ஆ. இரா. வேங்கடாசலபதி எழுதி காலச்சுவடு பதிப்பகம் ஊடாக பெப்ரவரி 2022 இல் வெளிவந்த “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” என்கிற நூலுக்கு இந்த ஆண்டுக்குரிய (2024) சாகித்திய அகாதமி விருது கிடைத்திருப்பதன் தொடர்ச்சியாக சில உரையாடல்கள் தொடங்கியிருக்கின்றன. இந்த விமர்சனங்களில், ஏற்கனவே மக்கள் வெளியீடாக 1987 இல் வெளிவந்த நூலுக்கு இப்பொழுது 2024இல் விருது கிடைத்திருக்கின்றது என்கின்ற ஒரு கருத்து முன் வைக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கருத்தை முன்வைத்தவர்களில் ஒருவரான ரியாஸ் குரானா அவர்கள் டிசம்பர் 22 அன்று அவரது முகநூலில் இட்ட பதிவொன்றில் “அறமற்ற குளறுபடியான சாகித்திய விருது” என்கின்ற தொடர்தலைப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
//அறமற்ற குளறுபடியான சாஹித்திய விருது
0000000000000000000000000000000000000000000
ஆ. இரா.வேங்கடாசலபதி அவர்களின் ‘ திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ என்ற நூலுக்கு சாஹித்திய விருது கிடைத்திருக்கும் செய்தி முகநூலெங்கும் பரபரப்பாக இருந்தது. ஆனால், எனக்கு உடனடியாக வாழ்த்துச் சொல்லத் தோன்றவில்லை. ஏதோவொரு நினைவு மனதை தொந்தரவு செய்துகொண்டே இருந்தது.
புனைவல்லாத ஆய்வெழுத்து நூலுக்கு சாஹித்ய விருது கிடைத்திருப்பது ஒரு உடைப்பு என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர். எனக்கு எப்போதும் ஈர்ப்பான ஒரு விமர்சன ஆய்வாளராக வேங்கடாசலபதி இருந்ததில்லை. அவர் காலச்சுவடு போன்ற பிற்போக்கு இலக்கிய நிறுவனங்களோடு இணைந்து செயல்படுவதால் அது உருவானதல்ல. அவரின் எழுத்துக்கள் எனது வாசிப்பு எல்லைக்குள் நுழைந்து ஈர்க்கவில்லை என்பதுதான் விசயமே.
சரி இப்போது மனம் தொந்தரவு செய்த காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். இந்த நூல் உண்மையில் இப்போது காலச்சுவட்டினால் வெளியிடப்பட்டதல்ல. முதன் முதலில் ‘மக்கள் வெளியீடு” பதிப்பகத்தினால் 1987ம் ஆண்டு வெளிவந்த நூல். அந்த நூலுக்கு 2024ம் ஆண்டிற்கான சாஹித்ய விருது கொடுத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
பழைய பொருட்களை எடுத்து டிங்கரிங் செய்து புதியதாகக் காட்டிக்கொள்வதும் அதற்கு விருதை எதிர்பார்த்து செயல்படுவதும் அறமற்றது. காலச்சுவடு போன்ற பிற்போக்கு இலக்கிய அமைப்புக்களுக்கு இது குறித்து எந்தப் பிரக்ஞையும் இருக்காது என்பது வேறு விசயம். அவர்களோடு இணைந்து செயல்படுபவர்களுக்குக் கூட அறமில்லாதிருப்பது ஆச்சரியமில்லை.//
இந்தப் பதிவில் சொல்லப்படுகின்ற //இந்த நூல் உண்மையில் இப்போது காலச்சுவட்டினால் வெளியிடப்பட்டதல்ல. முதன் முதலில் ‘மக்கள் வெளியீடு” பதிப்பகத்தினால் 1987ம் ஆண்டு வெளிவந்த நூல். அந்த நூலுக்கு 2024ம் ஆண்டிற்கான சாஹித்ய விருது கொடுத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.// என்கிற கருத்தினை எடுத்து ஆராயவேண்டியிருக்கின்றது. இந்தப் பதிவினை நான் விரும்பித் தொடர்ந்து (Following Facebook Profile) இல் இருக்கின்ற மதிப்புக்குரிய இந்திரன் ராஜேந்திரன் அவர்களும் பகிர்ந்திருந்ததால் அது உடனே எனது பார்வைக்கும் வந்துசேர்ந்திருந்தது.
