மானுடத்தின் வரலாற்றுக் களங்கம்

முற்குறிப்பு ஈழத்தில் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயருடன் நுழைந்து பேரழிவுகளையும் போர்க்குற்றங்களையும் அரங்கேற்றி இவ்வாண்டு 30 ஆண்டுகள் ஆகின்றது.  இந்த நேரத்தில் ரொரன்றோவில் இருந்து வெளிவருகின்ற தாய்வீடு என்கிற மாதப் பத்திரிகை மானுடத்தின் வரலாற்றுக் களங்கம் என்ற பெயரில் ஒரு சிறப்புப் பகுதியினை ஓகஸ்ட் 2017 இற்குரிய இதழில் வெளியிட்டுள்ளது.  அதன் முக்கியத்துவம் கருதி இத்தொகுப்பிற்கான முன்னுரையையும் சிறப்புப்பகுதியின் PDF இனையும் இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். மானுடத்தின் வரலாற்றுக் களங்கம் ஈழத்தமிழர்களின் பண்பாட்டிலும் வரலாற்றிலும் இந்தியாவின் செல்வாக்கு... Continue Reading →

நட்பதிகாரம் 1

கண் தெரியாதவருக்கு வண்ணங்கள் எப்படி இருக்கும் என்று உங்களால் புரியவைக்க முடிந்தால், இந்த உலகத்தில் உங்களால் எதையும் புரியவைக்க முடியும்!-@nesamani89 இந்தக் ட்வீற்றர் பதிவினை 18-04-2016 குங்குமம் இதழில் காணக்கிடைத்தபோது பதின்மங்களின் நினைவொன்று மீண்டும் துளிர்விட்டது. நினைவுகள் என்னைத் தாலாட்டும்போதும் வாட்டும்போதும் வாழ்க்கையை வாழவேண்டும் என்று எண்ணும் தோறும் நான் பேச விழையும் நட்பான விசாகனுடன் இந்த ட்வீற்றரினைப் பார்த்தவுடன் தொலைபேசியில் அழைத்துப் பேசி இருந்தேன். அப்போது மீட்டிய நினைவுகளை இப்போதும் காவித்திரிந்து  அவனது ஆறாம் மாத... Continue Reading →

வரலாற்றுணர்வும் கனடா 150 / காலனித்துவம் 150

ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ஒவ்வொரு மாதமும் கடைசிக் சனிக்கிழமைகளில் ஒழுங்குசெய்கின்ற கூட்டங்களிற்கு இயன்றவரை போய்விடுவதை வழமையாகக் கொண்டிருக்கின்றேன்.  இந்த முயற்சி ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை கிட்டத்தட்ட 3 வருடங்களாக எந்த ஒரு மாதமும் தடைப்படாமல் ஒவ்வொரு மாதமும் கடைசிச் சனிக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 7 மணிவரை இடம்பெறும் இந்தக் கூட்டங்கள் முக்கியமானவையாகவே தோன்றுகின்றன.  சில கூட்டங்களில் மிகவும் மேலோட்டமான தன்மைகளிலான அலசல்கள் இருந்தாலும் கூட சரியான திட்டமிடலுடனும் ஒழுங்குடனும் பொறுப்புணர்வுடன் கட்டுரைகள் தயாரிக்கப்பட்டு... Continue Reading →

SJ தம்பையா எழுதிய Srilanka Ethnic Fracticide and the Dismantling of Democracy என்கிற புத்தகத்தில் இருந்து 1983 ஆடி இனப்படுகொலை தொடர்பான சில பக்கங்கள்

 

கக்கூஸ் ஆவணப்படம் – உரையாடலுக்கான குறிப்பு

இந்த ஆவணப்படத்தினை முன்வைத்து சில விடயங்களை முக்கியமாகக் கவனப்படுத்தவேண்டும் என்று கருதுகின்றேன்.  இந்த ஆவணப்படமானது இந்தியச் சூழலை (தமிழ்நாட்டுச் சூழலை) மையமாக வைத்து உரையாடலை முன்வைக்கின்றது.  இதனைப் பார்க்கின்ற நாம் இந்தியச் சூழலில் மலம் அள்ளும் தொழிலாளர் மற்றும் சாதிய ஒடுக்குமுறைகள் என்கிற புரிதலோடு என்று படம் பார்ப்பதாகக் கடந்துபோய்விடக் கூடாது,  நாம் இவற்றை, இலங்கைச் சூழலிலும், புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் என்ற வகையில் கனடியச் சூழலிலும் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும்.  இது நமக்குப் புறம்பான பிரச்சனை அல்ல,... Continue Reading →

