ஒக்ரோபர் 16, 2023
பலஸ்தீனத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கின்ற இனப்படுகொலை பற்றிய வரலாற்றுப் பின்னணியை சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்தச் சந்திப்பில் மீநிலங்கோ வெளிப்படுத்துகின்றார். பார்க்கவேண்டியதோர் காணொலி. பலஸ்தீனத்தில் இந்தச் சந்திப்பில் மீநிலங்கோ இரண்டு புத்தகங்களைப் பரிந்துரைத்திருப்பார். அதுபோல சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் பிரகாஷ் வெங்கடேசன் புத்தகமொன்றினை எனக்குப் பரிசாகக் கொடுத்தனுப்பியிருந்தார்.
மூன்று புத்தகங்களையும் ஆர்வமுள்ளவர்களுக்காக இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.
ஒக்ரோபர் 21, 2023
தமிழ் இலக்கியத்தில் அறம் என்கிற தலைப்பிலான ஜெயமோகனின் உரை ஒன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ஒருங்கிணைப்பில் இன்று மாலை நடைபெறவுள்ளது என்பது
நாம் வாழும் காலத்தின் மிகப்பெரும் அவலங்களில், நகைமுரண்களில் ஒன்று. அறத்துக்கும் ஜெயமோகனுக்கும் என்ன சம்பந்தம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அறம் என்பதை எவ்வாறாகப் புரிந்துகொண்டுள்ளார்கள் என்று தெரியவில்லை.
இந்த நாளில் வாசிக்கவேண்டிய புத்தகம் “இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம்”. முன்னரும் சொன்னதென்றாலும் மீண்டும் சொல்லவேண்டியுள்ளது, “பன்னாடைகளைப் பன்னாடைகள் என்றுமட்டும் தான் சொல்லமுடியும், ஜெயமோகனை ஜெயமோகன் என்றுமட்டும் தான் சொல்லமுடியும்
ஒக்ரோபர் 22, 2023
எவராலும் மறக்கமுடியாத தீபாவளிக் கொண்டாட்டம் ஒன்று 1987ல் யாழ்ப்பாணத்தில் இந்திய ராணுவத்தின் பங்களிப்பில் நிகழ்த்தப்பட்டது. அது பற்றிய விவரணத்தினை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
https://avalankal.blogspot.com/2008/10/blog-post.html
ஒக்ரோபர் 24, 2023
காசாவில் 500 பேர் “இறந்தார்கள் (Died)”; இஸ்ரேலில் 700 பேர் “கொல்லப்பட்டார்கள் (Killed)”
இறந்தார்கள் என்றும், கொல்லப்பட்டார்கள் என்றும் பிரித்துக் காட்டுவதில் தெரிகின்றது BBC யின் அறம்!

ஒக்ரோபர் 24, 2023
குழந்தைகள் தூங்கும்போது அமைதியாக இருங்கள்,
அவர்கள் இறக்கும்போது அல்ல!!
என்று இந்தப் படத்தினை ரஞ்சி அவர்கள் பகிர்ந்திருந்தார்.
கடந்த 24 மணிநேரத்தில் 305 பலஸ்தீனிய சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஒக்ரோபர் 7 முதலான காலப்பகுதியில் 2360 சிறுவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. Jacobin இதழ் இந்தச் செய்தியைத் தனது கட்டுரையில் வெளியிட்டுள்ளது. குறித்த இணைப்புகள் முதலாவது, இரண்டாவது பின்னூட்டங்களாக.
இந்தப் பதிவிற்குக் கீழே நடந்த கற்சுறாவுடனான உரையாடலையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

https://jacobin.com/2023/10/israel-killed-2000-children-joe-biden-opposing-cease-fire-gaza-war
இதனை நீங்கள் புலிகள் காலத்திலும் சொல்லியிருக்க வேண்டும். அதனையே எதிர்பார்த்தோம். நீங்கள் அதனைச் செய்ய வில்லை.
Katsura Bourassa கற்சுறா, நீங்கள் சில அனுமானங்களை வைத்துக்குக்கொண்டே உரையாடிக்கொண்டிருக்கின்றீர்கள்; இது பற்றி முன்னரும் பலதடவை பேசியுள்ளோம். எனது புத்தக வெளியீட்டு நிகழ்வில் இதுபற்றி பகிரங்கமாக உரையாடியும் இருந்தோம்.
