நான் இணைந்து செயற்பட்ட சங்கமொன்றின் வருடாந்த நிகழ்வுகளில் கடவுள் வாழ்த்தும் வரவேற்பு நடனமும் தொடர்ச்சியாக நடக்கின்ற நிகழ்வுகளாக இருந்தன. மதச்சார்பின்மையையும் மரபுரிமையையும் கருத்திற்கொண்டு இவற்றுக்குப் பதிலாக மதச்சார்பின்மையையும், சமூகநீதி அரசியலையும் விஞ்ஞான ரீதியிலான பார்வையையும் கொண்டதான நிகழ்வொன்றைச் செய்து நிகழ்வை ஆரம்பிக்கவேண்டும் என்று நாம் முடிவெடுத்திருந்தோம். அதன் விளைவாக “ஈழநிலத்தார் அழைப்பாடல்” என்று ஒரு நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது. அதன் ஒவ்வொருவரியையும் மிகவும் அவதானமாக, சமூக முன்னேற்றத்துக்கும் அறிவியல் பார்வைக்கும் உரியதாக இருக்கவேண்டும் என்ற நோக்கம் எமக்கிருந்தது.... Continue Reading →
தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?
ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவான ஆரம்ப காலத்தில் அதற்குத் தமிழ்நாட்டில் இருந்து திராவிடக் கட்சிகளும் திராவிட இயக்கங்களும் பெரும் ஆதரவைக் கொடுத்துக்கொண்டிருந்தன. கிட்டத்தட்ட இதே சமகாலத்தில் எமர்ஜென்சி மூலம் தமிழ்நாட்டில் நடந்த ஒடுக்குமுறைகள், ஒன்றிய அரசால் எப்போதும் கலைக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய நிலையிலேயே மாநில அரசுகள் கட்சிகளும் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தி இருந்தது. அதுபோலவே ஆயுதப் போராட்டத்தின் மூலம் புரட்சியை நடத்தி சோசலிச அரசை இந்தியாவில் ஏற்படுத்தலாம் என்ற நோக்குடன் இருந்த நக்ஸல்பாரிகளின் தாக்கத்தினைப் பெற்றிருந்த... Continue Reading →
ஆறுமுகநாவலர்: பதிப்புச் செயற்பாடா? மதச்செயற்பாடா?
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஒருங்கிணைத்த கருத்தரங்கில் ரா. கமலக்கண்ணன் பேசிய ஆறுமுக நாவலரின் பதிப்புச் செயற்பாடுகள் என்கின்ற உரையை யூட்யூபில் பார்த்தேன். இதில் ஆறுமுகநாவலர் சைவத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக தமிழினை ஒரு கருவியாக பாவித்தார் என்று கூறி ஆறுமுகநாவலர் தனது நிலைப்பாட்டில் இருந்து சரியாகத்தான் செயற்பட்டார் என்ற வாதத்தை முன்வைத்துப் பேசி இருக்கின்றார் கமலக்கண்ணன். இந்த உரையில் கிறிஸ்தவ மிஷனரிகள் இலங்கையில் மதப்பரப்பினைச் செய்யும் பொழுது கல்விக்கூடங்களை நிறுவினார்கள், பதிப்புக்கூடங்களை நிறுவி நூல் பதிப்புகளைச்... Continue Reading →
பால் – பாலியல், காமம் – காதல், பெண் – பெண்ணியம்: ஓர்ஆண்நிலைநோக்கு : உரையாடல் ஒன்றுக்கான குறிப்புகள்
குறிப்பு: மீராபாரதி எழுதிய பால் பாலியல், காமம் காதல், பெண் பெண்ணியம் – ஓர் ஆண் நிலை நோக்கு என்கிற நூலின் வெளியீட்டினை முன்வைத்து ரொரன்றோவில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும்படி நூலாசிரியர் மீராபாரதி கேட்டிருந்தார்.. இந்நூல் பேசுகின்ற விடயமும் அது பற்றி மீராபாரதி அவர்கள் கொண்டிருக்கின்ற அக்கறையும் முக்கியமானது. அந்த வகையில் இந்நூலையும் அதில் உள்ள கட்டுரைகளையும் தன் அக்கறையின் பாற்பட்டும், தான் கொண்ட கருத்தியலின் மீதிருக்கும் நம்பிக்கையின் பாற்பட்டும் மீராபாரதி தன்னோடும் சமூகத்தோடும் தொடர்ச்சியாக நடத்திய... Continue Reading →
மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள்
தேர்தல் பரபரப்புகள் நடந்துகொண்டிருந்த அதே சமகாலப் பகுதியில் சைவ மகாசபையின் ஏற்பாட்டில் எழுப்பப்பட்ட இராவணன் சிலை பற்றிய குறிப்பொன்றினையும் சைவ மகாசபையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பரா. நந்தகுமாரின் முகநூலில் காணநேர்ந்தது. தேர்தல் பற்றிய தொடர்ச்சியான செய்திகள், பரபரப்பு என்பனவற்றாலும், தொடர்ச்சியாக மதவாதப்போக்கு அதிகரித்துச் செல்வதை அவதானிப்பதில் ஏற்படுகின்ற சலிப்பாலும் இதையும் கடந்துபோகவே விரும்பினாலும் சில விடயங்களை நாம் உரையாடுவது அவசியம் என்று கருதுகின்றேன். ஈழத்தில் இப்படியாக இராவணனை இராவணேசுவரர் என்கிற ”சைவத் தமிழ்” அடையாளங்களுடன் முன்னிறுத்துகின்ற போக்கினையும்... Continue Reading →
ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம்
அவருக்கு கிட்டத்தட்ட 70 வயது இருக்கும். நான் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் இன்னொரு பிரிவில் வேலை செய்பவர். அவ்வப்பொழுது காணும்போதெல்லாம் நலம் விசாரிப்புகளுடனும், காலநிலை குறித்து முறைப்பாடுகளுடனும், அண்மைக்காலமாக கொரனா குறித்த ஏதாவது ஒரு சில வார்த்தைகளுடனும் கடந்துபோவார். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரைக் கண்டபோது அவர் உற்சாகமான மனநிலையுடனும் மலர்ந்த முகத்துடனும் இருக்கின்றார் என்பதை கொரனாக் காலத்துக்காக அணிந்திருக்கின்ற முகவுறையூடாகவும் கண்டுகொண்டேன். தம்பி, எங்களுக்கு ஒரு விடிவு வந்திட்டுதுபோல இருக்கு என்றார்; என்ன கொரனாவுக்கு... Continue Reading →
ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு
பண்பாட்டுப் படையெடுப்பு என்பது பற்றிப் பலதடவைகள் வெவ்வேறு இடங்களில் பேசியிருக்கின்றோம் என்றாலும் இப்போதையை சூழலில் இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு என்றால் என்னவென்பதைப் பற்றி நாங்கள் சற்று ஆழமாக யோசிக்க வேண்டி இருக்கின்றது. நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பின் தாக்கங்களும் அதன் விளைவுகளும் புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்திலும் தீவிரடைந்து இருப்பதை அண்மைக் காலங்களில் நிகழும் சம்பவங்கள் ஊடாக நம்மால் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. பொதுவாக படையெடுப்பு என்கிறபோது அதை போர் சம்பந்தமாகவும் ராணுவத்துடன்... Continue Reading →