நேற்றுக் கலந்துகொண்ட செழியனின் நினைவு நிகழ்வு பற்றியதாகவே சிந்தனை இருக்கின்றது. செழியன் என்ற ஆளுமையை ஒட்டுமொத்தமாக எப்படிப் பார்ப்பது? செழியன் எப்படியானவராக இருந்தார்? அவர் சமூகத்துடன் எப்படி உறவாடினார்? செழியன் போன்ற மனிதர்களை இந்த சமூகம் எப்படிக் கையாண்டிருக்கின்றது? என்பதாகச் சிந்தனைகள் செழியன் குறித்தும் இறந்துபோன இன்னும் சில நண்பர்கள், ஆளுமைகள் குறித்ததுமாக மாறி மாறி வந்துபோய்க்கொண்டே இருந்தன. (1) செழியனின் இறப்பின் பின்னர் பலரும் எழுதிய குறிப்புகள் செழியனின் வீழ்ச்சியையும் தொட்டுச் சென்றனவாகவே இருந்தன. ... Continue Reading →
கிரிக்கெட்டின் மூலம் “இலங்கையர்” ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட் 3)
1996 உலகக் கிண்ணம் தொடங்கியபோது இலங்கை அணி முதலாவது ஆட்டத்திலேயே புத்துணர்ச்சியுடனும் வித்தியாசமான வியூகங்களுடனும் விளையாடியது. சிம்பாப்வே அணியுடனான முதலாவது போட்டியில் ஆரம்ப ஆட்டக்காரர்கள் இருவரும் பெரிதாக ஓட்டங்கள் எதையும் பெறாதபோதும் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு இந்தியாவுடன் இலங்கை மோதியது. இந்தப் போட்டி இலங்கை அணி, அதற்கு முன்னர் இருந்த இலங்கை அணி அல்ல என்பதை பிரகடனம் செய்த போட்டி போல அமைந்தது என்றே சொல்லவேண்டும். அன்றைய காலத்தில் நல்ல ஓட்டங்கள்... Continue Reading →
அரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும்
இந்தியக் கிரிக்கெட் வாரியம் தனியார் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்புக்கான அனுமதியை விற்கத் தொடங்கியது நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் கிரிக்கெட்டின் பரவலிலும் மிகப் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியதுடன் கிரிக்கெட் ஒளிபரப்பானது பொருளாதார ரீதியிலும் மிகப்பெரிய அளவில் உதவக்கூடியது என்பதையும் நிரூபிப்பதாக இருந்தது. இந்தியாவை எடுத்துக்கொண்டால் 1980 வரை கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக கிரிக்கெட் வாரியம் தூர்தர்ஷனுக்கு கட்டணம் செலுத்துகின்ற நிலைமையே இருந்தது. மெல்ல மெல்ல இந்த நிலைமை மாறி 1992 இல் இடம்பெற்ற இந்தியாவிற்கும்... Continue Reading →
அரசியல் கிரிக்கெட் பகுதி 1
அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். பாடசாலையில் மதிய இடைவேளையில் பக்கத்து வகுப்பு மாணவர்களுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவது வழக்கம். வழமையான போட்டிகளின்போது ஸ்கோர் பதிவுகளைச் செய்கின்ற மாணவன் வராத நாளொன்றில் என்னை ஸ்கோர் பண்ணுமாறு கேட்டார்கள். நானும் கொப்பி ஒன்றின் பின்பக்கத்தில், விளையாடுகின்ற ஒவ்வொருவரது பெயரையும் எழுதி பந்துவீச்சில் கொடுத்த ஓட்டங்கள், துடுப்பாட்ட வீரர்கள் எடுத்துக்கொண்ட ஓட்டங்கள் என்று பதிவுசெய்தேன். ஒவ்வொரு வீரரும் எப்படி ஆட்டமிழந்தார்கள், யாரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்கள் என்கிற விபரங்களை எல்லாம் குறித்தேன். ஒவ்வொரு... Continue Reading →
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே!
