32 கேள்விகளும் திணறிப்போன நிமிடங்களும்

இந்த தொடர் பதிவிற்கு என்னை அழைத்த தமிழன் – கறுப்பிக்கு நன்றிகள்

01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
தொடக்க காலத்தில் எனது கிறுக்கல்களுக்கெல்லாம் சூரிய புத்திரன் என்ற பெயரைத்தான் பயன்படுத்திவந்தேன்.  சூரியன் பூமியின் காதலன் என்பதை எடுத்துக்கொண்டு உருவாக்கிய பெயர் அது; பள்ளிக்காதலொன்றை என்பெயர் சொல்லும்போதெல்லாம் நினைவுகூரவேண்டும் என்பதற்காக அவ்விதம் உருவாக்கினேன்.  அந்தப் புனைபெயரில் மாத்திரம் அல்லாமல் எனது இயற்பெயரை நான் எழுதும் விதத்திலும் அந்த நினைவுகூரல் இருக்கும்.  ஆயினும் அதிலிருந்து வெளியேறவேண்டும் என்றும் எல்லாவற்றையும் மறக்கும் பொருட்டும் அந்த பெயரை விட்டொழித்தேன். அதன் பின்னர் பொன்னியின் செல்வனில் கொண்டிருந்த பிரியத்தாலும், வந்தியத் தேவன் என்கிற பெயரில் ஏற்கனவே இன்னொரு வலைப்பதிவர் இருந்ததாலும் அருண்மொழிவர்மன் என்ற பெயரை பயன்படுத்தத் தொடங்கினேன்.  அருணன் என்பதுவும் சூரியனின் பெயராதலால் நான் விட்டுவிட நினைத்தும் சூரியன் – பூமி என்கிற தொடர்பு தொடர்ந்தது மகிழ்ச்சி.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இப்போதெல்லாம் பெரிதாக அழுகை வருவதில்லை. எல்லாம் ஒரு நாள் தொலைந்துபோகும் என்பது எப்போதும் ஒரு சாரமாக மனதில் ஓடிக்கொண்டிருப்பதால் உணர்ச்சிகளின் உச்சவடிவங்களுல் ஒன்றான அழுகை வருவதில்லையோ தெரியாது. அழுவதற்கேற்ற வெள்ளந்தி மனநிலை முன்பிருந்தாற்போல இப்போதில்லாமல் போனதுகூட காரணமாயிருக்கலாம்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

நிறைய பிடிக்கும், அது எனது நண்பனின் கையெழுத்தைப் போலவே இருப்பதால். எனது கையெழுத்து உண்மையில் மிக அழகாக இருக்கும். ஆனால் அது நகல். பிரசன்னா என்ற எனது முதல் நண்பனின் கையெழுத்தின் நகலாகத்தான் எனது கையெழுத்தை வடிவமைத்துக் கொண்டேன். பின்னர் சில சில எழுத்துக்களை இன்ன உருவில்தான் எழுத்துவது என்று இருவரும் கதைத்து தீர்மானித்துக் கொண்டிருக்கிறோம். இணைபிரியாத நண்பர்கள் என்று பாடசாலை முழுவதும் அறியப்பட்ட நாம் பிரிந்தும் 14 வருடங்களாக இன்னும் உயிர்வாழ்வது எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும் விடயம்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

எனது சாப்பாட்டு ரசனைகள் மிக நுணுக்கமானவை. பொதுவாக எனக்கு கடல் உணவுகள் பிடிக்கும். அதிலும் கணவாய் என்றால் சொல்லவே வேண்டாம். அது போல மாசிக் கருவாடு சேர்த்த சம்பலுடன் பாண். புட்டுடன் கருவாட்டுக் குழம்பு. ஒடியல் கூழ். தயிர்ச் சாதம் அல்லது புளிச் சாதமுடன் உருளைக்கிழங்கு பொரியல் அல்லது இறால் தொக்கு. இட்டலியுடன் மிளகாய்ப் பொடி மற்றும் நல்லெண்ணெய். நாட்டுக் கோழிக் குழம்புடன் நல்லெண்ணெய். கத்தரிக்காய் பொரித்த குழம்புடன் நல்லெண்ணெய். புரியாணிடன் ஈரல் கறி. ரொட்டியுடன் பீஃப் றோஸ், இப்படி பட்டியலிட்டபடியே போகலாம்.

