தமிழ்நதி எழுதி கபாடபுரம் இணைய இதழில் வெளிவந்திருக்கின்ற இந்தக் கதை பேசுகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விடயம் முக்கியமானது. பொதுவாக, சமகாலப் பிரச்சனைகள் பற்றி கலை இலக்கியப் படைப்புகள் ஊடாக வெளிப்படுத்தவேண்டும் என்பதை தொடர்ச்சியாக முன்வைப்பது எனது வழக்கம். அந்த வகையில் காணமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி கதையொன்றில் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் அதுவும் தமிழ்நதி போன்ற பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரால் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் முக்கியமானது. ஆனால் தமிழ்நதியின் இந்தக் கதையில் இருக்கின்ற ஒரு விதமான ”வீர வழிபாட்டுத்தனம்” -... Continue Reading →
கேரள டயரீசுக்கான எதிர்ப்பும் அருளினியனும் : சில அவதானங்கள்
இலங்கையின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து, 'கேரள டயரீஸ்' புத்தகத்தை கையளித்தேன் என்று ஒரு நிலைத்தகவலை அருளினியன் தனது முகநூலில் பதிவுசெய்திருப்பதனைக் காணக் கிடைத்தது, அவரது முழுமையான நிலைத்தகவல் பின்வருமாறு அமைகின்றது, இலங்கையின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து, 'கேரள டயரீஸ்' புத்தகத்தை கையளித்தேன். சில சாதி, சைவ அமைப்புகளால், யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் புத்தக வெளியீட்டு நாளில் நான் எப்படியாக அலைக்கழிக்கப்பட்டேன் மிரட்டப்பட்டேன் என்பதையும், தற்போது சில சாதி, சைவ அமைப்புகள்... Continue Reading →
மானுடத்தின் வரலாற்றுக் களங்கம்
முற்குறிப்பு ஈழத்தில் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயருடன் நுழைந்து பேரழிவுகளையும் போர்க்குற்றங்களையும் அரங்கேற்றி இவ்வாண்டு 30 ஆண்டுகள் ஆகின்றது. இந்த நேரத்தில் ரொரன்றோவில் இருந்து வெளிவருகின்ற தாய்வீடு என்கிற மாதப் பத்திரிகை மானுடத்தின் வரலாற்றுக் களங்கம் என்ற பெயரில் ஒரு சிறப்புப் பகுதியினை ஓகஸ்ட் 2017 இற்குரிய இதழில் வெளியிட்டுள்ளது. அதன் முக்கியத்துவம் கருதி இத்தொகுப்பிற்கான முன்னுரையையும் சிறப்புப்பகுதியின் PDF இனையும் இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். மானுடத்தின் வரலாற்றுக் களங்கம் ஈழத்தமிழர்களின் பண்பாட்டிலும் வரலாற்றிலும் இந்தியாவின் செல்வாக்கு... Continue Reading →
முள்ளிவாய்க்கால்: நினைவுகூர்தலில் இருந்து அரசியல் செயற்பாடு நோக்கி…
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பல்வேறு கட்டங்களாக அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை உச்சத்தை அடைந்த காலப்பகுதியாக 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிப்போர் காலப்பகுதியை குறிப்பிடமுடியும். இந்தப் போர் முடிவடைந்த நாளாகக் கருதப்படுகின்ற மே 18 இனை இனப்படுகொலை நாளாக நினைவுகூரும் பொருட்டு ஈழத்திலும், உலகின் பல்வேறு பாகங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வுகளின் உள்ளடக்கம், அவற்றின் பிரதிநிதித்துவம், அவை ஒருங்கிணைக்கப்படும் விதம் என்பன பற்றிய பல்வேறு விதமான உரையாடல்களும் விவாதங்களும் கடந்த 8... Continue Reading →
புத்தாண்டு தினக் கொண்டாட்டங்கள் பற்றிய கட்டுரைக்கான எதிர்வினை
புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களின்போது (ஜனவரி 01, 2017 அன்று) பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் ரீதியான வன்முறைகளை முன்வைத்து அகில்குமார் என்பவர் எழுதிய காமத்தைக் கொண்டாடுதல் என்கிற பதிவினைப் படிக்கநேர்ந்தது. இந்தப் பதிவு பலராலும் தொடர்ச்சியாக பகிரப்பட்டும் வந்ததை அவதானித்ததன் அடிப்படையில் அதுபற்றிய சிலவிடயங்களைப் பகிர்வது முக்கியமானது எனக் கருதுகின்றேன். பொதுவாகவே எமது சமூகத்தில் பெண்கள் பற்றியதாக இருக்கின்ற பொதுப்புத்தியின் அடிப்படையிலான எதிர்பார்ப்புகளும், ஆணாதிக்கப் போக்கும் பெண்ணை ஒரு பண்டமாக நினைக்கின்ற போக்கும் இது போன்ற நிகழ்வுகளின்... Continue Reading →
