தெணியான் ஈழத்தின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராவார். இவரது இயற்பெயர் கந்தையா நடேசு என்பதாகும். ஈழத்தில் வல்வெட்டித்துறையில் இருக்கின்ற பொலிகண்டி என்ற கிராமத்தில் “தெணி” என்ற இடத்தில் பிறந்தவர். அவரது வீட்டின் பெயரும் தெணியகம் என்பதாகும். இன்று ஈழத்தில் கிராமங்களுக்குப் பெயர்கள் இருப்பதுபோல முன்னர் ஒவ்வொரு காணிகளுக்கும் வீடுகளுக்கும் பெயர்கள் இருந்தன என்பதை அறிந்திருப்பீர்கள். அந்தப் பெயரினையே தனது புனைபெயராகவும் தெணியான் வரித்துகொண்டார். தெணியான் முற்போக்கு இயக்கத்துடன் சேர்த்து அடையாளம் காணப்படுபவர். சமூக மாற்றத்துக்கான ஒரு கருவியாகவும் தூண்டியாகவும்... Continue Reading →
“சொற்களால் அமையும் உலகு: சில உரைகள் – சில விமர்சனங்கள்” நூலினை முன்வைத்து ஓர் உசாவல்
வாசிப்பும் தேடலும் நிறைந்தவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் திறப்பினைச் செய்வதாக அமைந்துவிடும் நூல்கள் எல்லாம் முக்கியமானவையாகவே அமைந்துவிடுகின்றன. வாசிப்பு தரும் அனுபவமானது இதற்கு முன்னர் வாசித்த ஏதோ நூலுடனோ, கண்ட சம்பவத்துடனோ தனி அனுபவத்துடனோ தொடர்புபட்டதாகி, அனுபவத்தின் நீட்சியை ஏற்படுத்திவிடுகின்றது. அத்தகைய, அனுபவ நீட்சியை ஏற்படுத்திய ஒரு நூலாக செல்வமனோகரன் எழுதிய ”சொற்களால் அமையும் உலகு” என்ற நூலினைச் சொல்லமுடியும். செல்வமனோகரன் எனக்கு முதலில் ஒரு பேச்சாளராகத்தான் அறிமுகமானார். நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில்,... Continue Reading →
கலைஞர் என்பது ஒரு சொல்லல்ல…
கலைஞர் எழுதிய வசனங்களில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் ராஜாராணி திரைப்படத்தில் அவர் எழுதி இடம்பெற்ற ”காவேரி தந்த தமிழகத்துப் புதுமணலில் கரையமைத்து சேர சோழ பாண்டி மன்னர் கோபுரத்துக் கலசத்தில் யார் கொடிதான் பறப்பதென்று இன்று போல் போரிட்டுக்கொண்டிருந்த காலமது...” என்று தொடங்குகின்ற வசனமாகும். கெடுக சிந்தை, கடிது இவள் துணிவே என்று தொடங்குகின்ற புறநானூற்றுப் பாடலுக்கு உரையாக சங்கத்தமிழ் என்கிற கலைஞரின் நூலில் இந்த வசனகவிதை இடம்பெற்றிருந்தது. நான் படித்து இன்புற்ற கலைஞரின் எழுத்து... Continue Reading →
தோழமை என்றொரு சொல்: ரொரன்றோவில் இடம்பெற்ற செழியன் நினைவு நாளை முன்வைத்து…
நேற்றுக் கலந்துகொண்ட செழியனின் நினைவு நிகழ்வு பற்றியதாகவே சிந்தனை இருக்கின்றது. செழியன் என்ற ஆளுமையை ஒட்டுமொத்தமாக எப்படிப் பார்ப்பது? செழியன் எப்படியானவராக இருந்தார்? அவர் சமூகத்துடன் எப்படி உறவாடினார்? செழியன் போன்ற மனிதர்களை இந்த சமூகம் எப்படிக் கையாண்டிருக்கின்றது? என்பதாகச் சிந்தனைகள் செழியன் குறித்தும் இறந்துபோன இன்னும் சில நண்பர்கள், ஆளுமைகள் குறித்ததுமாக மாறி மாறி வந்துபோய்க்கொண்டே இருந்தன. (1) செழியனின் இறப்பின் பின்னர் பலரும் எழுதிய குறிப்புகள் செழியனின் வீழ்ச்சியையும் தொட்டுச் சென்றனவாகவே இருந்தன. ... Continue Reading →
க. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை
தொடர்ச்சியாக பல்வேறு கலை இலக்கியப் பரப்புகளில் இயங்கிக்கொண்டிருக்கின்ற நவம் அவர்களின் பரதேசம் போனவர்கள், படைப்புகளும் பார்வைகளும், தடங்களைக் கடந்து செல்லும் காலநதி ஆகிய மூன்று நூல்கள் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நான்காவது பரிமாணம் வெளியீடாக வந்திருந்தன. கனடாவின் ஆரம்பகால பதிப்பகங்களின் ஒன்றான நான்காவது பரிமாணம் பதிப்பகத்தின் ஊடாக பல்வேறு நூல்களை வெளியிட்டவராக நவம் அவர்கள் இருந்தபோதும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அவரது எழுத்துகள் நூலுருவாக்கம் காணவில்லை. ஆயினும் மிகவும் சிரத்தையுடனான தயாரிப்புகளுடனும் தெளிவுடனும் நவம் அவர்கள்... Continue Reading →
தி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும்