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது சும்மா டீ ரூம் என்ற ஆணைக்கோட்டையில் இருந்த சாப்பாட்டுக் கடையின் அசைவ உணவுகளும், ஆனைக்கோட்டை மூத்த நாயணார் கோயில் முன்பாக இருந்த ஒரு சிறிய சாப்பாட்டுக் கடையின் சைவ உணவுகளும், கனடாவில் “மாப்பாணி” என்ற அடிக்கடி கடைமாறும் ஒரு சமையல் கலைஞரின் கைப்பக்குவ உணவுகளும் அதிகம் பிடிக்கும். அதேபோல வீட்டுச் சாப்பாடென்றால் அம்மாவின் கைப்பக்குவமும், சின்னக்காவின் கைப்பக்குவமும், ஜீவா என்ற நண்பரின் மீன் குழம்பும் அதிகம் பிடிக்கும்.

5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
நிச்சயமாக. நான் மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு கொடுக்கிறேன். எனவே என் மீது நட்புக் கொள்வது இலகுவான ஒன்று.

6.கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?
குளியல் ஒரு தியானம் என்று பலர் சொல்வதை நான் உணர்ந்ததில்லை. குளியலை ஒரு தினசரிக் கடமையாக செய்வதே வழக்கம். மேலும், கடலில் குளிக்க நீச்சல் தெரியாது. அருவியில் குளிக்க அருவிகளின் அருகில் நான் வசித்தது கிடையாது. எனவே நான் அனுபவித்த குளியல்களில் எனக்குப் பிடித்தது கிணற்றுக் குளியல். அதிலும் மழைகாலத்தில் கிணறுகள் நிரம்பியிருக்கும் பொழுதுகளிலான குளியல்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பொதுவாக ஆண்களிடன் சிகையலங்காரம், தாடி, மீசையை அவர்கள் அமைத்திருக்கும் பாங்கு.

பெண்களிடம், குறிப்பாக விரும்பிப்பார்த்த பெண்ணிடம் கண்கள்..

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது வாசிப்பு பழக்கம், ஒரு முடிவெடுத்துவிட்டால் அதை எப்படியாவது நிறைவேற்றுவது, நட்புக்காக எப்போதும் நிற்பது.
பிடிக்காதது முற்கோபம், சோம்பல், எதையும் பிற்போடுவது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
சரிபாதி என்று நினைத்திருந்தவருடன் பழகியது மிகக் குறைவு.  பிடித்தது அமைதி, பேசாமலே தொடர்பாடும் ஆளுமை, அன்பும் அருளும் நிறைந்த கண்கள்.

பிடிக்காததும் அமைதியே.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
குடும்பத்தினரும், ஈழத்தில் இருந்த நண்பர்களும் நான் இணைய அளவில் எழுதுவதைக் கூட பாராமல் செத்துப்போன பெரியம்மா-பெரியப்பாவும். ம்ம்…. எப்படியோ தொலைந்துபோன பள்ளிக்கால காதலும்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
நீல நிற ஷேட்டும், சாரமும்

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

தமிழ் பாடல்களை சேகரிப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கொன்று. காலவரிசைப்படி பாடியவர் பெயர், படம்/தொகுப்பு, இசையமைப்பாளார் என்று தொகுக்கும் வழக்கம் இருக்கிறது. கேட்கும் பாடல் தெரிவு அடிக்கடி மாறும். கடந்த சில நாட்களாக கேட்கும் பாடல்கள்
மாங்கல்யம் ————- முத்திரை
பேரூந்தில் நீயெனக்கு———பொறி
உன்னையும் என்னையும்——–கண்ணும் கண்ணும்
தென்றல் காற்றும்——–முடிவல்ல ஆரம்பம்
அன்பே அன்பேதான் —————–கண்ணும் கண்ணும்
குத்தாலம் குத்தாலம் ————- கண்ணும் கண்ணும்
தவமின்றி———–அன்பு
வண்ணம் கலைந்து கிடக்கிறதே —————–அன்பு
பூங்காத்து திரும்புமா ————- முதல் மரியாதை