உண்மையில் இந்தப் பதிவை எழுதியவர்,
- இந்த இரண்டு நூல்களையுமோ அல்லது இந்த ரெண்டு நூலில் ஒன்றையேனுமோ படிக்காமல் இருந்திருக்க வேண்டும் அல்லது
- தாங்கள் எழுதிய முகநூல் பதிவை வாசிப்பவர்கள் இந்த நூல்களை படிக்காமலே இருப்பார்கள்; தாங்கள் சொல்வதையெல்லாம் நம்பி லைக் அடித்துக் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள் என்கின்ற அசாத்திய நம்பிக்கை / அசட்டுத் துணிச்சல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் இந்த இரண்டு நூல்களையும் ஒப்புநோக்கிப் பார்த்தால் இவை இரண்டும் தம்மிடையே தொடர்ச்சியைக் கொண்டுள்ள, முதல்நூல் குறித்த ஆய்வின் வளர்ச்சியாக இரண்டாம் நூல் அமைந்திருக்கின்ற தன்மையுள்ள, அதேநேரத்தின் ஒரே விடயத்தைப் பற்றிய இருவேறு நூல்களாகக் கொள்ளப்படவேண்டியவை என்பது உறுதியாகும்.
மக்கள் வெளியீடாக 1987 மார்ச் மாதம் வெளிவந்த “வ உ சி யின் திருநெல்வேலி எழுச்சியும்” என்கின்ற முதல் நூல் 98 பக்கங்கள் கொண்ட ஒரு பிரசுரமாக வெளிவந்திருந்தது. இந்த நூலை எழுதிய ஆ. இரா. வேங்கடாசலபதி 1967 இல் பிறந்தவர் என்று “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” நூலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது; அதன் அடிப்படையில் அவர் தனது 20 வது வயதில் அல்லது 20 களின் தொடக்கத்தில் எழுதிய ஒரு சிறு நூலாக “வ.உ.சி.யும் திருநெல்வேலி எழுச்சியும்” என்கிற முதல்நூல் அமைந்த போதும் அது முக்கியமான ஓர் ஆய்வாக அமைந்திருந்தது.
ஆனால் இந்த நூலையும் தற்பொழுது வெளிவந்து இருக்கின்ற “திருநெல்வேலி வளர்ச்சியும் வ.உ.சி.யும் 1908” என்கின்ற நூலையும் ஒப்பு நோக்கினால்;
- முதலாவது நூல் 98 பக்கங்களுடன் மட்டுமே வெளிவந்திருக்கின்றது.
- அதன் பின்னர் 2022 பிப்ரவரியில் வெளி வந்திருக்கின்ற நூல்; அதாவது சாகித்திய அகடமி விருது வென்றிருக்கின்ற “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” என்கின்ற நூல் மொத்தமாக 253 பக்கங்களைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது.
- இதனை ஓர் எளிய கணிதமாக முதல் புத்தகம் 98 பக்கங்களுடன் வெளியானது; இரண்டாவது புத்தகம் 253 பக்கங்களுடன் வெளியானது. ஆகவே இரண்டு புத்தகங்களுமிடையிலான பக்க அளவிலான வித்தியாசத்தை மாத்திரம் (B-A அதாவது 253-98) என்று கணக்கிட்டு வெறுமே 155 பக்கங்களை மட்டுமே புதிதாக எழுதிவிட்டு அதனைப் புதுப் பதிப்பாகக் கூற்கின்றனர் என்று அடுத்த வாதத்துக்குத் தாவுகின்றனர்.
