புத்தாண்டு தினக் கொண்டாட்டங்கள் பற்றிய கட்டுரைக்கான எதிர்வினை

புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களின்போது (ஜனவரி 01, 2017 அன்று) பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் ரீதியான வன்முறைகளை முன்வைத்து அகில்குமார் என்பவர் எழுதிய காமத்தைக் கொண்டாடுதல் என்கிற பதிவினைப் படிக்கநேர்ந்தது.  இந்தப் பதிவு பலராலும் தொடர்ச்சியாக பகிரப்பட்டும் வந்ததை அவதானித்ததன் அடிப்படையில் அதுபற்றிய சிலவிடயங்களைப் பகிர்வது முக்கியமானது எனக் கருதுகின்றேன்.  பொதுவாகவே எமது சமூகத்தில் பெண்கள் பற்றியதாக இருக்கின்ற பொதுப்புத்தியின் அடிப்படையிலான எதிர்பார்ப்புகளும், ஆணாதிக்கப் போக்கும் பெண்ணை ஒரு பண்டமாக நினைக்கின்ற போக்கும் இது போன்ற நிகழ்வுகளின்... Continue Reading →

வெற்றிச்செல்வியின் “ஒரு போராளியின் காதலி”

ஒரு போராளியின் காதலி என்கிற இந்த நாவலானது ஈழப்போரின் இறுதிக்கட்டங்களின் நடந்த சம்பவங்களை வைத்து எழுதப்பட்டிருக்கின்றது.  இதனை எழுதிய வெற்றிச்செல்வி மன்னாரில் 1974 இல் பிறந்து 1991 இலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தன்னை இணைத்து ஈழப்போராட்டத்தில் ஈடுபட்டவர்.  வெடிவிபத்தொன்றில் தனது வலது கண்ணையும் வலது கையையும் இழந்த வெற்றிச்செல்வி தொடர்ந்தும் ஊடகத்துறையில் நிதர்சனம், புலிகளின் குரல், சுதந்திரப் பறவைகள் ஆகியவற்றில் தனது பங்களிப்புகளைத் தொடர்ந்து செய்துள்ளார்.  ஆரம்பத்தில் வலது கைப் பழக்கமுள்ளவராக இருந்தபோதும் பின்னர் இடது கையால்... Continue Reading →

புழுங்கலரிச் சோற்றுடன் குஞ்சுக்கணவாயின் புளி அவியல் | ”ஏழு கடல் கன்னிகள்”

தமயந்தி என்கிற பெயரினை, ஒரு ஆளுமையாக நிறையக் கேட்டிருக்கின்றேன்.  அவரது புகைப்படக் கண்காட்சி - அனேகம் அவரது முதலாவது கண்காட்சியாக இருக்கவேண்டும் - யாழ்ப்பாணத்தில் எண்பதுகளில் இடம்பெற்றதனை யேசுராசா ”பதிவுகள்” என்கிற தனது நூலில் பதிவுசெய்திருக்கின்றார்.  அவர் எடுத்த நிறையப் புகைப்படங்களை அவரது முகநூல் பதிவுகளூடாகப் பார்த்திருக்கின்றேன்.  சாதியம், அரசியல் உள்ளிட்ட கருத்துகளை குறிப்புகளாகவும், கட்டுரைகளாகவும் வாசித்திருக்கின்றேன்.  தவிர, எனக்கும் கூத்துக்கலை மீது ஆர்வம் இருப்பதால் அவர் பகிரும் கூத்துகள் தொடர்பான விடயங்களையும் காணொலிகளையும் பார்த்திருக்கின்றேன்.  ஈழத்துக்... Continue Reading →

தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் : விமர்சன உரை

தமிழ்நதியின் பார்த்தீனியம் நூல்பற்றிய விமர்சன உரையை ஆற்றுமாறு நான் இங்கே கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றேன்.  கொடுக்கப்பட்ட கால இடைவெளிக்குள் சொல்லவேண்டிய விடயங்களைச் சொல்லிமுடிப்பது என்பது சவாலானது.  எனக்குத் தரப்பட்டிருக்கின்ற கால இடைவேளைக்குள் இந்நாவல் பற்றி ஆவணப்படுத்தல், வராலாற்றெழுதியல் என்பவற்றில் அக்கறைகொண்டிருப்பவன் என்கிற பின்னணியுடன் கூடிய எனது விமர்சனத்தை இங்கே பகிர இருக்கின்றேன்.  அந்த அளவில் இந்த “விமர்சனமானது” முழுமையான விமர்சனமாக அமையாமல் இருக்கக்கூடும் என்பதை முற்குறிப்பாக கூறிக்கொள்ளுகின்றேன். இந்நாவலானது ஈழப்போராட்டத்தில், பெருமளவு இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்துகொள்ளத் தொடங்கிய 80களின்... Continue Reading →

