நாவல்களையும், சிறுகதைகளையும் திரைப்படங்களாக்குவது பற்றி பல்வேறு இடங்களில் பேசப்பட்டிருக்கின்றது. தமிழ்த் திரைப்படங்களில் கதையம்சம் மிகவும் பலவீனமாக இருப்பது பற்றிப் பேசும்போதெல்லாம், நாவல்களும், இலக்கியங்களும் திரைப்படங்களாக்கப்படவேண்டும் என்பதுவும் பரவலாக முன்வைக்கப்படும் ஆலோசனை. ஆரம்ப காலங்களில் தனது நாவல்களான காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, பிரியா போன்றன திரைப்படங்களாக எடுக்கப்பட்ட போது அவை நாவல்களாக இருந்தபோது கொண்டிருந்த ஜீவனை இழந்து, மிகவும் அந்நியமாக வெளிவந்ததாக சுஜாதா பல்வேறு பத்திகளில் எழுதி இருக்கின்றார். பதின்மங்களில் பலருக்கும் பிடித்திருந்த அவரது பிரிவோம் சந்திப்போம் பின்னர்... Continue Reading →
C-51 குடியுரிமையையும் சுதந்திரத்தையும் பறிக்கிறது -ராதிகா சிற்சபைஈசன்
கனடாவைப் பொறுத்தவரை நாம் பார்த்தால் கனடிய மைய நீரோட்ட அரசியலில் ஈடுபடும் தமிழர்களில் அனேகம் பேர் இலங்கையில் தமது ஆரம்பக் கல்வியைக் கற்று கனடாவிற்கு தமது மத்திம வயதுகளில் வந்தவர்கள். இந்த இடத்தில் நீங்கள் மிகச் சிறிய வயதில் கனடாவிற்கு வந்திருக்கின்றீர்கள். இலங்கை போன்ற ஒரு நாட்டில் இன முரண்பாடுகள் கூர்மை பெற்றிருக்கின்றபோது அங்கு அரசியல் ஆர்வம் வருவதற்கான காரணமும், உந்துதலும் வேறு. உங்களது நிலைமையில் அது வேறு. மையநீரோட்ட அல்லது நாடாளுமன்ற அரசியல் தொடர்பான உங்கள்... Continue Reading →
ஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ
கௌரவன் பாரதக்கதை என்பது அனேகம் எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் மிக மிகப் பெரும்பாலோனோர் முழுமையாக வாசித்திராத தொன்மங்களில் ஒன்றாகும். எனக்கு ஏழு / எட்டு வயதிருக்கும்போது வாசித்த கைக்கடக்கமான மகாபாரதப் பிரதி முதலே மகாபாரதத்தின் மீதான் என் ஈர்ப்பு அதிகரித்தே சென்றது. ஆயினும் வாசித்த குறிப்பிடத்தக்க அளவிலான முதலாவது மகாபாரதம் என்றால் ராஜாஜி எழுதிய “வியாசர் விருந்து” தான் நினைவுக்கு வருகின்றது. இராமாயணத்துடனான எனது அறிமுகமும் ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தித் திருமகன் ஊடாகவே நிகழ்ந்தது இங்கு குறிப்பிட்டுச்... Continue Reading →
ஈழத்தமிழ் அடையாளங்கள் பேணப்படவேண்டும் என்பதாலேயே பொங்குதமிழ் என்று பெயரிட்டேன்! – சுரதா யாழ்வாணனின் நேர்காணல்
இன்று இணையத்தில் தமிழ் படிப்பதும், பகிர்வதும் மிக இலகுவானதாக இருக்கின்றது. தமிழ் தேடுபொறிகள், வலைப்பதிவுகள், தமிழ் தட்டச்சுக்கான மென்பொருட்கள் எழுத்துருக்கள் என்று பெருவளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளுக்குள் வேகமாக அரங்கேறியிருக்கின்றது. இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்திய முன்னோடிகளுள் ஒருவர் சுரதா யாழ்வாணன். யுனிக்கோடு பரவலான பாவனைக்கு வருவதற்கு முன்னைய காலங்களில் தமிழில் வெவ்வேறு இணையத்தளங்களும் வெவ்வேறு எழுத்துருக்களைப் பாவித்து வந்தன. அந்தத் தளங்களைப் பார்ப்பதற்கு வெவ்வேறு எழுத்துருக்களை கணனியில் நிறுவ வேண்டியது அவசியமானதாக இருந்தது. இது ஒருவிதத்தில் தமிழ்... Continue Reading →
சட்டநாதனின் “மாற்றம்” சிறுகதைத் தொகுப்பு…
எழுபதுகளின் தொடக்கங்களில் எழுதத் தொடங்கிய படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்புகளை அண்மைக்காலமாக வாசித்துவருகின்றபோது இந்தக் காலகட்டத்தில் உள்ளடக்கம் சார்ந்தும், சொல்லப்படும் விதம் சார்ந்தும் முக்கியமானதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது என்று உறுதியாகக் கூறமுடிகின்றது. அறுபதுகளில் ஈழத்தில் இடம்பெற்ற இலக்கியம் பற்றிய விவாதங்களையும் அந்நேரத்தில் முன்வைக்கப்பட்ட முற்போக்கு இலக்கியம் பற்றிய வரையறைகளையும் தொடர்ந்து கலையமைதிக்கு முக்கியத்துவம் கொடுத்து, உள்ளடக்கத்திலும் பல்வேறு புதிய கருக்களைப் படைப்புகளூடாகப் பேசிய காலப்பகுதியாக இது அமைகின்றது. குறிப்பாக தனிமனிதர்களுக்கிடையிலான உறவுகள், அதனால் எழுகின்ற சிக்கல்கள், சமத்துவத்தையும், விடுதலையையும்... Continue Reading →