நான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிப் பழைய மாணவர்களில் ஒருவன். இலங்கையில் நடைமுறையில் உள்ள கல்விமுறையில் பாடசாலை அனுமதிகள் கிடைக்கும் விதம் பற்றியும் அது இலங்கையில் இருக்கக் கூடிய அனைத்துப் பாடசாலைகளின் செல்நெறியிலும் ஏற்படுத்தி இருக்கக்கூடிய தாக்கம் குறித்தும், சில பாடசாலைகள் மாத்திரம் வசதிகளும் சலுகைகளும் குவிக்கப்பட்டனவாய் அமைந்திருப்பது குறித்தும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக சிறு கிராமங்களில் இருக்கின்ற பாடசாலைகள் கிட்டத்தட்ட கவனிப்பாரற்று மாணவர்கள் வரத்தற்று கைவிடப்படும் நிலைமையே காணப்படுகின்றது. இந்த அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் நிகழும்... Continue Reading →
நற்சான்றுப் பத்திரம்
முற்குறிப்பு: இந்தப் பதிவிற்கான தொடக்கமாக https://goo.gl/b5Qtoq என்கிற என் முகநூல் பதிவு அமைந்தது. இந்தப் பதிவில் Kanaga Sivakumar அவர்கள் இட்டிருந்த பின்னூட்டங்களிற்கான பதில் ஒரே பின்னூட்டமாகப் போட முடியாத அளவில் அமைந்தமையால் அதனைத் தனிப்பதிவாகவே இங்கே பதிவுசெய்கின்றேன். இங்கே பகிரப்பட்டுள்ள காணொலி மறவன்புலவு சச்சிதானந்தின் பேச்சிற்கான எதிர்வினையாகவும், அவருக்கு சரியான பதிலடி என்பதாகக் குறிப்பிட்டும் பகிரப்பட்டிருந்தது. அவ்வாறு இந்தக் காணொலியைப் பகிர்வதில் இருக்கக் கூடிய அறப்பிறழ்வையும் அபத்தத்தையும் சுட்டிக்காட்டும் முகமாகவே இந்தப் பதிவினை முகநூலில் எழுதினேன். அதனடிப்படையில் இந்தப் பேச்சிலே... Continue Reading →
உரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து
புரூஸ் மக்ஆர்தரினால் கொலை செய்யப்பட்ட ஸ்கந்தா நவரட்ணம், கிருஷ்ணகுமார் கனகரட்ணம் உள்ளிட்ட எட்டுப் பேர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிகள் சென்ற வாரம் ரொரன்றோவில் இரண்டு இடங்களில் நடைபெற்றிருந்தன. இவற்றில் வெள்ளிக்கிழமை ஸ்கார்பறோ சிவிக் சென்ரரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன். இந்நிகழ்வினை தமிழ்த்தாய் மன்றம் நாடு கடந்த தமிழீழ அரசு கனடியத் தமிழர் தேசிய அவை தமிழர் வகை துறை வள நிலையம் (தேடகம்) Alliance for South Asian Aids Prevention கனடிய நயினாதீவு அபிவிருத்திச் சங்கம் கந்தமுருகேசனார்... Continue Reading →
க. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை
தொடர்ச்சியாக பல்வேறு கலை இலக்கியப் பரப்புகளில் இயங்கிக்கொண்டிருக்கின்ற நவம் அவர்களின் பரதேசம் போனவர்கள், படைப்புகளும் பார்வைகளும், தடங்களைக் கடந்து செல்லும் காலநதி ஆகிய மூன்று நூல்கள் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நான்காவது பரிமாணம் வெளியீடாக வந்திருந்தன. கனடாவின் ஆரம்பகால பதிப்பகங்களின் ஒன்றான நான்காவது பரிமாணம் பதிப்பகத்தின் ஊடாக பல்வேறு நூல்களை வெளியிட்டவராக நவம் அவர்கள் இருந்தபோதும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அவரது எழுத்துகள் நூலுருவாக்கம் காணவில்லை. ஆயினும் மிகவும் சிரத்தையுடனான தயாரிப்புகளுடனும் தெளிவுடனும் நவம் அவர்கள்... Continue Reading →
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும்
மார்ச் 18 அன்று ரொரன்டோ. கனடாவில் இலங்கையில் பௌத்த சிங்கள இனவாதிகளினால் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இடம்பெற்ற கண்டனக் கூட்டத்தில் பல்லின மக்களும் உணர்வுத் தோழமையுடன் கலந்துகொண்டனர். 200ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தங்கள் தோழமையை வெளிப்படுத்திய இந்தக்கூட்டத்தில் ரேமன்ட் சா (ஒன்ராறியோ பாராளுமன்ற உறுப்பினர்), கரி ஆனந்தசங்கரி (கனடா பாராளுமன்ற உறுப்பினர்), ஜோன் (அனைத்துலக மன்னிப்பு சபை), ரகுமான் ஜான் (அரசியல் செயற்பாட்டாளர்), அஜித் ஜினதாச (அரசியல் செயற்பாட்டாளர்), மீரா பாரதி... Continue Reading →
தி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும்
ஈழத்தவர்களின் வரலாறு பற்றியும் அவர்களின் அடையாளம் குறித்தும் பேசும்போது ஈழத்தவர்களின் பண்பாட்டு வரலாற்றைப் பற்றிய ஆவணப்படுத்தல்களைச் செய்வதும் ஆய்வுகளைச் செய்வதும் அவற்றை மக்களிடம் கொண்டுசேர்ப்பதும் முக்கியமானவை. குறிப்பாக ஈழத்து இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் நாம் எமது தனித்துவத்தையும் தனியான மரபையும் பற்றித் தொடர்ந்து சொல்லவேண்டியவர்களாகவே இருக்கின்றோம். ஈழத்தவர்களுக்கென்று பதிப்புத்துறை வளர்ச்சியடையாமல் இருக்கின்ற சூழலில் சந்தைப்படுத்தலும் சவாலாகவே இருக்கின்றது. இதனால் ஏற்கனவே இருக்கின்ற பதிப்பகங்களும் கூட பொருளாதார ரீதியில் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வனவாகவே இருக்கின்றன. இவற்றினை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும்... Continue Reading →