“எனக்குத் திசைகளைப் பற்றிக் கவலையில்லை; தேடல்களைப் பற்றித்தான் கவலை” – ஆர். பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்

நான் ஒரு தமிழ் மாணவன்; அதுவே எனது அடையாளம் என்பதைத் தொடர்ந்து சொல்லிவரும் ஆர். பாலகிருஷ்ணன் இந்தியவியல், திராவிடவியல், தொல்லியல் போன்ற துறைகளில் ஆழங்கால்பட்ட அறிவுடைய ஆய்வறிஞரும் ஆவார். தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்ற இவர், ஐ.ஏ.எஸ். பரீட்சையை முழுமையாகத் தமிழ்மொழி மூலம் எழுதித் தேர்தவான ஒரே நபர் என்ற பெருமையையும் கொண்டவர். இந்திய ஆட்சிப் பணியில் 34 ஆண்டுகள் பணியாற்றி 2018-இல் ஓய்வுபெற்ற பாலகிருஷ்ணன் அவர்கள் ஓய்வின் பின் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை... Continue Reading →

செல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும்

போருக்குப் பிந்தைய காலத்தில் அபிவிருத்தி, மக்கள் நல உதவித்திட்டம், கல்விக்கான உதவி, மக்கள் எதிர்கொள்ளும் சமகாலப் பிரச்சனைகள் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு கவனப்படுத்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.  அவைகுறித்து நேர்மறை / எதிர்மறையான பார்வைகளும் கேள்விகளும் உரையாடல்களுக்கான தேவைகளும் இருக்கின்றன.  ஆயினும் சமூக பொருளாதார அடிப்படையிலான நோக்குகளும் ஆய்வுகளும் பொதுத்தளத்தில் நடப்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது.  போருக்குப் பின்னைய காலத்தில் மட்டும்தான் இந்த நிலைமை என்றில்லாமல், அதற்குமுன்னரும் கூட இந்த உரையாடல்கள் பரவலாக்கப்படவில்லை என்றே சொல்லமுடியும்.  உள்ளூர்ப் பொருளாதாரம் பற்றிய... Continue Reading →

ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு

ரகரொன்றோவில் இடம்பெற்ற 48வது இலக்கியச் சந்திப்பின் இரண்டாம் நாள் நிகழ்வின் நான்காவது அமர்வு ஈழத்தின் சமகாலப் பிரச்சினைகள் என்கிற தலைப்பில் இடம்பெற்றது.  எஸ்.கே. விக்னேஸ்வரன் அவர்கள் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு என்கிற தலைப்பில் ஆற்றிய உரையின் காணொலி.  

அரசியல் கிரிக்கெட் பகுதி 1

அப்போது எனக்கு பத்து வயதிருக்கும்.  பாடசாலையில் மதிய இடைவேளையில் பக்கத்து வகுப்பு மாணவர்களுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவது வழக்கம்.  வழமையான போட்டிகளின்போது ஸ்கோர் பதிவுகளைச் செய்கின்ற மாணவன் வராத நாளொன்றில் என்னை ஸ்கோர் பண்ணுமாறு கேட்டார்கள்.  நானும் கொப்பி ஒன்றின் பின்பக்கத்தில், விளையாடுகின்ற ஒவ்வொருவரது பெயரையும் எழுதி பந்துவீச்சில் கொடுத்த ஓட்டங்கள், துடுப்பாட்ட வீரர்கள் எடுத்துக்கொண்ட ஓட்டங்கள் என்று பதிவுசெய்தேன்.  ஒவ்வொரு வீரரும் எப்படி ஆட்டமிழந்தார்கள், யாரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்கள் என்கிற விபரங்களை எல்லாம் குறித்தேன்.  ஒவ்வொரு... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