நான் ஒரு தமிழ் மாணவன்; அதுவே எனது அடையாளம் என்பதைத் தொடர்ந்து சொல்லிவரும் ஆர். பாலகிருஷ்ணன் இந்தியவியல், திராவிடவியல், தொல்லியல் போன்ற துறைகளில் ஆழங்கால்பட்ட அறிவுடைய ஆய்வறிஞரும் ஆவார். தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்ற இவர், ஐ.ஏ.எஸ். பரீட்சையை முழுமையாகத் தமிழ்மொழி மூலம் எழுதித் தேர்தவான ஒரே நபர் என்ற பெருமையையும் கொண்டவர். இந்திய ஆட்சிப் பணியில் 34 ஆண்டுகள் பணியாற்றி 2018-இல் ஓய்வுபெற்ற பாலகிருஷ்ணன் அவர்கள் ஓய்வின் பின் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை... Continue Reading →
சட்டநாதன்: தனித்துவமான ஒரு படைப்பாளி
எழுபதுகளின் தொடக்கங்களில் எழுதத் தொடங்கிய படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்புகளை கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னர் தொடர்ச்சியாக வாசித்தேன். இலக்கியம் / எழுத்துச் செயற்பாட்டின் நோக்கம், அதன் வடிவம், உள்ளடக்கம் என்பன குறித்த பல்வேறு விவாதங்களும், அந்த விவாதங்களின் தெறிப்புகளாக / எதிர்வினைகளாகவும் பல்வேறு படைப்புகள் இந்தக் காலத்தில் வெளிவந்திருந்தன. அவற்றை வாசிக்கின்றபோது உள்ளடக்கம் சார்ந்தும், சொல்லப்படும் விதம் சார்ந்தும் முக்கியமானதொரு மாற்றம் இந்தக் காலத்தில் நிகழ்ந்திருக்கின்றது என்று உறுதியாகக் கூறமுடிகின்றது. அறுபதுகளில் ஈழத்தில் இடம்பெற்ற இலக்கியம் பற்றிய விவாதங்களையும்... Continue Reading →
வசந்தம் இதழ் குறித்து…
ஈழத்தவர்கள் மீதான இந்திய ஆதிக்கம் பற்றிய உரையாடல்கள் மிக நீண்டகாலமாகவே தொடர்ந்துவருகின்றன. அரசியல் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் பிரக்ஞைபூர்வமாக இந்த உரையாடல்களை முன்னெடுக்கவேண்டிய தேவைகள் முன்னெப்போதையும் விட அதிகரித்திருக்கின்ற சமகாலச் சூழலில் ஜீவநதி இதழ் தொடர்ச்சியாக ஈழத்தின் கலை இலக்கியச் செயற்பாடுகள் குறித்த பதிவுகளையும் சிறப்பிதழ்களையும் கொண்டுவருவது முக்கியமானதாகும். அதிலும் ஈழத்தின் பதிப்பு முயற்சிகளும் நூல் வெளியீடுகளும் இந்தியாவின் அரசியல் நடைமுறைகள் மற்றும் பண்பாட்டு ஆதிக்கத்தால் தொடர்ந்தும் நலிவடைந்தே செல்கின்ற காலப்பகுதியில் இதழ்கள் குறித்த சிறப்பிதழ் ஒன்றினை... Continue Reading →
தெளிவத்தை ஜோசப்பின் நினைவேந்தல் நிகழ்வு
ஈழத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான தெளிவத்தை ஜோசப்பின் நினைவேந்தல் நிகழ்வு நவம்பர் 12. 2022 அன்று Scarborough Village Recreation Centre மண்டபத்தில் இடம்பெற்றது. தாய்வீடு, காலம் ஆகிய இதழ்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வினை நான் ஒருங்கிணைத்திருந்தேன். நிகழ்வில் தெளிவத்தை ஜோசப்பின் எழுத்துகள் குறித்து எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் அவர்களும், தெளிவத்தை ஜோசப்புடனான தம் நினைவுகள் குறித்து பி.ஜெ. டிலிப்குமார் மற்றும் செல்வம் அவர்களும் உரையாற்றினார்கள். மலையகத்தின் இன்றைய நிகழ்வு குறித்த உரையினை சுபாஸ் சுந்தரராஜ்... Continue Reading →
தாயகக் கனவு நோக்கிய ஒரு மாற்றத்துக்கான குரல்! – எஸ்.கே. விக்னேஸ்வரன்
2013 இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து வந்தபோது, இனி நான் வாழப்போகிற இந்த நாடு எப்படிப்பட்டது, இங்குள்ள மக்கள் என்ன செய்கிறார்கள், இலங்கையிலிருந்து இங்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பவை பற்றிய எத்தகைய ஒரு விரிவான புரிதலும் என்னிடம் இருக்கவில்லை. தாயகம் பத்திரிகை, தாய்வீடு இதழ், காலம் சஞ்சிகை என்ற இந்த மூன்றையும் தவிர கனடாவில் இருந்து வெளிவரும் வேறெந்த இதழ்களையும் நான் அறிந்திருக்கவில்லை. மனவெளி நாடகக் குழுபற்றி அறிந்திருந்தேன்; தேடகம் அமைப்புப்... Continue Reading →
