ஏர் கனடாவின் விமானப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு எதிராக கனடா தொழிலாளர் சட்டத்தின் 107 ஆம் பிரிவைப் பிரயோகித்து அவர்கள் வேலைத்துக் திரும்புவது நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றது என்பதை பெரும்பாலோனோர் அறிவோம். தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காகப் பல்வேறு பேச்சுவார்த்தைப் படிநிலைகளின் பின்னர் அவை எவையும் தமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கவில்லை என்கிறபோதே வேலைநிறுத்தம் போன்ற முடிவுகளை எடுக்கின்றார்கள். அப்படி இருக்கின்றபோதும் ஜூன் 2024 இற்குப் பின்னர், கடந்த 14 மாதங்களில் எட்டாவது தடவையாக கனடா தொழிலாளர் சட்டத்தின் 107 ஆம் பிரிவு பிரயோகிக்கப்பட்டு தொழிலாளர் வேலைக்குத் திரும்பும்படி நிர்ப்பந்திக்கப்படுவது நடந்திருக்கின்றது என்பதை அறியமுடிகின்றது.
ஏற்கனவே துறைமுகத் தொழிலாளர்கள், ரெயில்வே தொழிலாளர்கள், கனடா தபால் சேவைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு எதிராகப் பாவிக்கப்பட்ட இந்தச் சட்டம் இம்முறை ஏர் கனடா விமானப் பணியாளர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மந்தநிலை, பணவீக்க அதிகரிப்பு போன்ற நிலைமைகளைக் காரணமாகக் காட்டி தொழிலாளர் உரிமைகளைக் குறைப்பது, தனியார் மயத்தை அதிகரிப்பது, தொழிலாளர் நலத்திட்டங்களைக் குறைப்பது / இல்லாமல் ஆக்குவது போன்ற போக்குகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் இப்படியான வேலைநிறுத்தங்கள் ஏன் நடக்கின்றன, அவர்களது கோரிக்கைகள் என்ன, அதற்கு எதிரான ஆட்சி அதிகாரங்களில் இருப்போரின் நியாயப்படுத்தல்களில் இருக்கின்ற உண்மைகள் என்ன என்பவற்றை நாம் தேடிப்பார்ப்பது அவசியம்.
வாசிக்க / பார்க்கப் பரிந்துரைக்கின்ற சில இணைப்புகள்.
- https://rabble.ca/labour/flight-attendants-air-canada/
- https://cupe.ca/air-canada-flight-attendants-forced-issue-strike-notice-end-unpaid-work
- தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு அரசின் எதிர்வினைக்குப் பின்னரான மருதையனின் உரை https://www.youtube.com/watch?v=P7xyBoqVsjk
Leave a comment