“தாயகக் கனவுகள்: பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல்” என்கிற தலைப்பில் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை, ஒக்ரோபர் 08, 2022 அன்று கனடாவின் ஸ்கார்பரோ நகரில் இடம் பெற்றது. நிகழ்வில் தீபன் சிவபாலன் ஆற்றிய உரை. https://www.youtube.com/embed/UQc-VZlR5IA நன்றி - வடலியின் யூட்யூப் தளம்
நூல்தேட்டப் பதிவு
நூல்தேட்டப் பதிவு 894.8(64)சமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் தாயகக் கனவுகள்: பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல். அருண்மொழிவர்மன் (இயற்பெயர்: சுதர்சன்ஸ்ரீநிவாசன்).கனடா: வடலி வெளியீடு, இல. 35, Long Meadow Road, Brampton, Ontario L6P 2B1;,1வது பதிப்பு, தை 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).xix, 122 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5x14 சமீ.,ISBN : 978-1-7779375-1-5. ஈழப்போராட்டம், அது குறித்த நூல்கள், அவற்றின் வாசிப்பு அனுபவங்கள் ஆகிய பரப்புக்களில்அருண்மொழிவர்மன் எழுதிய கட்டுரைகளின் தொகுதி... Continue Reading →
வசந்தம் இதழ் குறித்து…
ஈழத்தவர்கள் மீதான இந்திய ஆதிக்கம் பற்றிய உரையாடல்கள் மிக நீண்டகாலமாகவே தொடர்ந்துவருகின்றன. அரசியல் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் பிரக்ஞைபூர்வமாக இந்த உரையாடல்களை முன்னெடுக்கவேண்டிய தேவைகள் முன்னெப்போதையும் விட அதிகரித்திருக்கின்ற சமகாலச் சூழலில் ஜீவநதி இதழ் தொடர்ச்சியாக ஈழத்தின் கலை இலக்கியச் செயற்பாடுகள் குறித்த பதிவுகளையும் சிறப்பிதழ்களையும் கொண்டுவருவது முக்கியமானதாகும். அதிலும் ஈழத்தின் பதிப்பு முயற்சிகளும் நூல் வெளியீடுகளும் இந்தியாவின் அரசியல் நடைமுறைகள் மற்றும் பண்பாட்டு ஆதிக்கத்தால் தொடர்ந்தும் நலிவடைந்தே செல்கின்ற காலப்பகுதியில் இதழ்கள் குறித்த சிறப்பிதழ் ஒன்றினை... Continue Reading →
தெளிவத்தை ஜோசப்பின் நினைவேந்தல் நிகழ்வு
ஈழத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான தெளிவத்தை ஜோசப்பின் நினைவேந்தல் நிகழ்வு நவம்பர் 12. 2022 அன்று Scarborough Village Recreation Centre மண்டபத்தில் இடம்பெற்றது. தாய்வீடு, காலம் ஆகிய இதழ்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வினை நான் ஒருங்கிணைத்திருந்தேன். நிகழ்வில் தெளிவத்தை ஜோசப்பின் எழுத்துகள் குறித்து எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் அவர்களும், தெளிவத்தை ஜோசப்புடனான தம் நினைவுகள் குறித்து பி.ஜெ. டிலிப்குமார் மற்றும் செல்வம் அவர்களும் உரையாற்றினார்கள். மலையகத்தின் இன்றைய நிகழ்வு குறித்த உரையினை சுபாஸ் சுந்தரராஜ்... Continue Reading →
தாயகக் கனவு நோக்கிய ஒரு மாற்றத்துக்கான குரல்! – எஸ்.கே. விக்னேஸ்வரன்
2013 இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து வந்தபோது, இனி நான் வாழப்போகிற இந்த நாடு எப்படிப்பட்டது, இங்குள்ள மக்கள் என்ன செய்கிறார்கள், இலங்கையிலிருந்து இங்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பவை பற்றிய எத்தகைய ஒரு விரிவான புரிதலும் என்னிடம் இருக்கவில்லை. தாயகம் பத்திரிகை, தாய்வீடு இதழ், காலம் சஞ்சிகை என்ற இந்த மூன்றையும் தவிர கனடாவில் இருந்து வெளிவரும் வேறெந்த இதழ்களையும் நான் அறிந்திருக்கவில்லை. மனவெளி நாடகக் குழுபற்றி அறிந்திருந்தேன்; தேடகம் அமைப்புப்... Continue Reading →