அன்றாட பால்வாதம் (Everyday Sexism) திட்டம் பற்றிய அறிமுகம்

பொதுவெளியில் இயங்கிவருகின்ற பெண்களுக்கு எதிரான வன்மமும் அவதூறுகளும் தாக்குதல்களும் அதிகரித்துச் செல்வதையும் அவை தொழினுட்பத்தின் சகல சாத்தியங்களையும் மிகத் தவறான நோக்குடன் பயன்படுத்துவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  அதேநேரம் இது நாளாந்த வாழ்விலும், வேலைத்தளம் மற்றும் அனைத்துப் பொதுவெளிகளிலும் பெண்கள் ஒட்டுமொத்தமாக எதிர்நோக்குகின்ற பிரச்சனையாகவும் இருக்கின்றது.  பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்ற இதுபோன்ற வன்முறைகளைப் போலவே, இந்த வன்முறைகளுக்கான காரணங்களை ஆராய்கின்றோம் என்பதன் பெயரில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றத்துக்காக சூழலை உருவாக்கினார்கள் என்பதும் குற்ற உணர்ச்சியை நோக்கி நகர்த்துவதும் அந்த... Continue Reading →

அப்பா இல்லாத ஓராண்டு

துறந்தார்க்கும் துவ்வாதார்க்கும் இறந்தார்க்கும் நீ எஞ்ஞான்றும் நின்ற துணை அன்பும் அறனும் உடைத்த இல்வாழ்வை நீ வாழ்ந்து காட்டிய தகை அறத்தாற்றின் இல் வாழ்க்கை ஆற்றிக்காட்டி புறத்தாற்றுச் செல்லாமல் எமைத் தடுத்த கொடை வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வான் உறையும் தெய்வத்துக்கு ஆன இணை பப்பாவைப் பற்றி எழுதுவதென்றால் எதை எழுதுவது? எதை விடுவது? என்ற நினைப்பிலேயே சில தினங்கள் கழிந்துவிட்டன.  முன்பொருமுறை ஒரு வாழ்த்து மடலில் பப்பா பற்றி எழுதும்போது “பிரமாண்டங்களின் அழகு எல்லாம் சற்றே... Continue Reading →

ஞாயிறு இதழ்

"ஈழத்தின் தமிழ் வளர்ச்சிக்கு ஆறுமுக நாவலர் செய்த தொண்டை சிற்பத்துக்கு ஸ்ரீ நவரத்தினம் செய்துள்ளார்" என்று எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கியால் விதந்து கூறப்பட்டவர் கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்கள்.  1898 இல் இலங்கையின் வடபுலத்தில் உள்ள வண்ணார்பண்ணை என்கிற கிராமத்தில் பிறந்த இவர் இலங்கை, இந்தியாவின் கலைகள், சிற்பங்கள் குறித்தும் சமயவியலிலும் குறிப்பாக சைவசித்தாந்தத்திலும் முக்கியமான நூல்களை எழுதியவர்.  இவர் எழுதி 1941இல் வெளியான “தென்னிந்திய சிற்பக் கலைகள்” என்கிற நூலே தமிழில் சிற்பக்கலைகள் குறித்து வெளியான... Continue Reading →

மானுடத்தின் குரலாய் ஒலித்த எஸ்போஸ்

அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா அதிகாரத்திற்கெதிரான நமது இதயங்களைச் சிலுவையில் அறைவதா? என்கிற ஒரு காலத்தினதும் தலைமுறையினதும்  மனசாட்சிகளின் தவிப்பாக இருந்த நிராதரவுக் குரலை எழுதிய எஸ்போஸ் என்றறியப்பட்ட சந்திரபோஸ் சுதாகர் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் திகதி தனது ஏழு வயது மகனின் கண்ணெதிரே மிகக் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு பத்தாண்டுகளுக்குப் பின்னர் எஸ்போஸ் படைப்புகள் மற்றும் எஸ்போஸ் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் என்கிற இந்தத் தொகுப்பு நூல் கருணாகரன், ப, தயாளன், சித்தாந்தன் ஆகியோரைத்... Continue Reading →

முப்பால் காணொலி

அண்மையில் அதிகம் பாதித்த புத்தகம் என்று அடிக்கடி எழுதுவது சலிப்பைத் தந்தாலும், அண்மைக்காலமாக வாசித்த அனேகம் புத்தகங்கள் மனதளவில் பாதிப்பைத் தந்தனவாகவே இருக்கின்றன. “லிவிங் ஸ்மைல்” வித்யாவின் “நான் வித்யா”வை வாசித்தது அரவாணிகள் பற்றி இன்னும் அதிகம் வாசிக்கவேண்டும், அவர்கள் வாழ்க்கையைப் பற்றி, அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் ரேவதி தொகுத்த “உணர்வும் உருவமும்”, மற்றும் மகாராசன் தொகுத்த “அரவாணிகள்; உடலியல் – உளவியல்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