//இதனை நீங்கள் புலிகள் காலத்திலும் சொல்லியிருக்க வேண்டும். // என்று சொல்லியுள்ளீர்கள். பலஸ்தீனிய சிறுவர்கள் என்கிற ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேல் என்கிற ஒடுக்குமுறையாளர்களினால் கொல்லப்படுகின்றார்கள் என்பது பற்றியது இந்த பதிவு. இப்போது நீங்கள் சொல்ல வருவதை சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்.
Arunmozhi Varman நண்பனே! நான் தொடர்ந்து இதே போன்று உரையாடல் செய்யவே முனைகிறேன். ஆனால் அது முற்றுப் பெறவேயில்லை. ஒவ்வொரு பொழுதிலும் அது நீர்ந்த்துப் போகிறது. நான் பேச முனைவது ஒன்றும் நூறு இருநூறு வருடங்களுக்கு முன் நடந்த கதை பற்றியதல்ல. நம் கண்முன்னால் நடந்த, நம்காலத்தில் நடந்த கதை பற்றியது. உங்கள் புத்தக வெளியீட்டில் உங்கள் முகத்தை நோக்கியே நான் கேட்டேன். ஆனால் அதற்கெல்லாம் ஆதாரம் என்ன இருக்கிறது எனக் கேட்டார் நண்பர் ஜயகரன். ஒரு கலைஞனுக்கும் ஒரு எழுத்தாளனுக்கும் அல்லது ஒரு சமூக அக்கறையாளனுக்கும் இருக்க வேண்டிய ஒரு குறைந்த பட்சமான அறிவினைக் கூட ஜயகரன் அன்று இழந்திருந்ததை நான் பார்த்தேன். இந்தச் சமூகம் ஒரு தற்கொலைச் சமூகம் என்பதனை அது தெளிவாக உணர்த்தியது எனக்கு. ஈழவிடுதலைப் போராட்டம் என்ற ஒரு கதை ஒவ்வொரு காலத்திலும் காட்டிவந்த ஆதாரங்களை மறந்துபோய் புதிதாக எதுவும் அறியாதவர்போல் ஆதாரம் கேட்டார் அவர். தமிழ்த் தேசிய வெறி என்பது இத்தனை தூரம் கால்வாரி விடக் கூடாது. நான் எனது எழுத்துக்களில் மிக அதிகமாக இந்தத் தமிழ்த்தேசிய விடுதலையின் பெயரில் காவு கொள்ளப்பட்ட குழந்தைகள் குறித்தே அதிக அக்கறை கொள்கிறேன். வாழ்வை எதுவென்று அறியாத வயதில் காவு கொடுக்கப்பட்ட எமது குழந்தைகள் குறித்து யார் அக்கறை கொண்டார்கள்? உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று அடுத்தவர் பிள்ளைகளில் ஏவிவிட்ட பேய்க்கு பெருந்தெருக்களை ரொரண்டோவில் மறித்து நின்ற பொழுதாவது நீங்கள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். 2000 ஆண்டு காலத்தில் வீடுகளில் வைத்து களவாடப்பட்ட குழந்தைகள் குறித்துப் பேச உங்களுக்கு வயது வரவில்லை என்றும் நான் எழுத வரவில்லை என்றும் சொன்னீர்கள். ஆனால் 2009இல்முள்ளிவாய்க்காலில் களவாடப்பட்ட குழந்தைகள் மறுநாள் பிணமாகத் திரும்பியதைக் கூட கண்டும் பேசாது இருந்தீர்கள். உங்களைப் போன்ற ஒரு அடுத்த தலைமுறை இப்படி இருப்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாததன் கோபமே தொடர்ந்தும் என்னை உங்கள் மீதான உரையாடலை நிலைநிறுத்துகிறது. உங்கள் மீது எனக்குத் தனிப்பட் முறையில் எந்தக் கோபமும் இல்லை. அறிவால் அறிந்து கேலி செய்ய வேண்டிய தலை முறை அறிவற்று இருப்பதும் அறிந்தும் அறியாததுபோல் இருப்பதும் வேதனை கொள்ள வைக்கிறது. உங்களின் இந்த நடைமுறை குறித்து நான் இன்னும் விளக்கமாக எழுத வேண்டும் என்பது விருப்பந்தான். ஆனால் இதனைக் கூட நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களானால். இப்பொழுதும் உங்கள் பல்லை நீங்களே தட்டி உடைத்து விட்டு நான் குழந்தை எனக்கு எதுவும் தெரியாது என்று தவழ்ந்து திரியுங்கள். ஆதுதான் உங்களுக்குச் சிறப்பு. ஆனால் ஒரு காலத்தில் அழிவை அறியாததுபோல் நடித்துக் கொண்டு இன்னொரு காலத்தின் அழிவைப் பேசமுடியாது. நான் இன்னும் மிக விபரமாக விரைவில் எழுதுகிறேன். நன்றி. எங்கள் குழந்தைகள் காவுகொள்ளப்பட்டபோதும் நீங்கள் சத்தம் போட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களை உங்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் வைத்துவிட்டு நீங்கள் இரண்டு பூக்களை அவர்களுக்குமுன் வருடாவருடம் வைக்கமுனைவது அயோக்கியத்தனத்தின் இன்னொரு முகந்தான். அதனை நான் உங்களிடம் இப்பொழுதும் எதிர்பார்க்கவில்லை.