மேலும் தொடர்ச்சியான தெரிவுகளில் நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலணி), ஆனந்தம் ஆனந்தம் (பூவே உனக்காக), வெண்ணிலவே வெண்ணிலவே (காலமெல்லாம் காதல் வாழ்க), அச்சம் அச்சமில்லை (இந்திரா), சொல்லிவிடு வெள்ளி (அமைதிப்படை) போன்ற பாடல்கள் நிச்சயமாக உண்டு. ஒரு காலத்தில் ஓ ராகிணி என்கிற பாடலை நாள்முழுக்கக் கேட்டுக்கொண்டிருந்தேன்.  இப்போதெல்லாம் அதைக்கேட்கும் அளவு மனவலிமை இல்லாமல் இருக்கின்றது.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நானும் நண்பன் பிரசன்னாவும் முன்பு ஹீரோ இன்க் இல் அரைப்பங்கு கறுப்பு மை, கால் பங்கு நீலமை, கால்ப் பங்கு சிவப்பு மை என்று கலந்து ஒரு நிறம் உருவாக்குவோம். எமக்கேயான தனித்துவமான நிறம் அது. வேறு யாருக்கும் இரவலாக கூட அந்த மை நிரப்பிய பேனாவைத் தரமாட்டோம். அந்த மையாக மாறத்தான் விரும்புவேன்.

14.பிடித்த மணம்?

வீட்டில் நறுமணத்துக்காக பூக்களின், பழங்களின் மணம் தரும் “ஏர் ஃப்ரெஷ்ணர்களை” பயன்படுத்துவதுண்டு.
மேலும், சுதுமலை அம்மன் கோயிலை கடக்கும்போது வரும் “மாப்பியன் மில்லின்” நெல் அவித்த மணமும், மழை பெய்த புழுதித் தரையிலெழும் மணமும் பிடிக்கும்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

இதை அனுப்பிய நண்பர் தமிழன் கறுப்பி என்கிற காண்டீபராஜின் காதல் பற்றிய பதிவுகள். பேரின்பநாயகி பற்றிய பதிவு. அய்யனாரின் உரையாடலினியை நினைவு படுத்திய நல்ல பதிவு அது.

17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட்

18.கண்ணாடி அணிபவரா?
கிட்ட தட்ட 10 ஆண்டுகளாக என்னை விட்டு நீங்காத நண்பன் என் கண்ணாடி. இதில் ஒரு வேடிக்கை என்ன என்றால் எனக்கும் என் நெருங்கிய நண்பன் தீபனுக்கும் 11 ஆண்டுகளாக ஒரே கண்ணாடி அளவீடுகளே உள்ளன. அடிக்கடி கண்ணாடியை தொலைத்துவிடும் நான் அவனது கண்ணாடியையே அப்பப்போது உரிமையாக்கிவிடுவதுண்டு. இப்போது அணிந்துள்ள கண்ணாடியும் அஃதே.

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

எல்லா வகைப்படங்களையும் அந்தந்த படங்களை பார்க்கும் மன நிலையுடன் அணுகுவதே வழக்கம். சரவணா பவனில் போட்டு ஆட்டுக்கால் சூப் கேட்பதில்லை. விஜய் படத்தில் விஜய் படத்துக்கான தகமைகளையும், அமீர், செல்வராகவன் படங்களில் அவர்களுக்கான தகமைகளையுமே எதிர்பார்ப்பது வழக்கம்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
DEV –D, காதல் கொண்டேன்.

21.பிடித்த பருவ காலம் எது?
கனடாவில் கோடை. இலங்கையில் மழைக்காலம். மழையில் நனைவது எப்போதும் பிடிக்கும். கொட்டும் மழையில் நண்பர்களுடன் தெய்வீகன் (அவுஸ்திரேலியா) பாடும் பாடல்களை கேட்டபடி தெருத் தெருவாக அலைந்திருக்கிறோம். ஒரு மழை நாளில் நான் தெய்வீகனுடனும், குணாளனுடனும் தாவடி வெளியில் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல; அதையும் தாண்டி புனிதமானது” என்று நெடுநேரமாக கத்தியபடி நின்றிருக்கின்றேன்.  புனிதம் தாண்டி உயிர்நிகர்த்த அந்தக் காதல் இன்றுவரை கைகூடவில்லை. எல்லாப் புனிதங்களையும் உடைப்போம் என்ற என் எண்ணத்தின் முதலடி அது தானோ தெரியாது.  அதனாலோ என்னவே இப்போது மழை பெய்த இரவொன்றின் பின்னர் கழுவிவிடப்பட்டது போல இருக்கும் தெருக்களும் மழைக்குளிரடிக்கும் பொழுதுகளும் ஆழ்ந்த அமைதியையும் நெருக்கத்தையும் தருகின்றன.

