முற்குறிப்பு: இந்தப் பதிவிற்கான தொடக்கமாக https://goo.gl/b5Qtoq என்கிற என் முகநூல் பதிவு அமைந்தது. இந்தப் பதிவில் Kanaga Sivakumar அவர்கள் இட்டிருந்த பின்னூட்டங்களிற்கான பதில் ஒரே பின்னூட்டமாகப் போட முடியாத அளவில் அமைந்தமையால் அதனைத் தனிப்பதிவாகவே இங்கே பதிவுசெய்கின்றேன். இங்கே பகிரப்பட்டுள்ள காணொலி மறவன்புலவு சச்சிதானந்தின் பேச்சிற்கான எதிர்வினையாகவும், அவருக்கு சரியான பதிலடி என்பதாகக் குறிப்பிட்டும் பகிரப்பட்டிருந்தது. அவ்வாறு இந்தக் காணொலியைப் பகிர்வதில் இருக்கக் கூடிய அறப்பிறழ்வையும் அபத்தத்தையும் சுட்டிக்காட்டும் முகமாகவே இந்தப் பதிவினை முகநூலில் எழுதினேன். அதனடிப்படையில் இந்தப் பேச்சிலே... Continue Reading →
உரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து
புரூஸ் மக்ஆர்தரினால் கொலை செய்யப்பட்ட ஸ்கந்தா நவரட்ணம், கிருஷ்ணகுமார் கனகரட்ணம் உள்ளிட்ட எட்டுப் பேர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிகள் சென்ற வாரம் ரொரன்றோவில் இரண்டு இடங்களில் நடைபெற்றிருந்தன. இவற்றில் வெள்ளிக்கிழமை ஸ்கார்பறோ சிவிக் சென்ரரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன். இந்நிகழ்வினை தமிழ்த்தாய் மன்றம் நாடு கடந்த தமிழீழ அரசு கனடியத் தமிழர் தேசிய அவை தமிழர் வகை துறை வள நிலையம் (தேடகம்) Alliance for South Asian Aids Prevention கனடிய நயினாதீவு அபிவிருத்திச் சங்கம் கந்தமுருகேசனார்... Continue Reading →
க. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை
தொடர்ச்சியாக பல்வேறு கலை இலக்கியப் பரப்புகளில் இயங்கிக்கொண்டிருக்கின்ற நவம் அவர்களின் பரதேசம் போனவர்கள், படைப்புகளும் பார்வைகளும், தடங்களைக் கடந்து செல்லும் காலநதி ஆகிய மூன்று நூல்கள் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நான்காவது பரிமாணம் வெளியீடாக வந்திருந்தன. கனடாவின் ஆரம்பகால பதிப்பகங்களின் ஒன்றான நான்காவது பரிமாணம் பதிப்பகத்தின் ஊடாக பல்வேறு நூல்களை வெளியிட்டவராக நவம் அவர்கள் இருந்தபோதும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அவரது எழுத்துகள் நூலுருவாக்கம் காணவில்லை. ஆயினும் மிகவும் சிரத்தையுடனான தயாரிப்புகளுடனும் தெளிவுடனும் நவம் அவர்கள்... Continue Reading →
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும்
மார்ச் 18 அன்று ரொரன்டோ. கனடாவில் இலங்கையில் பௌத்த சிங்கள இனவாதிகளினால் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இடம்பெற்ற கண்டனக் கூட்டத்தில் பல்லின மக்களும் உணர்வுத் தோழமையுடன் கலந்துகொண்டனர். 200ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தங்கள் தோழமையை வெளிப்படுத்திய இந்தக்கூட்டத்தில் ரேமன்ட் சா (ஒன்ராறியோ பாராளுமன்ற உறுப்பினர்), கரி ஆனந்தசங்கரி (கனடா பாராளுமன்ற உறுப்பினர்), ஜோன் (அனைத்துலக மன்னிப்பு சபை), ரகுமான் ஜான் (அரசியல் செயற்பாட்டாளர்), அஜித் ஜினதாச (அரசியல் செயற்பாட்டாளர்), மீரா பாரதி... Continue Reading →
தி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும்
ஈழத்தவர்களின் வரலாறு பற்றியும் அவர்களின் அடையாளம் குறித்தும் பேசும்போது ஈழத்தவர்களின் பண்பாட்டு வரலாற்றைப் பற்றிய ஆவணப்படுத்தல்களைச் செய்வதும் ஆய்வுகளைச் செய்வதும் அவற்றை மக்களிடம் கொண்டுசேர்ப்பதும் முக்கியமானவை. குறிப்பாக ஈழத்து இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் நாம் எமது தனித்துவத்தையும் தனியான மரபையும் பற்றித் தொடர்ந்து சொல்லவேண்டியவர்களாகவே இருக்கின்றோம். ஈழத்தவர்களுக்கென்று பதிப்புத்துறை வளர்ச்சியடையாமல் இருக்கின்ற சூழலில் சந்தைப்படுத்தலும் சவாலாகவே இருக்கின்றது. இதனால் ஏற்கனவே இருக்கின்ற பதிப்பகங்களும் கூட பொருளாதார ரீதியில் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வனவாகவே இருக்கின்றன. இவற்றினை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும்... Continue Reading →
கனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள்