Katsura Bourassa கற்சுறா, மறுபடியும் சொல்கின்றேன், நான் 2008 இன் இறுதிவரை இங்கே நடந்த எந்த இலக்கிய, அரசியல் கூட்டங்களிலும் கலந்துகொண்டதும் இல்லை, 2009 இல் ஏதிலிகள் என்கிற அமைப்பினை நண்பர்கள் உருவாக்கமுன்னர் எந்த அமைப்பிலும் அங்கம் வகித்ததும் இல்லை.
இதை முன்னரும் குறிப்பிட்டபோது 2009 இற்கு எழுதாதவர்கள் பின்னர் எழுதியதற்குப் பின்னாலான அரசியல் என்று அடுத்த அனுமானத்தினை எழுதியிருந்தீர்கள். இதற்குப்பின்னாலெல்லாம் ஒரு அரசியலும் இல்லை, சிறுவயது நண்பர் தீபனின் தொடர்பு அப்போதுதான் எனக்குக் கிடைத்தது. அப்படித்தான் கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். மறுபடி மறுபடி 2009 இல் எழுதவில்லை 2009 இல் எழுதவில்லை என்ற உங்கள் உளறலை நிறுத்திக்கொள்ளுங்கள் அல்லது வேறெங்காவது போய் வைத்துக் கொள்ளுங்கள். முன்னரும் குறிப்பிட்டிருக்கின்றேன், மீண்டும் ஒருமுறையாகவும் கடைசியாகவும் குறிப்பிடுகின்றேன்; 2009 நவம்பரில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்குப் போயிருந்தேன்; அதன்பின்னர் தான் முதன் முதலாக இலங்கையின் இனப் பிரச்சனை அரசியல் குறித்த பதிவொன்றினை முதன்முதலில் எழுதினேன்.
எனக்கு உறுதியாக / தெளிவாகத் தெரியாத அல்லது நிலைப்பாட்டிற்கு உறுதியாக வரமுடியாத ஒரு விடயம் பற்றி நான் ஒருபோதும் எழுதவில்லை. இன்றுவரை பெரியார், அம்பேத்கார், உள்ளிட கருத்தியல் சார்ந்த விடயங்கள் குறித்து எழுத நான் பின்னிற்பதற்குக் காரணம் இத. நீங்கள் நினைப்பதைத்தான் நான் எழுதவேண்டும், எழுதியிருக்கவேண்டும் என்ற நினைப்பை நீங்கள் விட்டொழியுங்கள்.
உங்களுக்கு மட்டுமே அறச்சீற்றம் இருப்பது போல 2009 இல் எழுதினியா எழுதினியா என்று மறுபடி மறுபடி உளறினால் என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. எழுதவில்லைத்தான், அதற்குக் காரணம் இதுமட்டும் தான்.
