சுப்பாராவ் செய்யும் அறிமுகங்கள்

புத்தகக் கண்காட்சி குறித்தும், புத்தக வெளியீடுகள் குறித்ததுமான பதிவுகள் நிறைந்திருக்கின்றபோது அதனுடன் தொடர்பான வாசிப்புப் பழக்கம்  குறித்தும், வாசிப்புப் பழக்கத்தில் முக்கிய பங்காற்றும் நூலகங்கள், நூலகர்கள் குறித்தும் பேசவேண்டியிருக்கின்றது. புத்தக கண்காட்சி நடக்கின்ற காலப்பகுதியில் தற்செயலாகவோ / பிரக்ஞை பூர்வமாகவோ ஜனவரி மாத உயிர்மை இதழில் ச. சுப்பாராவ் எழுதியிருக்கின்ற Gina Sheridan என்ற நூலகர், எழுதிய  I work at a public library என்ற நூல் குறித்த அறிமுகம் மிகவும் சுவாரசியமாக உள்ளது.  சுப்பாராவ் நூல்கள் குறித்து எழுதும் அறிமுகங்கள் எப்போதும் சுவாரசியமானவை தான் என்றாலும், இந்தக் கட்டுரை இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்துகின்றது.  கட்டுரையை வாசித்த பாதிப்பில், நான் இருக்கின்ற மார்க்கம் நகர நூலகத்தில் Gina Sheridan எழுதியுள்ள I Work At A Public Library: A Collection of Crazy Stories from the Stacks, Check These Out: One Librarian’s Catalog of the 200 Coolest, Best, and Most Important Books You’ll Ever Read ஆகிய இரண்டு நூல்களையும் பதிவுசெய்துவிட்டு இந்தக் குறிப்பை எழுதுகின்றேன். 

ஒரு நல்ல நூல் இன்னொரு நூலை நோக்கி எம்மை அழைத்துச் செல்லும் என்பார்கள், சுப்பாராவ் எழுதும் கட்டுரைகள் நிறைய நல்ல நூல்களுக்கு அழைத்துச் சென்றுகொண்டே இருக்கின்றன.  அவருடைய ”சில இடங்கள், சில புத்தகங்கள்” என்ற நூலை வாசித்த பாதிப்பில் Travelogue என்ற பிரிப்பில் வாசிக்க விருப்பமுற்று வாசித்த Under the Sun என்கிற Bruce Chatwin இன் தேர்வுசெய்யப்பட்ட கடிதத் தொகுப்பு நல்லதோர் வாசிப்பு அனுபவமாக இருந்தது. 

அதே தேடலில் வாசித்த Ruwanamali Samarakoon-Amunugama Milk, Spice & Curry Leaves – Hill Country Recipes from the heard of Sri Lanka என்கிற நூல் மிகச் சிறப்பான வடிவமைப்புடன் இருந்தபோதும் , அரசியல் பிரக்ஞை இல்லாமல் உணவுப் பழக்கம் குறித்து பண்டமாக்கல் நோக்குடன் எழுதப்பட்ட, மோசமான ஒரு நூலாக அமைந்ததையும் குறிப்பிடவே வேண்டும்.  கடந்த ஒன்றரை ஆண்டாகத்தான் ச. சுப்பாராவின் புத்தக அறிமுகங்கள், கட்டுரைகளை தேடித்தேடி வாசித்து வருகின்றேன்; தமிழ்ச்சூழலில் சுப்பாராவ் வாசிப்புப் பழக்கத்திற்கு ஆற்றுகின்ற பணி மிகப்பெரிது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: