ரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ் ரொரன்றோவில் இருந்து வசந்த காலத்துக்கும் கோடை காலத்துக்கும் சேர்த்து ஓர் இதழாகவும், இலையுதிர் காலத்துக்கும் பனிக்காலத்துக்கும் சேர்த்து ஓர் இதழாகவும் ஆண்டொன்றிற்கு இரண்டு இதழ்களாக சென்ற ஆண்டு முதல் The Humber Literary Review என்கிற இலக்கிய இதழ் ஒன்று வெளிவருகின்றது. இதன் மூன்றாவது இதழில் The Pharaoh’s Refusal or, The Right To Eat Peas With Knife” என்கிற Alberto Manguel எழுதிய அருமையான கட்டுரை... Continue Reading →
நந்தினி சேவியரின் “அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்”
சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்கள் இணைந்து நந்தினி சேவியரின் “நெல்லிமரப் பள்ளிக்கூடம்” என்கிற சிறுகதைத் தொகுப்பினைப் பற்றிய அறிமுகம் ஒன்றினைச் செய்வதற்குத் திட்டமிட்டிருந்தனர். அதன் நிமித்தம் நெல்லிமரப் பள்ளிக்கூடத்தினை வாசித்ததன் ஊடாக நந்தினி சேவியரின் அறிமுகம் எனக்கு நிகழ்ந்தது. அதன் பின்னர் அண்மையில் விடியல் பதிப்பகம் வெளியிட்ட “நந்தினி சேவியர் படைப்புகள்” என்கிற தொகுப்பினையும் வாசிக்கக் கிடைத்தது. ஈழத்துப் படைப்பாளி ஒருவரின் படைப்புகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்பது மகிழ்ச்சிகரமானது என்றாலும், அவர் எழுதிய 30 சிறுகதைகளில் 16 மட்டுமே... Continue Reading →
ஆவணப்படுத்தலும் தமிழர்களும்
எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று நகர்கின்ற தமிழ்த் திரைப்படப்பாடல்களின் காலகட்டங்களில் நான் இளையராஜாவின் பாடல்களை அதிகம் விரும்புபவன் என்றாலும் எம்.எஸ். விஸ்வநாதனின் பல பாடல்கள் எனது நிரந்தர விருப்பப் பாடல்களாக இருக்கின்றன. ராஜநடை திரைப்படத்தில் வருகின்ற கஸ்தூரி மான்குட்டியாம் மற்றும் தென்றலுக்குத் தாய்வீடு பொதிகை அல்லவா என்கிற பாடல்களின் மெட்டுகள் எனக்கு எப்போதும் பிடித்தவை. அவரது எத்தனையோ பிரபலமான மெட்டுகளையும் பாடல்களும் இருக்க எனக்கு இந்த இரண்டு பாடல்கள் பிடித்தமையானவையாக இருப்பதற்கு எனக்கேயான தனிப்பட்ட காரணங்கள்... Continue Reading →
அகாலம் கட்டுரை தொடர்பான புஷ்பராணியின் முகநூல் பதிவிற்கான பதில்
புஷ்பராணி அவர்களுக்கு, அகாலம் குறித்து நான் வாசித்த கட்டுரை தொடர்பான உங்களது கருத்துக்களைப் பகிர்ந்திருந்தீர்கள். நன்றி. அவை தொடர்பாக எனது விளக்கங்கள். அகாலத்தை ஒரு அனுபவப்பிரதியாக எழுதி இருந்தீர்கள். எனவே நீங்கள் எவ்விதம் உணருகின்றீர்களோ அல்லது உங்கள் நிலைப்பாடு எவ்விதம் இருக்கின்றதோ அதுவே உங்கள் பிரதியில் பதிவாகும். அதே நேரம் அகாலத்தை மட்டுமல்லாமல் ஈழப்போராட்டம் தொடர்பான அனைத்துப் பிரதிகளையும் ஆர்வமுடம் படிப்பதும், அவை பற்றிய உரையாடல்களில் ஈடுபடுவதும் ஒருவிதத்தில் ஈழப்போராட்டம் தொடர்பான case study ஒன்றுக்கான எனது... Continue Reading →
ஒருநாள் : சாத்தனூர் என்னும் “கனவுக் கிராமம்”
ஒரு மாற்றத்திற்காக தொடர்ச்சியாக சில புனைவுகளைப் படித்துக்கொண்டிருப்பதுவும் நல்லதோர் அனுபவமாகவே இருக்கின்றது. அந்த வகையில் க.நா.சு எழுதிய சர்மாவின் உயில், ஒருநாள் ஆகிய இரண்டு புனைவுகளையும் அடுத்தடுத்து வாசிக்கமுடிந்தது. “ஒருநாள்”, சாத்தனூர் என்கிற கற்பனை கிராமத்தில் மேஜர் மூர்த்தி கழிக்கின்ற ஒருநாளில் நிகழ்கின்ற நிகழ்வுகளையும், அவனது நினைவு மீட்டல்களையும், அவன் நிகழ்த்துகின்ற உரையாடல்களையும், அவை ஏற்படுத்துகின்ற சிந்தனைகளையும் கொண்டு எழுதப்பட்டது. அமைப்பு ரீதியில் இதனை குறுநாவல் என்று சொல்லலாம் என்று நினைக்கின்றேன். கிருஷ்ணமூர்த்தி என்கிற மூர்த்தி பெற்றோரை... Continue Reading →
மரண தண்டனையும் ஒரு கொலையே! – சமஸின் கட்டுரைக்கான எதிர்வினை