22.இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
எழுத்தாளர் தேவகாந்தன் அன்புப் பரிசாக தந்த அவரது கதாகாலத்தை இன்று தான் வாசிக்கத் தொடங்கினேன். அதே நேரம் அண்மையில் புத்தக கண்காட்சியில் வாங்கிய சந்திராவின் “பூனைகள் இல்லாத வீடு”, மனுஷ்ய புத்திரனின் “கடவுளுடன் பிரார்தித்தல், Roland Barthes “The Pleasure of the text” என்று பல புத்தகங்களை ஒன்றாக படித்தபடி உள்ளேன்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
சர்வகாலமும் நண்பர்களுடனேயே திரிந்த நாட்களில் சற்றே திமிருடன் நண்பர்களாக எடுத்த ஒரு குழுப் படத்தை “No More Peace Talk” என்ற  சொற்களுடன் வடிவமைத்து பாவித்திருந்தேன். ஒரு சிலநண்பர்கள் தம் கார்களில் ஸ்டிக்கர்களாகவும் அதை ஒட்டியிருந்தனர்.  அதன் பின்னர் நட்புக் குழுக்கள் கால ஓட்டத்தில் gang களாக மாறுவது கண்டும், நண்பன் ஒருவனின் மரணம் தந்த வேதனையிலும் அந்த் படத்தை அழித்தபின் இன்றுவரை எந்தப் படத்தையும் போடவில்லை.

24.நன்றி சொல்லவேண்டும் என்றால் யாருக்குச் சொல்வீர்கள்?

நாம் எட்டாம் வகுப்பில் கற்றுக்கொண்டிருந்தபோது நடந்தது இது.  ட்யூசன் வகுப்பில் அப்போது சமூகக்கல்வி கற்பித்த ஆசிரியர் எனக்கு மிகவும் பிடித்தவர், ஆனால் மிகவும் கண்டிப்பானவர்.  ஒருமுறை நான் இன்னொரு நண்பனுடன் பாடசாலை முடிந்துவரும்போது வீதியில் சண்டையிட்டுக்கொண்டு வந்ததை அவர் பார்த்திருக்கின்றார்.  வகுப்பில் அதற்காக மூன்று கேள்விகள் கேட்டு அதில் ஒன்று பிழையென்றாலும் எனக்குத் தண்டனை.  தண்டனை என்றால் அப்படி அடித்து நொறுக்குவார்.  மூன்றுகேள்விகள் கேட்டார், நான் ஒன்றில் பிழைவிட்டுவிட்டேன்.  தண்டனையாக கரும்பலகையுடன் போய் யேசு சிலுவையில் நின்றபடி நிற்கச் சொல்கின்றார்.  அடிவிழப்போகின்றது, அடித்து நொறுக்கப் போகின்றார்.  அப்ப ஒரு சந்தர்ப்பம் தந்தார்.  ஒரேயொரு கேள்விகேட்பேன்.  ஆண்களில் யாராவது அதற்குப் பதில் சொல்லலாம், பதில் சொன்னால் எனக்கு விடுதலை.  இல்லாவிட்டால் எனக்கும் பதில் சொல்லாதவருக்கும் அதே தண்டனை, அடித்து நொறுக்கப்படுவோம்.  நண்பர்கள் எவரும் முன்வரவில்லை, அந்த ஆசிரியருக்கு அப்படியொரு பயம் இருந்தது.  நண்பர்களோட சேர்ந்து ரோட்டில் சண்டை பிடிக்கிறாய், நண்பர்கள் ஒருத்தர் கூட உனக்கு வரேல்லையே என்றுவிட்டு, அடுத்து சொல்கின்றார், பெண்களில் யாராவது வேண்டுமென்றால் இவனை பெயில் எடுக்கலாம். அதே நிபந்தனைகள்; ஒரேயொரு கேள்விகேட்பேன்.  பெண்களில் யாராவது அதற்குப் பதில் சொல்லலாம், பதில் சொன்னால் எனக்கு விடுதலை.  இல்லாவிட்டால் எனக்கும் பதில் சொல்லாதவருக்கும் அதே தண்டனை, அடித்து நொறுக்கப்படுவோம்.  அவர் சொல்லி முடித்த கையோடு எமது வகுப்பில் இருந்த நண்பி – என் ஆகச் சிறந்த தோழி உடனே கை உயர்த்தினார்.  ஆசிரியருக்கு நம்பமுடியவில்லை, விடை பிழையாச் சொன்னால் உமக்கும் சனி பிடிக்கும் என்றார்.  தோழியோ அப்போதும் உறுதியோடு இருந்தார்.  ஆசியர் முதலாவது மாரதன் போட்டியில் ஓடி வெற்றிபெற்றவர் என்று, வேண்டுமென்றே பாடத்திட்டத்தில் இல்லாத ஒரு கேள்வியைக் கேட்டார், ஒரு கணம் கூடத் தாமதியாது தோழி “மாரத்தன்” பெய்டிப்ளஸ் என்ற பதிலைக் கூறினார்.  ஆசிரியர் ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டு, இருவரையும் பாராட்டிவிட்டு என்னை இடத்தில் போய் இருக்கச் சொன்னார்.  இன்றுவரை அந்தத் தோழிக்கு இதற்காக நான் நன்றி சொல்லவில்லை. ஆனால் அன்றுமுதல் வாழ்நாள் உயிர்த்தோழியாக வரித்துள்ளேன்.  இன்றும் பலவிடயங்களில் அவரது ஆலோசனைகளை செவிமடுப்பதுண்டு.

