UN LOCK குறும்படம் திரையிடல்

Toronto Reel Asia International Film Festival இல் திரையிட தெரிவான Unlock குறும்படத்தின் இயக்குனர் நிரு நடராஜா மேற்படி திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக ரொரன்றோ வந்திருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் அக்குறும்படத்தினைப் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது. Unlock அவரது முதலாவது திரைப்பட முயற்சி என்றபோதும் திரைத்துறையில் அவரது பங்கேற்பு ஏற்கனவே இருந்திருக்கின்றது.  மூங்கில் நிலா என்கிற ஒரு இசைத் தொகுப்பினை 2000 ஆம் ஆண்டளவில் வெளியிட்டிருந்த நிரு, பின்னர் கலாபக் காதலன், ராமேஸ்வரம் ஆகிய தென்னிந்தியத்... Continue Reading →

Happy Together திரைப்பட அறிமுகம்

In the mood for love திரைப்படத்தின் இயக்குனர் என்றே எனக்கு அறிமுகமான Wong Kar-wai, அதற்கு முன்னதாகவே இயக்கிய முக்கியமான திரைப்படமான Happy Together 1997 இல் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றது.  1997 ஆம் ஆண்டுக்குரிய கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை வொங் கார்-வைக்குப் பெற்றுத்தந்த  இத்திரைப்படத்தில் பிரதான பாத்திரத்தில் Tony Leung Chiu-wai, Leslie Cheung, Chang Chen ஆகியோர்  நடித்திருக்கின்றார்கள்.  ஹொங்கொங்கில் இருந்து ஆஜெந்தீனாவிற்குப் புலம்பெயர்ந்திருக்கின்ற ஆண் இணைகளான... Continue Reading →

ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினரால் பதிப்பிக்கப்பட்டு, சோமேசசுந்தரி கிருஷ்ணகுமாரை பதிப்பாசிரியராகக் கொண்டு ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை இந்துசாதனத்தில் எழுதிய எழுத்துகள் “உலகம் பலவிதம்” என்கிற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன.  கொழும்புவில் இடம்பெற்ற இந்த நூலின் வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து ஒக்ரோபர் மாதம் 22ம் திகதி ரொரன்றோவில் இந்நூலின் அறிமுக வெளியீட்டுவிழாவினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினரும் நூலக நிறுவனத்தினரும் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். புலம்பெயர் நாடுகளில் இயங்கிவருகின்ற பழைய மாணவர் சங்கங்கள்,... Continue Reading →

போர்க்காலக் கவிஞர்களின் போர்க்காலக் கவிதைகள்

-சிறுகுறிப்பு தமிழ்த் தாய் மன்றம் ஒழுங்கு செய்திருந்த “போர்க்காலக் கவிஞர்களின் போர்க்கால கவிதைகள்” என்கிற இலக்கிய அமர்வொன்று செப்ரம்பர் ஒன்பதாம் திகதி நடைபெற்றது.  தமிழ் முறைத் திருமணம் செய்து வைத்தல், தமிழ்ப் பெயர் உள்ள குழந்தைகளுக்குப் பரிசு வழங்குதல் என்பவற்றில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் தமிழ்த்தாய் மன்றம் ஒழுங்குசெய்திருந்த முதலாவது இலக்கிய நிகழ்வு இது என்று நிகழ்விலேயே குறிப்பிட்டிருந்தார்கள். இந்த நிகழ்வில் அம்புலியின் “மீண்டும் பிறக்கின்றோம்”, கப்ரன் கஸ்தூரியின் “வல்லரசுகள்” மேஜர் பாரதியின் “விடிவிற்காய் எழுவோம்”, வியாசனின் (புதுவை... Continue Reading →

கேரள டயரீசுக்கான எதிர்ப்பும் அருளினியனும் : சில அவதானங்கள்

இலங்கையின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து, 'கேரள டயரீஸ்' புத்தகத்தை கையளித்தேன் என்று ஒரு நிலைத்தகவலை அருளினியன் தனது முகநூலில் பதிவுசெய்திருப்பதனைக் காணக் கிடைத்தது,  அவரது முழுமையான நிலைத்தகவல் பின்வருமாறு அமைகின்றது, இலங்கையின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து, 'கேரள டயரீஸ்' புத்தகத்தை கையளித்தேன். சில சாதி, சைவ அமைப்புகளால், யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் புத்தக வெளியீட்டு நாளில் நான் எப்படியாக அலைக்கழிக்கப்பட்டேன் மிரட்டப்பட்டேன் என்பதையும், தற்போது சில சாதி, சைவ அமைப்புகள்... Continue Reading →

