பொதுவெளியில் இயங்கிவருகின்ற பெண்களுக்கு எதிரான வன்மமும் அவதூறுகளும் தாக்குதல்களும் அதிகரித்துச் செல்வதையும் அவை தொழினுட்பத்தின் சகல சாத்தியங்களையும் மிகத் தவறான நோக்குடன் பயன்படுத்துவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதேநேரம் இது நாளாந்த வாழ்விலும், வேலைத்தளம் மற்றும் அனைத்துப் பொதுவெளிகளிலும் பெண்கள் ஒட்டுமொத்தமாக எதிர்நோக்குகின்ற பிரச்சனையாகவும் இருக்கின்றது. பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்ற இதுபோன்ற வன்முறைகளைப் போலவே, இந்த வன்முறைகளுக்கான காரணங்களை ஆராய்கின்றோம் என்பதன் பெயரில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றத்துக்காக சூழலை உருவாக்கினார்கள் என்பதும் குற்ற உணர்ச்சியை நோக்கி நகர்த்துவதும் அந்த... Continue Reading →
அப்பா இல்லாத ஓராண்டு
துறந்தார்க்கும் துவ்வாதார்க்கும் இறந்தார்க்கும் நீ எஞ்ஞான்றும் நின்ற துணை அன்பும் அறனும் உடைத்த இல்வாழ்வை நீ வாழ்ந்து காட்டிய தகை அறத்தாற்றின் இல் வாழ்க்கை ஆற்றிக்காட்டி புறத்தாற்றுச் செல்லாமல் எமைத் தடுத்த கொடை வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வான் உறையும் தெய்வத்துக்கு ஆன இணை பப்பாவைப் பற்றி எழுதுவதென்றால் எதை எழுதுவது? எதை விடுவது? என்ற நினைப்பிலேயே சில தினங்கள் கழிந்துவிட்டன. முன்பொருமுறை ஒரு வாழ்த்து மடலில் பப்பா பற்றி எழுதும்போது “பிரமாண்டங்களின் அழகு எல்லாம் சற்றே... Continue Reading →
ஞாயிறு இதழ்
"ஈழத்தின் தமிழ் வளர்ச்சிக்கு ஆறுமுக நாவலர் செய்த தொண்டை சிற்பத்துக்கு ஸ்ரீ நவரத்தினம் செய்துள்ளார்" என்று எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கியால் விதந்து கூறப்பட்டவர் கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்கள். 1898 இல் இலங்கையின் வடபுலத்தில் உள்ள வண்ணார்பண்ணை என்கிற கிராமத்தில் பிறந்த இவர் இலங்கை, இந்தியாவின் கலைகள், சிற்பங்கள் குறித்தும் சமயவியலிலும் குறிப்பாக சைவசித்தாந்தத்திலும் முக்கியமான நூல்களை எழுதியவர். இவர் எழுதி 1941இல் வெளியான “தென்னிந்திய சிற்பக் கலைகள்” என்கிற நூலே தமிழில் சிற்பக்கலைகள் குறித்து வெளியான... Continue Reading →
மானுடத்தின் குரலாய் ஒலித்த எஸ்போஸ்
அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா அதிகாரத்திற்கெதிரான நமது இதயங்களைச் சிலுவையில் அறைவதா? என்கிற ஒரு காலத்தினதும் தலைமுறையினதும் மனசாட்சிகளின் தவிப்பாக இருந்த நிராதரவுக் குரலை எழுதிய எஸ்போஸ் என்றறியப்பட்ட சந்திரபோஸ் சுதாகர் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் திகதி தனது ஏழு வயது மகனின் கண்ணெதிரே மிகக் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு பத்தாண்டுகளுக்குப் பின்னர் எஸ்போஸ் படைப்புகள் மற்றும் எஸ்போஸ் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் என்கிற இந்தத் தொகுப்பு நூல் கருணாகரன், ப, தயாளன், சித்தாந்தன் ஆகியோரைத்... Continue Reading →
முப்பால் காணொலி
அண்மையில் அதிகம் பாதித்த புத்தகம் என்று அடிக்கடி எழுதுவது சலிப்பைத் தந்தாலும், அண்மைக்காலமாக வாசித்த அனேகம் புத்தகங்கள் மனதளவில் பாதிப்பைத் தந்தனவாகவே இருக்கின்றன. “லிவிங் ஸ்மைல்” வித்யாவின் “நான் வித்யா”வை வாசித்தது அரவாணிகள் பற்றி இன்னும் அதிகம் வாசிக்கவேண்டும், அவர்கள் வாழ்க்கையைப் பற்றி, அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் ரேவதி தொகுத்த “உணர்வும் உருவமும்”, மற்றும் மகாராசன் தொகுத்த “அரவாணிகள்; உடலியல் – உளவியல்... Continue Reading →
ஓவியர் / வரைகலை நிபுணர் / புகைப்படக் கலைஞர் கருணாவுடனான உரையாடல்