25.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் – பிடித்த இசை, நள்ளிரவு மழையோசை.
பிடிக்காதவை – நிறைய. உரத்த குரலில் உரையாடும் மனிதர்கள் முதன்மையாக. தேவையில்லாமல் போலியாக எழுப்பப்படும் பாராட்டல்கள், சிரிப்பொலிகள் போன்றவை.

26.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
கனடாவில் இருந்து இலங்கை. இலங்கையில் இருந்து கனடா.

27.உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
நடந்த சம்பவங்களை அச்சொட்டாக நினைவில் வைத்திருத்தல்

28.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
மற்றவர் கருத்தை மதியாமை, பெண்கள் மீது செய்யப்படும் சீண்டல் பேச்சுகள், ஆண்மொழி உரையாடல்கள், சிறு பான்மையினர் மீது செய்யப்படும் அடக்குமுறைகள். மற்றவர்களின் இருப்பை மதியாமல் செய்யப்படும் எல்லாம். கடவுளின் பெயரால் பரப்பப்படும் மூட நம்பிக்கைகள். புத்தகங்களின் ஒரங்களை மடக்குதல்.

29.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம். சோம்பல்.

30.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

வாழ்ந்த இடமென்பதில் யாழ்ப்பாணம். கனடாவில் thousand island

31.எப்படி இருக்கணும்னு ஆசை?
எப்போதும் நான் நானாக.

32.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
மன்னிக்கவும். இன்னும் திருமணமாகவில்லை.

வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
எப்போதும் தொடரும் ஏமாற்றங்களும், எப்போதாவது நிறைவேறும் எதிர்ப்பார்ப்புகளும்.

44 thoughts on “32 கேள்விகளும் திணறிப்போன நிமிடங்களும்

Add yours

  1. உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளதுஇதில் குறிப்பாக1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter2-புத்தம்புதிய அழகிய templates3-கண்ணை கவரும் gadgetsஒரு முறை வந்து பாருங்கள்முகவரி http://tamil10.com/tools.html

    Like

  2. பல பதில்கள் சுவராஸ்யமென்றால் சில பதில்கள் நெகிழவைக்கும்படி இருந்தது.குறிப்பிட்டு சொல்வதற்கில்லை அனைத்து பதில்களுமே அழகாகச் சொல்லியிருக்கீங்க.(இது போலி பாராட்டல்ல):)

    Like

  3. உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளதுஇதில் குறிப்பாக1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter2-புத்தம்புதிய அழகிய templates3-கண்ணை கவரும் gadgetsஒரு முறை வந்து பாருங்கள்முகவரி http://tamil10.com/tools.html

    Like

  4. பல பதில்கள் சுவராஸ்யமென்றால் சில பதில்கள் நெகிழவைக்கும்படி இருந்தது.குறிப்பிட்டு சொல்வதற்கில்லை அனைத்து பதில்களுமே அழகாகச் சொல்லியிருக்கீங்க.(இது போலி பாராட்டல்ல):)

    Like

  5. அப்ப இது தான் அந்த 32 மேட்டரா??என்னடா.. பெரும்பாலான பதிவு எல்லாம் "32 கேள்விகள் "என சுத்தியடிக்கையில் யோசிச்சனான்….ம்..ம்ம் தொடர்பதிவில்ல…அருண் உங்கட பதில் எல்லாம் interesting… நீங்க வாசிச்சீன்களோ தெரியாது…நேரமிருந்தா "tuesday with mories" வாசிக்கவும்.