- இங்கே என்ன பிரச்சனை என்றால் இந்த இரண்டு புத்தகங்களையும் ஒப்புநோக்கி வாசித்தால்; “தனது இருபதுகளின் தொடக்கத்தில் ஓர் ஆய்வாளராகப் பயணத்தைத் தொடங்கிய ஒருவர் தற்பொழுது தனது 50 களின் பிற்பகுதியில், தனது இத்தனை கால ஆய்வுகளில் இருந்தும், குறிப்பாக குறித்த விடயங்கள் தொடர்பான ஆய்வுகளில் பெற்றுக் கொண்ட செறிவையும் செழுமையையும், சேகரித்துக் கொண்ட தகவல்களையும் தரவுகளையும் முன்வைத்துக்கொண்டு தனது 20களின் தொடக்கத்தில், தான் முதன் முதலிலோ அல்லது தொடக்க காலங்களிலோ எழுதிய செய்த ஆய்வுகளையே இன்னும் இன்னும் நுட்பமாகவும் நுணுக்கமாகவும் உள்வாங்கிக்கொண்டு, தான் ஏற்கனவே செய்த ஒரு சிறு பிரசுரத்தை, மீள எழுதிக் கொண்டு வந்த இன்னொரு புதிய புத்தகமாகவே இந்த திருநெல்வேலி எழுச்சியும் வ உ சி 1908 என்கின்ற புத்தகத்தை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
“திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” என்னும் நூலுக்கு 2024ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்திருப்பது குறித்து இந்த விமர்சனங்களையோ அல்லது விமர்சனம் என்ற பெயரில் செய்யப்படுகின்ற புரட்டுக்களையோ பகிர்ந்து கொள்பவர்கள் ; அல்லது இந்த விமர்சனங்களைக் கண்டு பயத்தின் காரணமாக மௌனம் காப்பவர்கள்; அல்லது கருத்துத் தெரிவிப்பவர்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது யாதென்றால் “இந்த இரண்டு நூல்களையும் முதலில் நீங்கள் ஒப்புநோக்கி வாசிக்க வேண்டும்; அதன் பின்னர் உங்கள் கருத்துக்களை முன்வைத்துத் திறந்த உடையாடல்களைத் தொடக்கவேண்டும். அப்படித் தொடங்கும் உரையாடல்களை காத்திரமான அடைவுகளை நோக்கி நகரும்.
பொதியவெற்பனின் முகநூல் பதிவு
சாகித்திய அகாதமி விருதுகள் மீதான சர்ச்சை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்ற சலபதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எல்லாவகையிலும் தகுதியானவரும் பொருத்தமானவரும் அவர்…
– கால.சுப்பிரமணியம்
கீழே வரும் பழைய பதிவில் சில அநுமானங்களுடன் சில கருத்துகள் கூறப்பட்டுள்ளன. இன்று அதில் கொள்வன கொள்க. தள்ளுவன தள்ளுக.
ஒரு காலத்தில் புனைவற்ற நூல்களுக்கே (அவ்வளவாகத் தகுதியற்ற கல்வியாளர்கள், அதிகாரிகளுக்கே) அதிகமாக சாகித்ய அகாதமி விருதுகள் பெற்றுத் தரப்பட்டுள்ளன. பிறகு புனைவுகளுக்கு மட்டுமே என்றாகிவிட்டது…
அரசியல் வரலாற்று நூல்களுக்காக சர்ச்சிலுக்கும் தத்துவாதி ரஸ்ஸலுக்கும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஆண்டு ஒரு வரலாற்று ஆய்வுநூலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்து விட்டதே என்று விவாதிக்கத் தேவையில்லை.