வெற்றிச்செல்வியின் “ஒரு போராளியின் காதலி”
ஒரு போராளியின் காதலி என்கிற இந்த நாவலானது ஈழப்போரின் இறுதிக்கட்டங்களின் நடந்த சம்பவங்களை வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. இதனை எழுதிய வெற்றிச்செல்வி மன்னாரில் 1974 இல் பிறந்து 1991 இலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தன்னை இணைத்து ஈழப்போராட்டத்தில் ஈடுபட்டவர். வெடிவிபத்தொன்றில் தனது வலது கண்ணையும் வலது கையையும் இழந்த வெற்றிச்செல்வி தொடர்ந்தும் ஊடகத்துறையில் நிதர்சனம், புலிகளின் குரல், சுதந்திரப் பறவைகள் ஆகியவற்றில் தனது பங்களிப்புகளைத் தொடர்ந்து செய்துள்ளார். ஆரம்பத்தில் வலது கைப் பழக்கமுள்ளவராக இருந்தபோதும் பின்னர் இடது கையால்... Continue Reading →
ஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ
கௌரவன் பாரதக்கதை என்பது அனேகம் எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் மிக மிகப் பெரும்பாலோனோர் முழுமையாக வாசித்திராத தொன்மங்களில் ஒன்றாகும். எனக்கு ஏழு / எட்டு வயதிருக்கும்போது வாசித்த கைக்கடக்கமான மகாபாரதப் பிரதி முதலே மகாபாரதத்தின் மீதான் என் ஈர்ப்பு அதிகரித்தே சென்றது. ஆயினும் வாசித்த குறிப்பிடத்தக்க அளவிலான முதலாவது மகாபாரதம் என்றால் ராஜாஜி எழுதிய “வியாசர் விருந்து” தான் நினைவுக்கு வருகின்றது. இராமாயணத்துடனான எனது அறிமுகமும் ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தித் திருமகன் ஊடாகவே நிகழ்ந்தது இங்கு குறிப்பிட்டுச்... Continue Reading →
பெரியண்ணன்கள் கவனம்!
அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியர் கண்ணன் பாமினி எழுத்துருக்களைப் பற்றிச் சில கருத்துகளைக் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து முகநூலில் தொடர்ச்சியான விவாதம் ஒன்று இடம்பெற்றது. அந்தக் குறிப்பினைப் பார்த்தபோது அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை விட கண்ணனின் தொனியே மிகவும் மோசமானதாகவும், மேட்டிமைத்தனத்தைத் காட்டுவதாயும் அமைந்திருந்தது. அதைத்தொடர்ந்து தனது சிறுகதைகளால் பரவலாக அறியப்பட்ட ரஞ்சகுமார் கண்ணனின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவர் முன்வைத்த முக்கிய வாதம், //எல்லோருக்கும் உடனே புரியக்கூடிய ஒரேயொரு... Continue Reading →
மரண தண்டனையும் ஒரு கொலையே! – சமஸின் கட்டுரைக்கான எதிர்வினை
அண்மைக்காலமாக பலராலும் முக்கியமான சமகாலத்தியக் கட்டுரையாளாராகக் குறிப்பிடப்படுபவர் சமஸ். அவ்வாறு குறிப்பிடப்படத் தொடங்கிய காலம் முதற்கொண்டே அவரது கட்டுரைகளைப் படித்துவருகின்றேன். சமஸ் பற்றிய எனது கணிப்பு என்னவென்றால் அவர் மைய நீரோட்ட / வெகுஜன கருத்துகளை முற்போக்குத் தோரணையுடன் வெளியிடுபவர் என்பதே! இந்தப் போக்கினைப் பின்பற்றுபவர்களும் அவர்களின் செயற்பாடுகளின் விளைவுகளும் உண்மையான சமூக அக்கறையுடனும் முற்போக்குச் சிந்தனைகளுடனும் இயங்குபவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக ஆக்க் கூடியன. குறிப்பாக, தமிழ் இந்து என்கிற பெரியதோர் வாசகர் வட்டத்துடன் இயங்குகின்ற பத்திரிகையில்... Continue Reading →
புஷ்பராணியின் “அகாலம்”
ஈழத்தில் மயிலிட்டி என்கிற சிறிய கிராமத்தில் 1950 ல் பிறந்த புஷ்பராணி ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது அதில் பங்கெடுத்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழீழ விடுதலை இயக்கத்திலும் அதன் ஆரம்ப காலம் தொட்டு பங்கெடுத்தவர். ஈழப்போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியபோது சிறை சென்ற முதல் பெண்போராளியும் ஆவார். அந்த வகையில் புஷ்பராணி எழுதிய அகாலம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக ஓரு பெண் சைக்கிள் ஓடுவதே அதிசயமாகப் பார்க்கப்பட்ட ஒரு காலத்தில்,... Continue Reading →