பிரதீஸ் என்றொரு நண்பன் அல்லது ஜூலை 09, 1995

அருண்மொழிவர்மன்'s avatarஅருண்மொழிவர்மன் பக்கங்கள்

downloadபிரதீஸுடன் நான் எப்போது நெருக்கமாக இருந்தேன் என்பது எனக்கு இன்றும் சரிவர தெரியவில்லை எனது முதல் நண்பன் யாரென்று இப்போது இணைய தளங்களில் கடவுச்சொல்லை ஞாபகப்படுத்தக் கேட்கும்போதெல்லாம் அவனது பேர் தான் ஞாபகம் வருகின்றது. ஆனால் எந்தக் காலப்பகுதியிலும் எனக்கு ஆக நெருக்கமான நண்பனாக அவன் இருந்ததில்லை.

அப்போது நாங்கள் நவாலியில் இருந்தோம். நவாலி மகாவித்தியாலயம் என்ற பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பு படித்துவந்தேன். புதிய இடம். புதிய சூழல். எவருடனும் பெரிதாக நெருங்கி பழக முடியவில்லை. கொழும்பில் இருந்துவிட்டு வந்திருந்ததால் எனது பேச்சுத் தமிழ் கூட அவர்கள் பேசிய தமிழுடன் வேறுபட்டு இருந்திருக்கலாம். இதனால் பள்ளிக்கூடம் போவதே ஏதோ சிறைக்கு போவதை போன்று இருந்தது. இந்த நாட்களில் தான் பிரதீஸ் அறிமுகம் ஆனான். ஏதோ அவனுடனும் துளசி(1) என்ற இன்னொருவனிடமும் தான் கொஞ்சம் பழக ஆரம்பித்தேன்.

எப்போதும் அந்த பள்ளிக்கூட நண்பர்களை விட்டு விலகியே இருந்த என்னை அவன் மெல்ல மெல்ல பூமிக்கு இழுத்துவந்தான். ஒரு மழை நாளில் பள்ளிக்கூட ஆசிரியர்கள் வராமல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது இரண்டு கற்களை எப்படி காந்தம் ஆக்குவது(2) என்ற ரகசியத்தை எனக்கு மட்டும் சொல்லி தந்தான். அந்த வயதிலேயே அவனுக்கு நிறைய விடயங்கள் தெரிந்திருந்தன. பூக்களை அவற்றின் காம்பை பிடித்து கிள்ளும்போது அவை விழும் விதத்தில் இருந்து ஆண் பூவா பெண் பூவா என்று கண்டறியும் வித்தையை(2) ஒரு முறை எனக்கு பள்ளிக்கூடம் விட்டு வரும்போது…

View original post 854 more words

அகரமுதல்வனின் “சாகாள்” : சில குறிப்புகள்

அகரமுதல்வனின் சாகாள் கதை மே 2009 இல் ஈழப்போராட்டம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட பின்னரான பெண்போராளிகளின் நிலையையும் அவர்கள் இராணுவத்தின் பிடியில் இருந்தபோது என்ன நடந்தது என்பதையும் சித்திகரிப்பதாக அமைகின்றது.  அந்தக் கதையினை அவர் சிவகாமி என்கிற விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான பெண்தலைவர் ஒருவரை மையமாகக்கொண்டு கதை எழுதுகின்றார்.  இந்தக்கதை பேசுவது முழுக்க சிவகாமி பற்றியதே என்பதுடன் இது சிவகாமியைப் பற்றி எழுதுவதற்காகவே எழுதப்பட்ட கதை என்பதே உண்மை.  இந்த சிவகாமி என்பவர் அண்மையில் காலமான தமிழினி அவர்களே என்பதை... Continue Reading →