இலக்கியம் சார்ந்த பதிப்பியல், அச்சுப்பண்பாடு, அதன் சமூக வரலாற்றுப் பின்னணிகளை ஆராய்ந்த ஆய்வாளர் என்ற தகுதிபெற்றவர்தான் வேங்கடாசலபதி – அதுவும் இன்று தமிழ்மொழியின் இவ்வகைச் சிறப்புகளை ஆங்கிலத்தில் எழுதி இந்திய/சர்வதேச ஆய்வுலகில் ஒரேயொரு (தமிழ்நாட்டில் வசிக்கும்) ஆய்வறிஞராக விளங்குபவர் சலபதி மட்டும்தான். In Those Days There Was No Coffee, Province of the Book, புதுமைப்பித்தன், பாரதி, வஉசி பற்றிய பதிப்புகளும் ஆய்வுகளும், Swadeshi Steam போன்றவை இன்றுள்ள மேம்போக்கான பெரும்பாலான வாசகர்களுக்கு எந்தளவுக்கு எட்டியிருக்கும் என்று சொல்லமுடியாது…
சாகித்ய விருது காலங்காலமான சாகித்ய அகாதமி தமிழ் விருதுகளின் (இன்றைய யுவபுரஸ்கார், மொழிபெயர்ப்பு விருதுகளையும் சேர்த்து) இலட்சணங்கள் சிலமுறையாவது விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது சிற்பியின் பதவிக்காலம் முடிந்து ஓரிரு மாதங்களுக்கு முன்பே மாலன் செயலுக்கு வந்துவிட்டார் என்று(தவறான ஒரு) தகவல். சிவசங்கரி, கலாப்ரியா போன்ற அவருக்கு நெருக்கமானவர்கள் தேர்வுக்குழுக்களில் இடம்பெறுவது தவிர்க்கமுடியாததே.
சில மாதங்களுக்கு முன் மாலன் “வாங்கிய” மொழிபெயர்ப்பு விருதுக் கமிட்டியில் சிவசங்கரி இருந்தார். இந்த ஆண்டு விருது இந்துமதிக்கோ சிவசங்கரிக்கோதான் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் மேனாள் ஆட்சிப்பணித்துறையில் இருந்தவர்கள் இதையும் மீறி உள்ளே நுழையக்கூடியவர்கள் போலிருக்கிறது. (யுவபுரஸ்காரும் இவருக்கு வேண்டியவருக்குத்தான் போனது தெரிந்ததே.)
இராஜேந்திரன் கல்வெட்டு வரலாற்றுத் தொகுப்பு நூல்கள் மூலம்தான் முதலில் அறிமுகமானார். கல்வெட்டியல் அறிஞர் ஈரோடு புலவர் இராசு, அந்த நூல்களில் ஆங்கிலச்சொற்களின் மூலத் தமிழ்ச்சொற்களைக்கூட அறியாமல் தவறாக அவர் பயன்படுத்தியிருப்பது முதல் முறையியலற்றிருப்பது, தகவல் பிழைகள் வரை பல விவரங்ளை விரிவான கட்டுரைகளாகவே எழுதிச் சர்ச்சையைக் கிளப்பினார். ஆனால் எடுபடவில்லை போலும். நான் அந்த கல்வெட்டுத் தொகுதிகளைப் புரட்டிப் பார்த்திருக்கிறேன். பின்புதான் அவர் வரலாற்று ஆய்வாளராகவும் நாவலாசிரியராகவும் தன் பதாகைகளைப் பறக்கவிட்டார். (பெரும்பாலும் பெரும்பதவியிலுள்ள படைப்பாளிகள் தம் நாவல் புத்தக அட்டைகளில் டாக்டர் பட்டத்தையோ அதிகாரப்பணிப் பட்டத்தையோ போட்டதில்லை. நல்லவேளை பல நீதிபதிகள் கம்பனோடு நின்றுவிட்டார்கள் – எஸ்.மகராஜன் தவிர. இதற்கு முன் பல ஆட்சித்துறை அதிகாரிகள் நாவலாசிரியர்களாகவோ நூலாசிரியர்களாகவோ இருந்திருக்கிறார். முன்பு கா.திரவியம், ? சுப்பையா… இன்று திலகவதி, இறையன்பு, பாலகிருஷ்ணன், செங்கதிர், ராம்குமார்…இத்யாதி…)