கசடறக் கற்பித்தார் ச.வே.ப
கல்வியைக் கண்ணெனப் போற்றும் யாழ்ப்பாணத்துச் சமூகம் என்ற கூற்று நினைவுதெரிந்த நாளில் இருந்து நான் கேட்டுவளர்வது. ஆனால் கல்வியைக் கண்ணெனப் போற்றுவது என்கிற பெயரில் கற்றலின் பயனென்னவென்பதையும் கற்பித்தலின் பொருளென்ன என்பதையும் கூட அறியாமல் அது கற்பித்தல் தொழிற்சாலைகளை நிறைத்து வைத்திருக்கின்ற பிரதேசமாகவே நடைமுறையில் இருந்துவருகின்றது. இங்கே கற்பிக்கப்படுகின்ற விஞ்ஞானம், கணிதம், மொழி, இலக்கியம், வரலாறு, சமூக விஞ்ஞானம் உட்பட அனைத்துப் பிரிவுகளினதும் பிரதான நோக்கம் மாணாவர்களை நல்ல பெறுபேறுகளை போட்டிப்பரீட்சைகளில் பெறப்பண்ணுவது என்பதைத் தவிர வேறொன்றில்லை. ... Continue Reading →
நந்திக்கடல் பேசுகிறது தொகுப்பை முன்வைத்து…
ஈழப்போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் அழிவுகள் குறித்தும் தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்தும், பின்போர்க்கால நிலைமைகள் குறித்ததுமான பல்வேறு தொகுப்புகளும் அறிக்கைகளும் பதிவுகளும் வெவ்வேறு தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ளன என்றாலும் இன்று வரை போரினால் நிகழ்த்தப்பட்ட அழிவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு முடியவில்லை என்பதே உண்மை. அதுபோல போர் நிறைவடைந்த பின்னரும் தொடருகின்ற பண்பாட்டு இனப்படுகொலையும் அதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அம்பலப்படுத்தப்படவில்லை. இவை குறித்த செய்திகளும் பதிவுகளும் பெரும்பாலும் தனித்த சம்பவங்களாகவே கடந்து செல்லப்படுகின்றன. இத்தகைய சூழலில் இந்த அழிவுகளை... Continue Reading →
கொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள்
தற்போது உலகளாவிய ரீதியில் பரவியிருக்கின்ற கொரொனாத் தொற்று மற்றும் அதன்விளைவுகள் பற்றிய யுவால் நோவா ஹராரி எழுதிய மூன்று கட்டுரைகளை இதுவரை படித்திருக்கின்றேன்.
In the Battle Against Coronavirus, Humanity Lacks Leadership என்கிற முதலாவது கட்டுரை Time இதழில் வெளியானது.
எதைச் சொல்லித் தேற்றுவது!
புதிய தொழினுட்பங்கள் பற்றித் தேடிதேடித் வாசித்து தன்னை இற்றைபப்டுத்து வைப்பவராக இருந்த கருணா தொழினுட்பத்தின் உச்சபட்ச சாத்தியங்களையெல்லாம் நாம் பயன்படுத்தவேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துபவராக இருந்தார். தாய்வீடு நடத்திய அரங்கியல் விழாக்களில் அவர் தொடர்ந்து இதனைக் கையாண்டதுடன், தொழினுட்பக் கோளாறுகள் ஏற்படுத்தக் கூடிய நெருக்கடிகள் சில கசப்பான நினைவுகளைத் தந்தபோதும் தொழினுட்பக் கோளாறுகளைப் புரிந்துகொள்ளாமல் அவற்றுக்கு அவர் மீது குற்றப்பத்திரிகைகளைச் சிலர் பரப்புரைச் செய்தபோதும் கூட தொடர்ச்சியாக தொழினுட்பத்தை நம்புபவராகவே இருந்தார்.
ஈழக்கூத்தன் தாசீசியஸ்
இந்த நோக்கமும் அந்த அக்கறையின்பாற்பட்ட தொலைநோக்குமே தாசீசியஸை வழிநடத்தியிருக்கவேண்டும். பிபிசியில் பணியாற்றியதில் இருந்து பின்னர் ஐபிசியை உருவாக்குவதற்கான தேவை எதுவாக இருந்தது என்பது குறித்தும், பின்னர் ஐபிசியை உருவாக்கியது குறித்தும் கானா பிரபாவிற்கு வழங்கிய நேர்காணலில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே தமிழ்க் குடில் என்கிற அவரது செயற்திட்டம் மிகவும் முன்னோடியானதென்பதை அதன் நோக்கங்களை வைத்துப் பார்க்கின்றபோது அறியமுடிகின்றது. அதற்கப்பால் நாராய் நாராய் என்கிற நாடகப் பயணம் இன்னொரு முக்கியமான செயற்திட்டம். இந்த விடயங்களையெல்லாம் வெறும் தரவுகளாக இல்லாமல் எந்தச் சூழலில் எந்தப் பின்னணியில் எந்த நோக்கத்துக்காக இவையெல்லாம் உருவாகிய என்பதை இந்த நூலினூடாகவே அறியமுடிகின்றது.