    Like

  6. அப்ப இது தான் அந்த 32 மேட்டரா??என்னடா.. பெரும்பாலான பதிவு எல்லாம் "32 கேள்விகள் "என சுத்தியடிக்கையில் யோசிச்சனான்….ம்..ம்ம் தொடர்பதிவில்ல…அருண் உங்கட பதில் எல்லாம் interesting… நீங்க வாசிச்சீன்களோ தெரியாது…நேரமிருந்தா "tuesday with mories" வாசிக்கவும்.

    Like

  7. //31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?மன்னிக்கவும். இன்னும் திருமணமாகவில்லை.//இருக்கட்டும் இருக்கட்டும்…

    Like

  8. //31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?மன்னிக்கவும். இன்னும் திருமணமாகவில்லை.//இருக்கட்டும் இருக்கட்டும்…

    Like

  9. நாடோடி இலக்கியன்….பாராட்டுகளுக்கு நன்றிகள். பிரிவுகளும் அது சார்ந்த ஏக்கங்களுமாகவே இதை இப்போது வாசிக்கின்றபோது எனக்கும்படுகின்றது

    Like

  10. நாடோடி இலக்கியன்….பாராட்டுகளுக்கு நன்றிகள். பிரிவுகளும் அது சார்ந்த ஏக்கங்களுமாகவே இதை இப்போது வாசிக்கின்றபோது எனக்கும்படுகின்றது

    Like

  11. பாரதி,அருண் உங்கட பதில் எல்லாம் interesting… நீங்க வாசிச்சீன்களோ தெரியாது…நேரமிருந்தா "tuesday with mories" வாசிக்கவும்.''இதனை முன்னர் திரையில் பார்த்திருக்கின்றேன். நிச்சயமாக வாசிக்க முயல்கின்றேன். அது போன்ற அனுபவப் பகிர்வுகள் எனக்கும் நிறைய பிடிக்கும்

    Like

  12. பாரதி,அருண் உங்கட பதில் எல்லாம் interesting… நீங்க வாசிச்சீன்களோ தெரியாது…நேரமிருந்தா "tuesday with mories" வாசிக்கவும்.''இதனை முன்னர் திரையில் பார்த்திருக்கின்றேன். நிச்சயமாக வாசிக்க முயல்கின்றேன். அது போன்ற அனுபவப் பகிர்வுகள் எனக்கும் நிறைய பிடிக்கும்

    Like

  13. கிருஷ்ணா///31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?மன்னிக்கவும். இன்னும் திருமணமாகவில்லை.//இருக்கட்டும் இருக்கட்டும்…//ஏன் இந்த வயித்தெரிச்சல்

    Like

  14. வணக்கம் சுகந்தன்//Hai Arun"பிடித்தது வாசிப்பு பழக்கம்"how dare you say it in public??????????Just Kiddin//அந்த வாசிப்புப் பழக்கம் அல்ல இது. இது ரெகுலர் வாசிப்புப் பழக்கம்……..

    Like

  15. கிருஷ்ணா///31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?மன்னிக்கவும். இன்னும் திருமணமாகவில்லை.//இருக்கட்டும் இருக்கட்டும்…//ஏன் இந்த வயித்தெரிச்சல்

    Like

  16. வணக்கம் சுகந்தன்//Hai Arun"பிடித்தது வாசிப்பு பழக்கம்"how dare you say it in public??????????Just Kiddin//அந்த வாசிப்புப் பழக்கம் அல்ல இது. இது ரெகுலர் வாசிப்புப் பழக்கம்……..

    Like

  17. தாமதமாக தெரிவிக்கிற நன்றிகளுக்கு குறை கொள்ள வேண்டாம்…எதிர்பார்த்த அத்தனை சுவாரஸ்யங்களும் கிடைத்திருக்கிறது நன்றி அண்ணன்..நிறைய நன்றி…!மறுபடியும் வருவேன்!:)

    Like

  18. தாமதமாக தெரிவிக்கிற நன்றிகளுக்கு குறை கொள்ள வேண்டாம்…எதிர்பார்த்த அத்தனை சுவாரஸ்யங்களும் கிடைத்திருக்கிறது நன்றி அண்ணன்..நிறைய நன்றி…!மறுபடியும் வருவேன்!:)