இப்போதும் இவ்வாண்டு விருதுபெற்றவரை, சிலர் நாவலாசிரியராக ஏற்காவிட்டாலும் வரலாற்றாளராக வாழ்த்துரை கூறுவதைப் பார்க்கலாம். பத்திரிகைகளிலும் அவர் மிகுந்த தொடர்புள்ளவர் போலிருக்கிறது. சிலபல நிகழ்வுகள் அதைக் காட்டின. சென்றவார குங்குமம் அல்லது விகடன் இதழில் இரண்டாம் முறையாக பாளையக்காரர்கள் குறிப்பாக கட்டபொம்மு பற்றிய தன் புதிய கண்டுபிடிப்புகளை பேட்டியாகவோ கட்டுரையாகவோ தந்திருப்பதைப் படித்தேன். முன்பே ஒரு மேனாள் ஐஏஎஸ் அதிகாரி கட்டபொம்மு நாயக் என்ற பெயரில் ஆவணக்காப்பகத்தில் நூற்றுக்கணக்கில் உள்ள கட்டபொம்மு தூக்கிலிடப்பட்ட காலத்தில் நடந்த அரசு கடிதப்போக்குவரத்துக்களில் முக்கியமானவற்றைத் தேர்ந்து மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். சிறப்பான நூல் அது. பாவம், அது வந்ததுகூட யாருக்கும் தெரியாது. நான் சத்தி நூலகத்தில் தற்செயலாப் பார்த்து பிரதியெடுத்து வைத்திருக்கிறேன். (ஆவணக்காப்பகத்தில் கட்டபொம்மு தொடர்பான ஆவணங்களை லேமினேட் செய்து கெட்டி அட்டையுடன் கூடிய ஒரு பெரிய கோப்பு இருக்கிறது. அங்கு முதன்மையாக உள்ள நண்பர் அப்பகுதிக்குப் பொறுப்பில் இருந்தபோது காட்டினார். விரைவில் அவை டிஜிடல் செய்யப்பட்டு பொது இணையவெளிக்கு வரும் என்றும் கூறினார். நான் கோடிக்கணக்காகக் குவித்துவைக்கப்பட்டிருக்கும் புத்தக ரேக்குகளில் இருந்து அபூர்வமான கட்டபொம்மு புத்தகங்களை அவருக்கு எடுத்துக்காட்டினேன். ஜெராக்சும் செய்துகொண்டேன்.)
நிற்க. இராஜேந்திரனுக்கு விருது வழங்கியதில் சில நியாயங்கள் இருக்கின்றன. கடைசிச்சுற்றில் பல தெரியாத முகங்களோடு அல்லது அற்ப நூல்களோடு பிரபலமான சிவசங்கரியும் இருந்தாரே? (சிவசங்கரியும் ஒருவிதத்தில் தகுதியுடையவரே என்று தமிழ்விக்கி சில காரணங்களோடு கூறுகிறது)
எங்கோ ஆரம்பித்து எங்கோ போய்விட்டது….
23/12/2022
கொள்வன கொண்டு, தள்ளுவன தள்ளி•••
விவாதிக்குமுகமாகவே இப்பகிர்வு
வஉசி குறித்த சலபதி நூலுக்கு சாகித்திய அகாதமி
விருது விதிமீறலன்று ; இன்னும் சலபதி பங்களிப்பின்
வகிபாகச் சித்திரிப்பு என்பன வரை முத்துநாகுத் தித்திருக்கு , இந்திரசால நபுஞ்சகக் கோபக் குறுக்குச்சால்களுக்கான ஆதார முறைமை மறுப்பு என்பது வரை சரியே.