குறிப்பு: ரொரன்றோவில் இருக்கின்ற ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயத்திற்கு சிற்பிகளாக அழைத்து வரப்பட்ட நால்வர் CBC க்கு கோயில் தொழிலாளர்களை நடத்தும் விதம் குறித்தும் அங்கு நடக்கின்ற அத்துமீறல்கள் குறித்தும் தெரிவித்த தகவல்களையும் அது தொடர்பான மேலதிக கருத்துகளையும் தொகுத்து பதிவேற்றியிருக்கின்றது. இவற்றை இக்கோயில் நிர்வாகம் மறுத்திருந்தாலும், அந்தக் குற்றச்சாற்றுகளில் உண்மை இருக்கலாம் என்று கருதமுடிகின்றது. CBC இல் வெளியான கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம். http://www.cbc.ca/news/canada/toronto/hindu-priest-abuse-allegations-1.4485863 கனடாவில் இருக்கின்ற கோயில்களில் நடக்கின்ற சுரண்டல்கள் குறித்தும் அவை எவ்விதம்... Continue Reading →
காத்திருப்பு கதை குறித்து…
தமிழ்நதி எழுதி கபாடபுரம் இணைய இதழில் வெளிவந்திருக்கின்ற இந்தக் கதை பேசுகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விடயம் முக்கியமானது. பொதுவாக, சமகாலப் பிரச்சனைகள் பற்றி கலை இலக்கியப் படைப்புகள் ஊடாக வெளிப்படுத்தவேண்டும் என்பதை தொடர்ச்சியாக முன்வைப்பது எனது வழக்கம். அந்த வகையில் காணமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி கதையொன்றில் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் அதுவும் தமிழ்நதி போன்ற பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரால் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் முக்கியமானது. ஆனால் தமிழ்நதியின் இந்தக் கதையில் இருக்கின்ற ஒரு விதமான ”வீர வழிபாட்டுத்தனம்” -... Continue Reading →
UN LOCK குறும்படம் திரையிடல்
Toronto Reel Asia International Film Festival இல் திரையிட தெரிவான Unlock குறும்படத்தின் இயக்குனர் நிரு நடராஜா மேற்படி திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக ரொரன்றோ வந்திருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் அக்குறும்படத்தினைப் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது. Unlock அவரது முதலாவது திரைப்பட முயற்சி என்றபோதும் திரைத்துறையில் அவரது பங்கேற்பு ஏற்கனவே இருந்திருக்கின்றது. மூங்கில் நிலா என்கிற ஒரு இசைத் தொகுப்பினை 2000 ஆம் ஆண்டளவில் வெளியிட்டிருந்த நிரு, பின்னர் கலாபக் காதலன், ராமேஸ்வரம் ஆகிய தென்னிந்தியத்... Continue Reading →
நிறம் தீட்டுவோம் ஆவணப்படம்
விபீஷன் மகேந்திரராஜாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கின்ற “நிறம் தீட்டுவோம்” என்கிற ஆவணப்படத்தினை அண்மையில் பார்க்க முடிந்தது. வவுனியாவில் வசிக்கின்ற விபீஷன் இருபதுகளின் ஆரம்ப வயதில் இருப்பவர் என்று அறியமுடிகின்றது. சமூக வலைத்தளங்களை மையமாகக் கொண்டு தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற அல்லது முன்னெடுப்புகளை ஆரம்பிக்கின்ற தலைமுறையைச் சேர்ந்த அவரது சமூக அக்கறையையும், பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துவதாக இந்த ஆவணப்படம் அமைகின்றது. நிறம் தீட்டுவோம் என்கிற ஆவணப்படம் பற்றிய அறிமுகக் குறிப்பினை “பார்வைப்புலனை முற்றிலும் இழந்த மாணவன் கலைச்செல்வனின் வாழ்க்கைப்பயணத்தினூடாக மாற்றுவலு மாணவர்களின்... Continue Reading →
Happy Together திரைப்பட அறிமுகம்
In the mood for love திரைப்படத்தின் இயக்குனர் என்றே எனக்கு அறிமுகமான Wong Kar-wai, அதற்கு முன்னதாகவே இயக்கிய முக்கியமான திரைப்படமான Happy Together 1997 இல் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றது. 1997 ஆம் ஆண்டுக்குரிய கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை வொங் கார்-வைக்குப் பெற்றுத்தந்த இத்திரைப்படத்தில் பிரதான பாத்திரத்தில் Tony Leung Chiu-wai, Leslie Cheung, Chang Chen ஆகியோர் நடித்திருக்கின்றார்கள். ஹொங்கொங்கில் இருந்து ஆஜெந்தீனாவிற்குப் புலம்பெயர்ந்திருக்கின்ற ஆண் இணைகளான... Continue Reading →