 70 வயது இருக்கும். நான் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் இன்னொரு பிரிவில் வேலை செய்பவர். அவ்வப்பொழுது காணும்போதெல்லாம் நலம் விசாரிப்புகளுடனும், காலநிலை குறித்து முறைப்பாடுகளுடனும், அண்மைக்காலமாக கொரனா குறித்த ஏதாவது ஒரு சில வார்த்தைகளுடனும் கடந்துபோவார். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரைக் கண்டபோது அவர் உற்சாகமான மனநிலையுடனும் மலர்ந்த முகத்துடனும் இருக்கின்றார் என்பதை கொரனாக் காலத்துக்காக அணிந்திருக்கின்ற முகவுறையூடாகவும் கண்டுகொண்டேன். தம்பி, எங்களுக்கு ஒரு விடிவு வந்திட்டுதுபோல இருக்கு என்றார்; என்ன கொரனாவுக்கு... Continue Reading →
செல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும்
போருக்குப் பிந்தைய காலத்தில் அபிவிருத்தி, மக்கள் நல உதவித்திட்டம், கல்விக்கான உதவி, மக்கள் எதிர்கொள்ளும் சமகாலப் பிரச்சனைகள் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு கவனப்படுத்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவைகுறித்து நேர்மறை / எதிர்மறையான பார்வைகளும் கேள்விகளும் உரையாடல்களுக்கான தேவைகளும் இருக்கின்றன. ஆயினும் சமூக பொருளாதார அடிப்படையிலான நோக்குகளும் ஆய்வுகளும் பொதுத்தளத்தில் நடப்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது. போருக்குப் பின்னைய காலத்தில் மட்டும்தான் இந்த நிலைமை என்றில்லாமல், அதற்குமுன்னரும் கூட இந்த உரையாடல்கள் பரவலாக்கப்படவில்லை என்றே சொல்லமுடியும். உள்ளூர்ப் பொருளாதாரம் பற்றிய... Continue Reading →
பிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்…
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியரும் பல்வேறு பாடநூல்களை எழுதியவருமான பிரான்சிஸ் மாஸ்ரர் என்றழைக்கப்படுகின்ற மனுவேல்பிள்ளை பிரான்சிஸ் அவர்கள் நவம்பர் 18 அன்று தனது 91வது வயதில் இயற்கையெய்தியிருக்கின்றார். அவரது இழப்பு, பலவாண்டுகளுக்கு முன்னர் அவரிடம் கற்ற பல்வேறு மாணவர்களுக்கும் கூட ஏற்படுத்தியிருக்க்கின்ற தாக்கத்தை அறியக்கூடியதாக இருக்கின்றது. பிரான்சிஸ் மாஸ்ரரிடம் நான் கல்விகற்கவில்லை; ஆனாலும் அவரிடமிருந்தும் கற்றுக்கொண்டேன். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் 2017 ஆம் ஆண்டிற்கான கலையரசி நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவம் செய்யப்பட்ட... Continue Reading →