ஈழத்தவர்களின் வரலாறு பற்றியும் அவர்களின் அடையாளம் குறித்தும் பேசும்போது ஈழத்தவர்களின் பண்பாட்டு வரலாற்றைப் பற்றிய ஆவணப்படுத்தல்களைச் செய்வதும் ஆய்வுகளைச் செய்வதும் அவற்றை மக்களிடம் கொண்டுசேர்ப்பதும் முக்கியமானவை. குறிப்பாக ஈழத்து இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் நாம் எமது தனித்துவத்தையும் தனியான மரபையும் பற்றித் தொடர்ந்து சொல்லவேண்டியவர்களாகவே இருக்கின்றோம். ஈழத்தவர்களுக்கென்று பதிப்புத்துறை வளர்ச்சியடையாமல் இருக்கின்ற சூழலில் சந்தைப்படுத்தலும் சவாலாகவே இருக்கின்றது. இதனால் ஏற்கனவே இருக்கின்ற பதிப்பகங்களும் கூட பொருளாதார ரீதியில் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வனவாகவே இருக்கின்றன. இவற்றினை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும்... Continue Reading →
காத்திருப்பு கதை குறித்து…
தமிழ்நதி எழுதி கபாடபுரம் இணைய இதழில் வெளிவந்திருக்கின்ற இந்தக் கதை பேசுகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விடயம் முக்கியமானது. பொதுவாக, சமகாலப் பிரச்சனைகள் பற்றி கலை இலக்கியப் படைப்புகள் ஊடாக வெளிப்படுத்தவேண்டும் என்பதை தொடர்ச்சியாக முன்வைப்பது எனது வழக்கம். அந்த வகையில் காணமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி கதையொன்றில் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் அதுவும் தமிழ்நதி போன்ற பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரால் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் முக்கியமானது. ஆனால் தமிழ்நதியின் இந்தக் கதையில் இருக்கின்ற ஒரு விதமான ”வீர வழிபாட்டுத்தனம்” -... Continue Reading →
ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினரால் பதிப்பிக்கப்பட்டு, சோமேசசுந்தரி கிருஷ்ணகுமாரை பதிப்பாசிரியராகக் கொண்டு ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை இந்துசாதனத்தில் எழுதிய எழுத்துகள் “உலகம் பலவிதம்” என்கிற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்புவில் இடம்பெற்ற இந்த நூலின் வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து ஒக்ரோபர் மாதம் 22ம் திகதி ரொரன்றோவில் இந்நூலின் அறிமுக வெளியீட்டுவிழாவினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினரும் நூலக நிறுவனத்தினரும் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். புலம்பெயர் நாடுகளில் இயங்கிவருகின்ற பழைய மாணவர் சங்கங்கள்,... Continue Reading →
போர்க்காலக் கவிஞர்களின் போர்க்காலக் கவிதைகள்
-சிறுகுறிப்பு தமிழ்த் தாய் மன்றம் ஒழுங்கு செய்திருந்த “போர்க்காலக் கவிஞர்களின் போர்க்கால கவிதைகள்” என்கிற இலக்கிய அமர்வொன்று செப்ரம்பர் ஒன்பதாம் திகதி நடைபெற்றது. தமிழ் முறைத் திருமணம் செய்து வைத்தல், தமிழ்ப் பெயர் உள்ள குழந்தைகளுக்குப் பரிசு வழங்குதல் என்பவற்றில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் தமிழ்த்தாய் மன்றம் ஒழுங்குசெய்திருந்த முதலாவது இலக்கிய நிகழ்வு இது என்று நிகழ்விலேயே குறிப்பிட்டிருந்தார்கள். இந்த நிகழ்வில் அம்புலியின் “மீண்டும் பிறக்கின்றோம்”, கப்ரன் கஸ்தூரியின் “வல்லரசுகள்” மேஜர் பாரதியின் “விடிவிற்காய் எழுவோம்”, வியாசனின் (புதுவை... Continue Reading →
ஞாயிறு இதழ்
"ஈழத்தின் தமிழ் வளர்ச்சிக்கு ஆறுமுக நாவலர் செய்த தொண்டை சிற்பத்துக்கு ஸ்ரீ நவரத்தினம் செய்துள்ளார்" என்று எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கியால் விதந்து கூறப்பட்டவர் கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்கள். 1898 இல் இலங்கையின் வடபுலத்தில் உள்ள வண்ணார்பண்ணை என்கிற கிராமத்தில் பிறந்த இவர் இலங்கை, இந்தியாவின் கலைகள், சிற்பங்கள் குறித்தும் சமயவியலிலும் குறிப்பாக சைவசித்தாந்தத்திலும் முக்கியமான நூல்களை எழுதியவர். இவர் எழுதி 1941இல் வெளியான “தென்னிந்திய சிற்பக் கலைகள்” என்கிற நூலே தமிழில் சிற்பக்கலைகள் குறித்து வெளியான... Continue Reading →