அதற்கப்பால்பதிப்பியல் என வருகையில் சலபதி பதிப்பரசியலையும் மடிபறித்துக் களவாடிய காசு கம்பெனி கூட்டுக் களவாணித்தனங்களையும் குறித்தெலாம் புறந்தள்ளி அனைத்துலக ஆய்வுலகின் ஒரே ஆய்வறிஞர் – உலகளாவிய ‘ஒன் அண் ஒன்லி யுனீக்’ சலபதி என்பதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது. எனக்குத் தெரிந்த அளவில் என்னாமல் கநாசுத்தனமாக ரசனையதிகாரக் கூற்றே. அனைத்துக்குந் தாமே அதிகாரி என்ற அகங்கார மமதை வெளிப்பாடே. இப்படித்தான் பதிப்பகம்ன்னா ஒரே ஒரு தரமான பதிப்பகம் தமிழினி என்பதும். கநாசு சோதியிற் கலந்த காலசுவின் புத்தவதார லீலையே.
LikeLike
ரியாஸ் குரானாவின் முகநூல் பதிவு 1
அறமற்ற குழறுபடியான சாஹித்திய விருது
0000000000000000000000000000000000000000000
அ.இரா.வேங்கடாசலபதி அவர்களுகளின் ‘ திருநெல்வேலி எழுச்சியும் வ உ சியும் 1908’ என்ற நூலுக்கு சாஹித்திய விருது கிடைத்திருக்கும் செய்தி முகநூலெங்கும் பரபரப்பாக இருந்தது. ஆனால், எனக்கு உடனடியாக வாழ்த்துச் சொல்லத் தோன்றவில்லை. ஏதோவொரு நினைவு மனதை தொந்தரவு செய்துகொண்டே இருந்தது.
புனைவல்லாத ஆய்வெழுத்து நூலுக்கு சாஹித்ய விருது கிடைத்திருப்பது ஒரு உடைப்பு என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர். எனக்கு எப்போதும் ஈர்ப்பான ஒரு விமர்சன ஆய்வாளராக வேங்கடாசலபதி இருந்ததில்லை. அவர் காலச்சுவடு போன்ற பிற்போக்கு இலக்கிய நிறுவனங்களோடு இணைந்து செயல்படுவதால் அது உருவானதல்ல. அவரின் எழுத்துக்கள் எனது வாசிப்பு எல்லைக்குள் நுழைந்து ஈர்க்கவில்லை என்பதுதான் விசயமே.
சரி இப்போது மனம் தொந்தரவு செய்த காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். இந்த நூல் உண்மையில் இப்போது காலச்சுவட்டினால் வெளியிடப்பட்டதல்ல. முதன் முதலில் ‘மக்கள் வெளியீடு” பதிப்பகத்தினால் 1987ம் ஆண்டு வெளிவந்த நூல். அந்த நூலுக்கு 2024ம் ஆண்டிற்கான சாஹித்ய விருது கொடுத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
பழைய பொருட்களை எடுத்து டிங்கரிங் செய்து புதியதாகக் காட்டிக்கொள்வதும் அதற்கு விருதை எதிர்பார்த்து செயல்படுவதும் அறமற்றது. காலச்சுவடு போன்ற பிற்போக்கு இலக்கிய அமைப்புக்களுக்கு இது குறித்து எந்தப் பிரக்ஞையும் இருக்காது என்பது வேறு விசயம். அவர்களோடு இணைந்து செயல்படுபவர்களுக்குக் கூட அறமில்லாதிருப்பது ஆச்சரியமில்லை.
போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள். இலங்கையிலும் இந்த கள்ளப்பட்டத்தை கொண்டிருக்கும் கலாநிதிகளைக் கண்டு சோர்ந்துபோயிருக்கும் போது, இலக்கியத்திலும் இந்த மோசடிப்பேர்வழிகளை சந்திக்கும்போது வெறுப்பாகவே உள்ளது.
இரண்டு நூல்களின் அட்டைப் படங்களையும் இங்கே தருகிறேன். பழைய நூலும் கைவசமுண்டு என்பதை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
LikeLike