//ஈழத்தின் தனித்துவமான ஓவியர்களில் ஒருவரும் வளமான ஓவியர்கள் பலருக்கு ஓவியக்கலையைப் பயிற்றுவித்தவருமான மாற்கு அவர்களின் மாணவர்களில் கருணாவும் ஒருவர். இவரது சொந்தப் பெயர் இயூஜின் வின்சென்ற் என்பதாகும். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கனடாவுக்கு வந்த கருணா, கனடாவிலும் வரைகலை தொடர்பான தொழினுட்பங்கள் சிலவற்றை முறையாகக் கற்றுக்கொண்டார். 1992/93 காலப்பகுதிகளில் இருந்து டிஜிற்றல் முறையில் ஓவியங்களை வரைந்துவருகின்ற கருணாவே, ஈழத்தமிழர்களில் டிஜிற்றல் முறைகளில் ஓவியங்களை முதன்முதலில் வரைய ஆரம்பித்தவருமாவார். புலம்பெயர் நாடுகளில் இருந்து வெளிவந்த, வெளிவந்துகொண்டிருக்கின்ற இதழ்கள், மலர்கள், சிற்றிதழ்கள்... Continue Reading →
முள்ளிவாய்க்கால்: நினைவுகூர்தலில் இருந்து அரசியல் செயற்பாடு நோக்கி…
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பல்வேறு கட்டங்களாக அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை உச்சத்தை அடைந்த காலப்பகுதியாக 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிப்போர் காலப்பகுதியை குறிப்பிடமுடியும். இந்தப் போர் முடிவடைந்த நாளாகக் கருதப்படுகின்ற மே 18 இனை இனப்படுகொலை நாளாக நினைவுகூரும் பொருட்டு ஈழத்திலும், உலகின் பல்வேறு பாகங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வுகளின் உள்ளடக்கம், அவற்றின் பிரதிநிதித்துவம், அவை ஒருங்கிணைக்கப்படும் விதம் என்பன பற்றிய பல்வேறு விதமான உரையாடல்களும் விவாதங்களும் கடந்த 8... Continue Reading →
பாட்டி சுடாத வடை : கனடாவில் சிறுவர் இலக்கியம்
அண்மையில் வழமைபோல ரொரன்றோ முருகன் புத்தக நிலையத்துக்குச் சென்றிருந்தபோது பாட்டி சுடாத வடை என்கிற அழகிய முகப்புடன் கூடிய புத்தகத்தினைப் பார்க்கக் கிடைந்தது. சிறுவர் நூல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்ற இன்றைய சூழலில் (குறிப்பாக கனடாவில் அல்லது புலம்பெயர் நாடுகளில்) சிறுவர்களுக்கான நூலொன்றினைக் காண நேர்ந்தது ஈர்க்கவே அதனை எடுத்துப் பார்த்தேன். இந்த நூலினைக் கனடாவைச் சேர்ந்த ஆரணி ஞானநாயகன் என்கிற மாணவி எழுதியிருப்பது இன்னமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. தற்போது கனடாவில் 12ம் வகுப்பில் கல்விகற்று... Continue Reading →
கொமிக்ஸ் நினைவுகள் மற்றும் மருதுவின் உரை
சிறுவயதில் எனக்கும் கொமிக்ஸ் புத்தகங்கள் பெரும் ஈர்ப்பாக இருந்தன. ராணி கொமிக்சின் முதல் 200 இதழ்கள் வரை சேர்த்து வைப்பதை ஒரு திட்டமாக நானும் சிறுவயது நண்பன் பிரசன்னாவும் சேர்த்து வைத்திருந்தோம். 200வது ராணி கொமிக்ஸ் “யானைப் பையன்”. ஆனால் யாழ்ப்பாணத்தில் அது வர முன்னரே 201வது இதழ் வெளியாகியிருந்தது. எமக்கு அப்போது 13 வயது. எம்மிடையே, 200வது இதழில் மாயாவி இறந்துவிடுவதால் தான் அதை வெளியிடவில்லை என்று ஒரு வதந்தி பரவியும் இருந்தது. ஆனால் அதே... Continue Reading →
கருணாவின் ஓவியக் கண்காட்சி
ஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடாவில் வசித்துவருகின்ற கருணாவின் ஓவியக் கண்காட்சி ஜனவரி மாதம் 14 ஆம், 15 ஆம் திகதிகளில் மார்க்கம் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. சமகாலத்தின் முக்கியமான ஓவியர்களில் ஒருவரும், வரைகலை நிபுணரும், புகைப்படக் கலைஞருமான கருணா அதற்கும் அப்பால் இதழ்கள், நாடகங்கள், அரங்க நிர்மாணம், இலக்கியம் என்று கலையின் பல்வேறு பரிமாணங்களிலும் முக்கிய பங்களிப்புகளை வழங்குகின்ற ஆளுமையும் ஆவார். கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கனடாவில்... Continue Reading →