அண்மைக்காலமாக பலராலும் முக்கியமான சமகாலத்தியக் கட்டுரையாளாராகக் குறிப்பிடப்படுபவர் சமஸ். அவ்வாறு குறிப்பிடப்படத் தொடங்கிய காலம் முதற்கொண்டே அவரது கட்டுரைகளைப் படித்துவருகின்றேன். சமஸ் பற்றிய எனது கணிப்பு என்னவென்றால் அவர் மைய நீரோட்ட / வெகுஜன கருத்துகளை முற்போக்குத் தோரணையுடன் வெளியிடுபவர் என்பதே! இந்தப் போக்கினைப் பின்பற்றுபவர்களும் அவர்களின் செயற்பாடுகளின் விளைவுகளும் உண்மையான சமூக அக்கறையுடனும் முற்போக்குச் சிந்தனைகளுடனும் இயங்குபவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக ஆக்க் கூடியன. குறிப்பாக, தமிழ் இந்து என்கிற பெரியதோர் வாசகர் வட்டத்துடன் இயங்குகின்ற பத்திரிகையில்... Continue Reading →
புஷ்பராணியின் “அகாலம்”
ஈழத்தில் மயிலிட்டி என்கிற சிறிய கிராமத்தில் 1950 ல் பிறந்த புஷ்பராணி ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது அதில் பங்கெடுத்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழீழ விடுதலை இயக்கத்திலும் அதன் ஆரம்ப காலம் தொட்டு பங்கெடுத்தவர். ஈழப்போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியபோது சிறை சென்ற முதல் பெண்போராளியும் ஆவார். அந்த வகையில் புஷ்பராணி எழுதிய அகாலம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக ஓரு பெண் சைக்கிள் ஓடுவதே அதிசயமாகப் பார்க்கப்பட்ட ஒரு காலத்தில்,... Continue Reading →
புதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு
புதிய பயணி இதழ் பயண அனுபவங்கள் பற்றி இலக்கியங்கள் ஊடாகப் பதிவுசெய்வது தமிழுக்குப் புதிய மரபன்று. சங்க இலக்கியங்களின் ஆற்றுப்படை, வழிநடைச் சிந்து ஆகிய பாடல்வகைகளை பயண இலக்கியங்களாக வகைப்படுத்தலாம் என்று அறிய முடிகின்றது. பயண இலக்கியம் சார்ந்து இவ்வாறான ஒரு நீண்ட மரபு இருப்பினும் தமிழில் பயண இலக்கியத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஏ.கே. செட்டியார். இவரே, பயண இலக்கியம் என்கிற பிரக்ஞையுடன் தொகுப்பு நூல் ஒன்றினை வெளியிட்டவர். 1850 முதல் 1925 வரை வெளியான பலரது... Continue Reading →
குப்பிழான் சண்முகனின் “கோடுகளும் கோலங்களும்”
தொண்ணூறுகளுக்கு முன்னர் வெளியான ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் குறித்து எழுதுவது என்று யோசித்தவுடன் தனித்துத் தெரியும் மற்றும் ஒருவர் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்கள். 70களில் ஈழத்தில் படைப்பிலக்கியம் தொடர்பாக தொடர்ச்சியாக இடம்பெற்ற வாதங்கள், உரையாடல்கள் ஆகியவற்றின் தொடர்ச்சியாக படைப்பிலக்கியங்கள் வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்தன. அந்த நேரத்தில் இருந்த, அவர்கள் சார்ந்திருந்த இலக்கிய அணிகள், போக்குகள் என்பவற்றைப் புறந்தள்ளி ஒரு வாசகனாக தற்போது பார்க்கின்றபோது, மொழிக்கும் வடிவத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, அழகியலை முன்னிலைப்படுத்திய... Continue Reading →
இயல் விருது விழா – 2015
2014ஆம் ஆண்டிற்குரிய இயல் விருது மற்றும் கனேடிய இலக்கியத் தோட்டத்தின் விருதுகள் வழங்கும் நிகழ்வு, ஜூன் 13ஆம் திகதி ரொரன்றோ றடிசன் ஹோட்டலில் இடம்பெற்றது. 2014ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது. அத்துடன், புனைவுக்கான நாவல் பரிசு தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’, குணா. கவியழகனின் ‘நஞ்சுண்டகாடு’ ஆகிய இரு நாவல்களுக்கும், அபுனைவு நூலுக்கான பரிசு மு. நித்தியானந்தனின் ‘கூலித்தமிழ்’, ஜெயராணியின் ‘ஜாதியற்றவளின் குரல்’ ஆகிய இரு நூல்களுக்கும், கவிதைக்கான பரிசு கதிர்பாரதியின் ‘மெசியாவிற்கு மூன்று... Continue Reading →