பால் – பாலியல், காமம் – காதல், பெண் – பெண்ணியம்: ஓர்ஆண்நிலைநோக்கு : உரையாடல் ஒன்றுக்கான குறிப்புகள்
குறிப்பு: மீராபாரதி எழுதிய பால் பாலியல், காமம் காதல், பெண் பெண்ணியம் – ஓர் ஆண் நிலை நோக்கு என்கிற நூலின் வெளியீட்டினை முன்வைத்து ரொரன்றோவில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும்படி நூலாசிரியர் மீராபாரதி கேட்டிருந்தார்.. இந்நூல் பேசுகின்ற விடயமும் அது பற்றி மீராபாரதி அவர்கள் கொண்டிருக்கின்ற அக்கறையும் முக்கியமானது. அந்த வகையில் இந்நூலையும் அதில் உள்ள கட்டுரைகளையும் தன் அக்கறையின் பாற்பட்டும், தான் கொண்ட கருத்தியலின் மீதிருக்கும் நம்பிக்கையின் பாற்பட்டும் மீராபாரதி தன்னோடும் சமூகத்தோடும் தொடர்ச்சியாக நடத்திய... Continue Reading →
சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி எஸ்.பி. ஜனநாதன்
சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி என்ற பெயரில் மறைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனுக்கான நினைவு மலர் ஒன்றை GKV மகாராஜா முரளீதரனின் தொகுப்பில் பாரதி புத்தகாலயத்தினர் வெளியிட்டிருக்கின்றனர். ஜனநாதனின் முதற்திரைப்படமான இயற்கையின் பாடல்களும் காதல் கொண்டேன் படத்தின் பாடல்களும் ஒரே இசைத்தட்டாக வெளிவந்திருந்தன. எனக்கு மிகவும் பிடித்த இசைத்தட்டுகளில் ஒன்றாக அதைச் சொல்வேன். இயற்கையில் எல்லாரும் பெரிதும் சொல்லுகின்ற, மிகப்பிரபலமான பாடல் “காதல் வந்தால் சொல்லி அனுப்பு…”; எனக்கும் மிகப் பிடித்த பாடல்களில் ஒன்றாக இன்றும் இருக்கின்றது. ... Continue Reading →
கசடறக் கற்பித்தார் ச.வே.ப
கல்வியைக் கண்ணெனப் போற்றும் யாழ்ப்பாணத்துச் சமூகம் என்ற கூற்று நினைவுதெரிந்த நாளில் இருந்து நான் கேட்டுவளர்வது. ஆனால் கல்வியைக் கண்ணெனப் போற்றுவது என்கிற பெயரில் கற்றலின் பயனென்னவென்பதையும் கற்பித்தலின் பொருளென்ன என்பதையும் கூட அறியாமல் அது கற்பித்தல் தொழிற்சாலைகளை நிறைத்து வைத்திருக்கின்ற பிரதேசமாகவே நடைமுறையில் இருந்துவருகின்றது. இங்கே கற்பிக்கப்படுகின்ற விஞ்ஞானம், கணிதம், மொழி, இலக்கியம், வரலாறு, சமூக விஞ்ஞானம் உட்பட அனைத்துப் பிரிவுகளினதும் பிரதான நோக்கம் மாணாவர்களை நல்ல பெறுபேறுகளை போட்டிப்பரீட்சைகளில் பெறப்பண்ணுவது என்பதைத் தவிர வேறொன்றில்லை. ... Continue Reading →
என். செல்வராஜாவின் நமக்கென்றொரு பெட்டகமும் நூலகச் சிந்தனைகளும்
செல்வராஜா அவர்கள் - பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமானது போல - எனக்கும் நூல் தேட்டம் செல்வராஜா என்றே அறிமுகமானவர். புலம்பெயர்ந்து கனடாவிற்கு வந்து நான் புத்தக வாசிப்பிற்கு மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கையில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றி அறிந்துகொள்வது என்பதே மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. இப்பொழுது ரொரன்றோவில் தமிழ்ப் புத்தகக் கடையென்று ஒன்றுதான் இருக்கின்றது. ஆனால் அந்தக் காலப்பகுதியில் 5 புத்தகக் கடைகள் இருந்தன. இவற்றைத் தவிர தனிப்பட்ட முயற்சிகளால் புத்தகங்களை எடுத்து விற்பவர்களும் இருந்தனர். ... Continue Reading →