ஒக்ரோபர் 31, 2023
தனது சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின் பின்னர் வழமையான தெனாவெட்டுடன் ஜெயமோகன் எழுதியிருக்கும் கட்டுரைகள் தொடர்பாக பி.கே. சிவகுமார் எழுதிய “ஓர் அமெரிக்கத் தமிழனின் சிந்தனைகள்” என்ற கட்டுரை திண்ணையில் வெளியாகி இருக்கின்றது. இந்தக் கட்டுரையை வாசித்த போது, 2011 இல் கனடாவிற்கு வந்திருந்த ஜெயமோகன் ரொரன்ரோவில் இடம்பெற்ற குறும்பட விழாவில் கலந்துகொண்ட பின்னர் அவரது உரையில் கனடாவுக்கு சிறுவயதில் வந்து இங்கேயே படித்த இளைஞர்களை நோக்கி நீங்கள் ஜானகிராமனை படித்திருக்கின்றீர்களா என்று கேட்டு தி. ஜானகிராமன் உட்படச் சிலரைப் (எல்லாரும் ஜானகிராமன் தலைமுறை எழுத்தாளர்கள்) படிக்கவேண்டும் என்று சொன்னதோடு தொடர்ந்து கூறினார் எமது பண்பாடுகளை, வாழ்வை அறிந்திருகாதவர்களால் நல்ல குறும்படங்களை / படைப்புகளை கொடுக்க முடியாதென்று கூறியிருந்தமையே நினைவுக்கு வந்தது. எந்தவிதப் பின்புலமும் அறியாத முன்முடிவுகளுடனும் மேதாவித்தனம் என்று நினைத்துச் செயற்படும் அசட்டுக் கருத்துகளே அன்றைய உரையில் ஜெயமோகன் தெரிவித்தவை.
இது குறித்து அப்போதே ஒரு கட்டுரை எழுதியிருந்தேன், அதிலிருந்து குறிப்பிட்ட இந்தப் பகுதியை மாத்திரம் பகிர்ந்துகொள்கின்றேன். முழுமையாக கட்டுரை முதலாவது இணைப்பாகவும், பிகே சிவகுமாரின் கட்டுரை இரண்டாவது இணைப்பாகவும் தரப்பட்டுள்ளது.
//அடுத்து இந்தப் படங்களை எடுத்த இளைஞர்களை தி. ஜானகிராமன் உட்படச் சிலரைப் (எல்லாரும் ஜானகிராமன் தலைமுறை எழுத்தாளர்கள்) படிக்கவேண்டும் என்று சொன்ன ஜெமோ, தொடர்ந்து கூறினார் எமது பண்பாடுகளை, வாழ்வை அறிந்திருகாதவர்களால் நல்ல குறும்படங்களை / படைப்புகளை கொடுக்க முடியாதென்று, அதை முன்வைத்தே அவரிடம் சொன்னேன் இன்று புலம் பெயர் நாடுகளில் தம் படைப்புகளைச் செய்யும் நிறைய இளைஞர்கள் புலம்பெயர் நாடுகளிற்குச் சிறு வயதிலேயே வந்தவர்கள். அவர்கள் படைப்புகளில் காட்டுபவை கூட புலம்பெயர் மக்களின் பிரச்சனைகளே. அதை அவர்கள் தமது கோணத்தில் இருந்து சொல்வதற்கு அவர்களுக்கு ஈழத்து / தமிழகத்து வாழ்க்கை முறை அல்லது பண்பாடு பற்றித் தெரியவேன்டும் என்று சொல்லமுடியாது என்று. இத்ததைய படைப்புகளைச் செய்பவர்களுல் பலர் இளைஞர்கள். தமிழில் வாசிப்பதில் சிக்கல் உடையவர்கள். அவர்கள் தம் பெற்றோரின், பேரன் பேத்திகளின் தாயக வாழ்வை அவதானங்களினூடாகவே அணுகுபவர்கள். அதையே சுட்டிக் காட்டினேன். இதை ஜெமோ எந்த இடத்திலும் கூறவுமில்லை. மேலும் புலம்பெயர்ந்து இங்கேயே கல்விகற்ற இவர்கள் பாடசாலைக் கல்வியில் ஒன்பதாம் தரம் முதலாகவே பாடத்திட்டத்திலேயே செவ்வியல் இலக்கியங்களை வாசிக்கின்றார்கள். ஒவ்வோராண்டும் ஷேக்ஸ்பியரின் ஏதாவது ஒரு படைப்பு இவர்களுக்குப் பாடத்திட்டத்திலேயே இருக்கின்றது. எனவே அவர்கள் தமிழில் வாசிக்காவிட்டாலும், ஜெயமோகன் கேட்ட ஜானகிராமன், சுந்தர ராமசாமி உள்ளிட்டவர்களை தெரியாமல் இருந்தாலும் கனடியப்பாடத்திட்டத்தின் ஊடாகவே இலக்கிய பரிச்சயம் கொண்டவர்கள். இதுபற்றிய அறிதல் ஜெயமோகனுக்கு இருக்கவும் இல்லை என்பதையும் சுட்டினேன்.//




Leave a comment