அதனிலும் கொடிது முதுமையில் தனிமை
ஆரஞ்சு மிட்டாய் படம் பார்த்தேன். இன்றைய அவசர உலகில் உறவுகளின் அபத்தம், தனிமனிதத் தேர்வுகளின் மீது லௌதீக காரணிகள் திணிக்கும் தாக்கம் அல்லது நெருக்கடிகள் பற்றி இத்திரைப்ப்டம் விவரிக்க முயலுகின்றது. நன்றாக எடுத்திருக்கக் கூடிய கதை. ஆனால் திரைக்கதையின் பலவீனத்தாலும், கதையை நகர்த்திச் செல்வதில் ஓரளவு வெளிப்படையாகவே தெரிந்த குழப்பத்தாலும், பொறுத்தமற்ற பாத்திரத் தேர்வுகளாலும் சற்றே தள்ளாடித் தள்ளாடி.... ஆயினும் நல்ல திரைப்படம் ஒன்றைக் கொடுக்கவேண்டும் என்ற ஆர்வம் விஜய் சேதுபதியிடமும், பிஜூ விஸ்வநாத்திடமும் இருப்பது வெளிப்படையாகத்... Continue Reading →
பெரியண்ணன்கள் கவனம்!
அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியர் கண்ணன் பாமினி எழுத்துருக்களைப் பற்றிச் சில கருத்துகளைக் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து முகநூலில் தொடர்ச்சியான விவாதம் ஒன்று இடம்பெற்றது. அந்தக் குறிப்பினைப் பார்த்தபோது அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை விட கண்ணனின் தொனியே மிகவும் மோசமானதாகவும், மேட்டிமைத்தனத்தைத் காட்டுவதாயும் அமைந்திருந்தது. அதைத்தொடர்ந்து தனது சிறுகதைகளால் பரவலாக அறியப்பட்ட ரஞ்சகுமார் கண்ணனின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவர் முன்வைத்த முக்கிய வாதம், //எல்லோருக்கும் உடனே புரியக்கூடிய ஒரேயொரு... Continue Reading →
ஐ. சாந்தனின் “காலங்கள்”
எனது சிறிய வயதில் நான் நேரடியாகக் கண்டறிந்துகொண்ட முதல் எழுத்தாளர் என்று ஐ. சாந்தனையே சொல்ல முடியும். அவரது கிராமத்தையே நானும் சேர்ந்தவன் என்பது அதற்கான வாய்ப்பினையும் எனக்கு நல்கியது எனலாம். அப்போது நான் படித்துக்கொண்டிருந்த சிறுவர் பாடசாலையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் 1987ல் நடைபெற்றன. அந்நிகழ்வுகளின் போதோ அல்லது அதனைத் தொடர்ந்து வந்த ஒருசில ஆண்டுகளிலோ இடம்பெற்ற ஏதோ ஒரு பாடசாலை விழாவில் சாந்தன் அவர்களின் இயக்கத்தில் “சுப்பன்ணாவும் சோமன்ணாவும்” என்றொரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்த... Continue Reading →
மீசை என்பது வெறும் மயிர் | சிறுவர் நூல்கள் | “தழும்பு” குறும்படம்
மீசை என்பது வெறும் மயிர் புனைவு நூலொன்றின் புனைவு எதில் இருந்து தொடங்குகின்றது? என்பதைக் கேள்வியாக எழுப்பி, புனைவு நூலொன்றின் புனைவு அதன் அட்டையில் இருந்தே தொடங்குகின்றது என்று நந்தஜோதி பீம்தாஸ் கூறுவதாக “மீசை என்பது வெறும் மயிர்” என்கிற நூலில் வருகின்றது. என்ன சுவாரசியம் என்றால் புனைவினை அதன் முன்னட்டையில் இருந்து பின்னட்டை வரை புனைவாகவே கொண்டமைந்த நூல் என்று மீசை என்பது வெறும் மயிரே அமைகின்றது. யார் இந்த நந்தஜோதி பீம்தாஸ்? நாடு திரும்பாத... Continue Reading →
தேவகாந்தனின் கனவுச்சிறை : அறிமுக உரை
ஈழத்துப் படைப்பாளிகளில் மிக நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் அரிது. மிக அருமையான படைப்பிலக்கியங்களை ஆக்கிய பலர் இள வயதிலேயே மரணித்துள்ளார்கள். இன்னும் பலர் மிகச் சில படைப்புகளுடன் தம் எழுத்துகளை மட்டுப்படுத்திக்கொண்டுவிட்டார்கள். இந்த நிலையில், நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் எழுதிக்கொண்டிருக்கின்ற காத்திரமான படைப்பாளிகளுள் ஒருவர் தேவகாந்தன். “எங்கள் குடும்பம் அடிஅடியாக தமிழ்ப் புலவர் பரம்பரையில் வந்தது என்று என் தாயார் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்று மின்னம்பலத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தேவகாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார். தனது எழுத்துலகப் பிரவேசம் குறித்த... Continue Reading →