    Like

  19. \\சர்வகாலமும் நண்பர்களுடனேயே திரிந்த நாட்களில் சற்றே திமிருடன் நண்பர்களாக எடுத்த ஒரு குழுப் படத்தை \\அப்ப கனடாவுல கடும் ஆக்கள்தான் நீங்கள்…

    Like

  20. \\சர்வகாலமும் நண்பர்களுடனேயே திரிந்த நாட்களில் சற்றே திமிருடன் நண்பர்களாக எடுத்த ஒரு குழுப் படத்தை \\அப்ப கனடாவுல கடும் ஆக்கள்தான் நீங்கள்…

    Like

  21. \\பொதுவாக எனக்கு கடல் உணவுகள் பிடிக்கும். அதிலும் கணவாய் என்றால் சொல்லவே வேண்டாம். அது போல மாசிக் கருவாடு சேர்த்த சம்பலுடன் பாண். புட்டுடன் கருவாட்டுக் குழம்பு.\\ ம்ம்ம் எனக்கும் பிடிச்ச் சாப்பாடுகள்…

    Like

  22. \\பொதுவாக எனக்கு கடல் உணவுகள் பிடிக்கும். அதிலும் கணவாய் என்றால் சொல்லவே வேண்டாம். அது போல மாசிக் கருவாடு சேர்த்த சம்பலுடன் பாண். புட்டுடன் கருவாட்டுக் குழம்பு.\\ ம்ம்ம் எனக்கும் பிடிச்ச் சாப்பாடுகள்…

    Like

  23. வணக்கம் தமிழன் கறுப்பி//அந்த "வாசிப்பு" என்கிற கதை உங்கடை பக்கமிருந்துதான் பெரும்பாலும் கேட்டிருக்கிறன்…//வாசிப்பு என்கிற சொல்லிற்கு மது அருந்துவது என்றும் ஒரு பொருள் உண்டு என்று நான் கொழும்பு வந்தபின்னர் தான் கேள்விப்பட்டேன். எனக்கு தெரிந்து யாழ்ப்பாந்த்தில் அந்த சொல் பாவனையில் இருக்கவில்லை

    Like

  24. வணக்கம் தமிழன் கறுப்பி//அந்த "வாசிப்பு" என்கிற கதை உங்கடை பக்கமிருந்துதான் பெரும்பாலும் கேட்டிருக்கிறன்…//வாசிப்பு என்கிற சொல்லிற்கு மது அருந்துவது என்றும் ஒரு பொருள் உண்டு என்று நான் கொழும்பு வந்தபின்னர் தான் கேள்விப்பட்டேன். எனக்கு தெரிந்து யாழ்ப்பாந்த்தில் அந்த சொல் பாவனையில் இருக்கவில்லை

    Like

  25. வணக்கம் கறுப்பி//சர்வகாலமும் நண்பர்களுடனேயே திரிந்த நாட்களில் சற்றே திமிருடன் நண்பர்களாக எடுத்த ஒரு குழுப் படத்தை\\அப்ப கனடாவுல கடும் ஆக்கள்தான் நீங்கள்…//அப்பசி இல்லை. நான் முன்னரே சொன்னது போல நண்பர்களுடன் கூட்டமாக உள்ளபோது ஒரு அசாத்தியத் துணிவுவரும். அது தரும் லீலைகள் தான் இதுவெல்லாம்.

    Like

  26. வணக்கம் கறுப்பி//சர்வகாலமும் நண்பர்களுடனேயே திரிந்த நாட்களில் சற்றே திமிருடன் நண்பர்களாக எடுத்த ஒரு குழுப் படத்தை\\அப்ப கனடாவுல கடும் ஆக்கள்தான் நீங்கள்…//அப்பசி இல்லை. நான் முன்னரே சொன்னது போல நண்பர்களுடன் கூட்டமாக உள்ளபோது ஒரு அசாத்தியத் துணிவுவரும். அது தரும் லீலைகள் தான் இதுவெல்லாம்.

    Like

  27. //ம்ம்ம் எனக்கும் பிடிச்ச் சாப்பாடுகள்…//எனக்கு கொண்டாட்டமென்றாலே கடல் உணவுகள் உண்பதுதான். அதிலும் ஒடியல் கூழும் சுட்ட கருவாடும் என்றால்……….