மானுடத்தின் வரலாற்றுக் களங்கம்

முற்குறிப்பு ஈழத்தில் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயருடன் நுழைந்து பேரழிவுகளையும் போர்க்குற்றங்களையும் அரங்கேற்றி இவ்வாண்டு 30 ஆண்டுகள் ஆகின்றது.  இந்த நேரத்தில் ரொரன்றோவில் இருந்து வெளிவருகின்ற தாய்வீடு என்கிற மாதப் பத்திரிகை மானுடத்தின் வரலாற்றுக் களங்கம் என்ற பெயரில் ஒரு சிறப்புப் பகுதியினை ஓகஸ்ட் 2017 இற்குரிய இதழில் வெளியிட்டுள்ளது.  அதன் முக்கியத்துவம் கருதி இத்தொகுப்பிற்கான முன்னுரையையும் சிறப்புப்பகுதியின் PDF இனையும் இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். மானுடத்தின் வரலாற்றுக் களங்கம் ஈழத்தமிழர்களின் பண்பாட்டிலும் வரலாற்றிலும் இந்தியாவின் செல்வாக்கு... Continue Reading →

நட்பதிகாரம் 1

கண் தெரியாதவருக்கு வண்ணங்கள் எப்படி இருக்கும் என்று உங்களால் புரியவைக்க முடிந்தால், இந்த உலகத்தில் உங்களால் எதையும் புரியவைக்க முடியும்!-@nesamani89 இந்தக் ட்வீற்றர் பதிவினை 18-04-2016 குங்குமம் இதழில் காணக்கிடைத்தபோது பதின்மங்களின் நினைவொன்று மீண்டும் துளிர்விட்டது. நினைவுகள் என்னைத் தாலாட்டும்போதும் வாட்டும்போதும் வாழ்க்கையை வாழவேண்டும் என்று எண்ணும் தோறும் நான் பேச விழையும் நட்பான விசாகனுடன் இந்த ட்வீற்றரினைப் பார்த்தவுடன் தொலைபேசியில் அழைத்துப் பேசி இருந்தேன். அப்போது மீட்டிய நினைவுகளை இப்போதும் காவித்திரிந்து  அவனது ஆறாம் மாத... Continue Reading →

வரலாற்றுணர்வும் கனடா 150 / காலனித்துவம் 150

ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ஒவ்வொரு மாதமும் கடைசிக் சனிக்கிழமைகளில் ஒழுங்குசெய்கின்ற கூட்டங்களிற்கு இயன்றவரை போய்விடுவதை வழமையாகக் கொண்டிருக்கின்றேன்.  இந்த முயற்சி ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை கிட்டத்தட்ட 3 வருடங்களாக எந்த ஒரு மாதமும் தடைப்படாமல் ஒவ்வொரு மாதமும் கடைசிச் சனிக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 7 மணிவரை இடம்பெறும் இந்தக் கூட்டங்கள் முக்கியமானவையாகவே தோன்றுகின்றன.  சில கூட்டங்களில் மிகவும் மேலோட்டமான தன்மைகளிலான அலசல்கள் இருந்தாலும் கூட சரியான திட்டமிடலுடனும் ஒழுங்குடனும் பொறுப்புணர்வுடன் கட்டுரைகள் தயாரிக்கப்பட்டு... Continue Reading →

SJ தம்பையா எழுதிய Srilanka Ethnic Fracticide and the Dismantling of Democracy என்கிற புத்தகத்தில் இருந்து 1983 ஆடி இனப்படுகொலை தொடர்பான சில பக்கங்கள்

 

கக்கூஸ் ஆவணப்படம் – உரையாடலுக்கான குறிப்பு

இந்த ஆவணப்படத்தினை முன்வைத்து சில விடயங்களை முக்கியமாகக் கவனப்படுத்தவேண்டும் என்று கருதுகின்றேன்.  இந்த ஆவணப்படமானது இந்தியச் சூழலை (தமிழ்நாட்டுச் சூழலை) மையமாக வைத்து உரையாடலை முன்வைக்கின்றது.  இதனைப் பார்க்கின்ற நாம் இந்தியச் சூழலில் மலம் அள்ளும் தொழிலாளர் மற்றும் சாதிய ஒடுக்குமுறைகள் என்கிற புரிதலோடு என்று படம் பார்ப்பதாகக் கடந்துபோய்விடக் கூடாது,  நாம் இவற்றை, இலங்கைச் சூழலிலும், புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் என்ற வகையில் கனடியச் சூழலிலும் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும்.  இது நமக்குப் புறம்பான பிரச்சனை அல்ல,... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