Ontario Science Centre மூடுதல் அறிவிப்பும் செய்தித் தணிக்கையும்

ஒன்ராறியோவின் உட்கட்டுமான அமைச்சர் (infrastructure minister) Kinga Surma, Ontario Science Centre இன் கூரையில் உள்ள ஓடுகள்/கூரை மோசமான நிலையில் இருப்பதாகவும், அதனால், பொதுமக்களின் நலனை முன்னிட்டு அதனை பொதுமக்கள் பாவனையில் இருந்து உடனடியாக மூடப்பட வேண்டும் என்று நிபுணர்களின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி Ontario Science Centre உடனடியாக மூடப்படுவதாக வெள்ளிக்கிழமை, ஜூன் 21, 2024 அன்று அறிவித்தார்.  ஆயினும் இந்தப் பரிசோதனைகளைச் செய்த Rimkus Consulting Group இன் அறிக்கையின்படி Ontario Science Centre அமைந்துள்ள மூன்று கட்டிடங்களும் ஒக்ரோபர் 31, 2024 வரை பாதுகாப்பானவை என்று கூறுகிறது.

https://drive.google.com/file/d/1tAihk9wst5vbtips_6Mdnag1W1hsMO6E/view

மேலும், கூரைகளை உடனடியாகப் புதுப்பிக்கவேண்டிய தேவையில்லை என்றும் இடர் மேலாண்மைக்கான திட்டமிடலைத் தாம் பரிந்துரைப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுவதாகத் தெரிகின்றது. இது தொடர்பான கட்டுரையை ரபள் இணையத்தளம் பிரசுரித்துள்ளது https://rabble.ca/politics/canadian-politics/no-reason-to-close-it-outcry-as-ontario-government-closes-science-centre/

Ontario Science Centre இனை வடிவமைத்த Moriyama Teshima Architects, Ontario Science Centre மூடப்படுவது அரசியல் காரணங்களுக்காகவே அன்றி பாதுகாப்புக் காரணங்களுக்காக அல்ல என்று தெரிவித்துள்ளது. https://globalnews.ca/news/10591097/architecture-firm-ontario-science-centre-says-closure-political-move/

தற்போது இவை தொடர்பான விவாதங்கள் கனடிய ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் வலுப்பெற்றுவருகின்றன. 

இந்த நிலையில் இவைபற்றிய விடயங்களை கனடாவில் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரமுடியாமல் இருக்கின்றது.    தி ஒன்லைன் நியூஸ் அக்ட் என்ற பெயரில் கனடாவில் ஜூன் 2023 முதல் அமுல்படுத்தப்பட்ட சட்டத்தின் தொடர்ச்சியாக (https://crtc.gc.ca/eng/industr/info.htm) முகநூல் செய்தி ஊடகங்களிற்கான இணைப்பை முகநூலில் பகிர்வதற்கான தடையை அமுல்படுத்தியது https://www.cbc.ca/radio/sunday/canadian-media-news-meta-facebook-1.6939274

இது திட்டமிட்டோ திட்டமிடாமலோ அரசு + முக நூல் இணைந்து செய்த மிகப்பெரிய செய்தித் தணிக்கை என்கிற ஒடுக்குமுறைக்கே வித்திட்டது. 

இந்த ஒடுக்குமுறையில் இருந்து நாம் விடுபடுவதற்கான உபாயங்களும் பொறிமுறைகளும் என்னவென்பதை நாம் ஆராயவேண்டிய காலம் இது!

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