    Like

  28. //ம்ம்ம் எனக்கும் பிடிச்ச் சாப்பாடுகள்…//எனக்கு கொண்டாட்டமென்றாலே கடல் உணவுகள் உண்பதுதான். அதிலும் ஒடியல் கூழும் சுட்ட கருவாடும் என்றால்……….

    Like

  29. தெய்வீகன் (அவுஸ்திரேலியா) //எல்லா ரோட்டுக்களும் ரோமிற்கே..இவர் அவுஸ்ரேலியாவில் எனது நண்பராயுமிருந்தார்.

    Like

  30. தெய்வீகன் (அவுஸ்திரேலியா) //எல்லா ரோட்டுக்களும் ரோமிற்கே..இவர் அவுஸ்ரேலியாவில் எனது நண்பராயுமிருந்தார்.

    Like

  31. காலம் அடித்து சென்ற நினைவுகளை தங்களுக்கேயுரிய மண்வாசனையாக பகிர்ந்திருக்கிறீர்கள்.உங்களின் எண்ணக் கிடக்கையை கொட்டித்தீர்ப்பதற்கு 32 கேள்விகள் போதாது. நேற்அறைய நினைவுகளுடன் நாளைய கனவுகளுடனும் வாழ்பவரல்லா நீங்கள்….! தொடரட்டும் உங்களின் தேடல்….!!

    Like

  32. காலம் அடித்து சென்ற நினைவுகளை தங்களுக்கேயுரிய மண்வாசனையாக பகிர்ந்திருக்கிறீர்கள்.உங்களின் எண்ணக் கிடக்கையை கொட்டித்தீர்ப்பதற்கு 32 கேள்விகள் போதாது. நேற்அறைய நினைவுகளுடன் நாளைய கனவுகளுடனும் வாழ்பவரல்லா நீங்கள்….! தொடரட்டும் உங்களின் தேடல்….!!

    Like

  33. வணக்கம் சயந்தன்//எல்லா ரோட்டுக்களும் ரோமிற்கே..இவர் அவுஸ்ரேலியாவில் எனது நண்பராயுமிருந்தார்//தெய்வீகன் எனது ஆகச்சிறந்த நண்பர்களுல் ஒருவர். எனக்கும் ஆருக்குமான நட்பு 20 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னேறி வருகின்றது. இவருக்கும் எனக்கும் இடையிலான நட்பு பற்றி “http://solvathellamunmai.blogspot.com/2008/08/blog-post.html என்ற பெயரில் எழுதியுள்ளேன். சந்தர்ப்பம் கிடைத்தால் வாசிக்கவும்

    Like

  34. வணக்கம் சயந்தன்//எல்லா ரோட்டுக்களும் ரோமிற்கே..இவர் அவுஸ்ரேலியாவில் எனது நண்பராயுமிருந்தார்//தெய்வீகன் எனது ஆகச்சிறந்த நண்பர்களுல் ஒருவர். எனக்கும் ஆருக்குமான நட்பு 20 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னேறி வருகின்றது. இவருக்கும் எனக்கும் இடையிலான நட்பு பற்றி “http://solvathellamunmai.blogspot.com/2008/08/blog-post.html என்ற பெயரில் எழுதியுள்ளேன். சந்தர்ப்பம் கிடைத்தால் வாசிக்கவும்

    Like

  35. பெரும்பாலான "தமிழ் வாசகருக்கு" பரிச்சியமான கீறல் என்ற குழுக்குறியும் வாசிப்பு குறித்து ரசனையானது இல்லையா?.. வழமைக்கு மாறான பதிவு எனினும் வழமை போலவே சிறப்பாக உள்ளது பகிர்தல்கள்.

    Like

  36. பெரும்பாலான "தமிழ் வாசகருக்கு" பரிச்சியமான கீறல் என்ற குழுக்குறியும் வாசிப்பு குறித்து ரசனையானது இல்லையா?.. வழமைக்கு மாறான பதிவு எனினும் வழமை போலவே சிறப்பாக உள்ளது பகிர்தல்கள்.

    Like

  37. இன்று தான் இந்தப் பதிவைக் கவனித்தேன், கேள்விகளுக்குள்ளே உங்கள் வாழ்க்கையை அடக்கிவிட்டீர்கள் 🙂

    Like

  38. இன்று தான் இந்தப் பதிவைக் கவனித்தேன், கேள்விகளுக்குள்ளே உங்கள் வாழ்க்கையை அடக்கிவிட்டீர்கள் 🙂

    Like

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