லண்டன்காரர்: அறிமுக உரை

ஈழத்து இலக்கியம், ஈழத்தவர் அடையாளம், அவர்கள் வாழ்வியல் பற்றிய கேள்விகளும் உரையாடல்களும் பெருமளவில் அண்மைக்காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.  அண்மைக்காலமாக ஈழத்தவர்களது நாவல்களாகவும், குறுநாவல்களாகவும் பல்வேறு வெளியீடுகளையும் வாசிக்கக் கிடைத்திருக்கின்றது.  இவற்றின் பொதுத்தன்மையை எடுத்துக்கொண்டால் இவற்றில் பெரும்பாலனவை ஈழப்போரின் பிந்தைய காலகட்டங்களில் வெளியானவை, ஓரளவு சுய அனுபவக் குறிப்புகளை உள்வாங்கியவை.  அது தவறானதும் அல்ல.  கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான அரசியல் குழப்பங்களும், இடது சாரிய புரட்சிகர நடவடிக்கைகளிற்கான முயற்சிகளும், சாதி ஒழிப்பு உள்ளிட்ட சமூகப் போராட்டங்களும் 30... Continue Reading →

மொழிபெயர்ப்பு : சவால்களும் சில பரிந்துரைகளும்

அண்மையில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது விளம்பரம் ஒன்றில் “துமித்தலையில் நீர் வடிகின்றதா?” என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறி, அவர்கள் எதனைக் குறிப்பிடுகின்றார்கள் என்பதை என்னால் அனுமானிக்கமுடிகின்றதா என்று கேட்டிருந்தார்.  சற்று யோசித்தேன்.  எதையும் ஊகிக்க முடியாமல் என்ன சொல்கின்றார்கள் என்று கேட்டேன்.  Shower Head என்பதற்கான தமிழ்ச் சொல்லாகவே அவர்கள் “துமித்தலை” என்பதைப் பயன்படுத்துகின்றார்கள் என்று குறிப்பிட்டார்.  Shower Head என்பதற்கான சரியான சொல் தமிழில் இல்லை என்ற அளவில் அதற்கான சொல்லாக்கம் செய்யப்படவேண்டியதன் அவசியம் முக்கியமானதே.  அதேநேரம்... Continue Reading →

“தமிழரின் வாழ்வியற்கலையே சிலம்பம்!”

பழந்தமிழரின் ஆதிக்கலைகளில் முக்கியமானது சிலம்பம்.  சிலம்பல் என்கிற சொல்லுக்கு ஓசை என்பது பொருள்.  இன்றும் கூட வழக்கத்தில் தண்ணீருக்குள் கையையோ காலையோ வீசு சிறுவர்கள் ஓசை எழுப்புகின்றபோது “சிலம்பாதே” என்று பெரியோர்கள் கூறுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  சிலம்ப விளையாட்டில் கம்பினை வேகமாக வீசும்போது அது காற்றைக் கிழித்து ஓசை எழுப்புவதாலும், கம்புகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஓசை எழுப்புவதனாலும் அதற்கு சிலம்பம் என்கிற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.  மலைகளில் தொடர்ச்சியாக அருவிகளதும், பறவைகளதும் மிருகங்களதும் ஓசைகள் கேட்டுக்கொண்டிருப்பதால்... Continue Reading →

ஈழத்தவரின் குறும்படங்களின் தேவைகள் | எம்மீது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு

ஈழத்தமிழர்களாகிய நாம் இன்று நமக்கான பண்பாட்டு அடையாளங்களைத் தனித்துவமானதாகப் பேண வேண்டிய மிகக் கடுமையான சவாலை எதிர்நோக்கியவாறு உள்ளோம்.  30 ஆண்டுகளாகத் தொடர்ந்த போரிற்குப் பின்னரான இன்றைய காலங்களில் பண்பாட்டுப் படையெடுப்பானது மிக வேகமாக எம்மை நோக்கி முடுக்கிவிடப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வட இந்தியப் பாணிகளையும், பண்பாட்டு முறைகளையும் எமது சடங்குகளில் இணைத்துவிடும் போக்கு மிக வேகமாகப் பரவிவருகின்றது.  கடந்த 10 ஆண்டுகளில் கனடாவில் திருமண வீடு அல்லது திருமணச்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